என்னதான் நடக்கும் நடக்கட்டுமே-கூட்டு
எவரோடு எவரும் சேரட்டுமே
தன்னாலே வெளிவரும் மயங்காதே-ஓட்டு
தாக்கார்க்கு அளித்திடத் தயங்காதே
சொன்னாலும் அனைத்தையும் நம்பாதே-பின்னர்
சோகத்தில் ஐந்தாண்டு வெம்பாதே
முன்னாலே தெளிவாக சிந்திப்பீர்-தேர்தல்
முடிந்தபின்னர் யாரைத்தான் நிந்திப்பீர்!
காசுதனை வாங்கிட்டுப் போடாதீர்!-அதனால்
காலமெல்லாம் வறுமையிலே வாடாதீர்
மாசுதனை பழியாக ஏற்காதீர் –என்றும்
மறவாதீர்! வாக்குதனை விற்காதீர்
பேசுவது வாய்வார்த்தை சேவையாகும்-ஆனால்
பதவிவரின் பணமொன்றே தேவையாகும்
கூசுவது துளிகூட இல்லைநாக்கில்-பணத்தைக்
கோடிகளில் காண்பதுதான் உண்மைநோக்கில்
புலவர் சா இராமாநுசம்
எவரோடு எவரும் சேரட்டுமே
தன்னாலே வெளிவரும் மயங்காதே-ஓட்டு
தாக்கார்க்கு அளித்திடத் தயங்காதே
சொன்னாலும் அனைத்தையும் நம்பாதே-பின்னர்
சோகத்தில் ஐந்தாண்டு வெம்பாதே
முன்னாலே தெளிவாக சிந்திப்பீர்-தேர்தல்
முடிந்தபின்னர் யாரைத்தான் நிந்திப்பீர்!
காசுதனை வாங்கிட்டுப் போடாதீர்!-அதனால்
காலமெல்லாம் வறுமையிலே வாடாதீர்
மாசுதனை பழியாக ஏற்காதீர் –என்றும்
மறவாதீர்! வாக்குதனை விற்காதீர்
பேசுவது வாய்வார்த்தை சேவையாகும்-ஆனால்
பதவிவரின் பணமொன்றே தேவையாகும்
கூசுவது துளிகூட இல்லைநாக்கில்-பணத்தைக்
கோடிகளில் காண்பதுதான் உண்மைநோக்கில்
புலவர் சா இராமாநுசம்
ஆஹா ...!!!
ReplyDeleteஓட்டுபற்றிய உமது கவிதை
அருமை ஐயா....!
வாழ்த்துக்கள் ஐயா....
மிக்க நன்றி
Deleteஅய்யா வணக்கம்.
ReplyDelete“என்னதான் நடக்கும் நடக்கட்டுமே?” திரைப்படப் பாடலுடன், கம்பனின் “பேசுவது மானம் இடை பேணுவது காமம்” எனும் புகழ்பெற்ற வரிகளையும் கலந்து கலக்கிட்டீங்க. த.ம.1
மிக்க நன்றி
Deleteடாஸ்மாக்கை பூட்ட நினைப்பவருக்கே என் வோட்டு :)
ReplyDeleteமிக்க நன்றி
Deleteஇன்றைய நிலையில் யாருக்கு வாக்களித்தாலும் ஐந்தைந்தாண்டுகள் வெம்பித்தான் ஆகவேண்டும்!
ReplyDeleteமிக்க நன்றி
Deleteஅப்படிச் சொல்லுங்க ஐயா.....
ReplyDeleteமிக்க நன்றி
Deleteஆஹா அருமை ஐயா டி.எம்.எஸ். இருந்திருந்தால் பாடி மகிழ்ந்திருப்பார் வாழ்த்துகள்
ReplyDeleteதமிழ் மணம் இரண்டாவது
மிக்க நன்றி
Deleteஓட்டு அரசியலை மட்டுமே குறி வைக்கும் கொள்கை அற்ற கூட்டனிகள்
ReplyDeleteஎன்ன நடக்கப் போகிறது என்று பார்ப்போம் ஐயா
மிக்க நன்றி
Deleteவணக்கம்
ReplyDeleteஐயா
காலம் உணர்ந்து கவிதை வடித்த விதம் கண்டு மகிழ்கிறேன் த.ம 8
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
மிக்க நன்றி
Deleteஅருமை அய்யா.....
ReplyDeleteகூட்டு எப்படி இருந்தாலும்
ReplyDeleteநம் ஓட்டு
ஊழலுக்கு வேட்டு வைக்கட்டும்.....
நல்ல கவிதை ஐயா...
வணக்கம் ஐயா.
ReplyDeleteஉங்கள் தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளேன்
http://thaenmaduratamil.blogspot.com/2016/03/blog-post.html
நன்றி