உறவுகளே!
பெண்கள் தங்கள் கண்களுக்கு மை தீட்டிக் கொள்வதிலே உள்ள ஒரு நுட்பம் அவர்களுக்கே தெரியாத ஒன்றை வள்ளுவர் தன் குறளில் எப்படி விளக்குகிறார் பாருங்கள்!
கண்களுக்கு மை தீட்ட பெண்கள் ஒரு குச்சியில்(கோல்) மையைக் குழைத்து, தன் கண்களுக்கு அருகில் கொண்டு சென்று கண்ணை மூடி மை தீட்டுவார்கள் அதுபோது கோல் அவர்கள் கண்ணுக்குத் தெரிவதில்லை அல்லவா! இதனை.....
பிரிந்து சென்ற தலைவன் குறித்த காலத்தில் வரவில்லை தலைவிக்கு கடுங்கோபம்! தோழியிடம் புலம்புகிறாள்! வரட்டும்! பேசமாட்டேன் விரும்பியல்ல, திரும்பிக் கூட பார்க மாட்டேன் என்பதுபோல, இன்னும் பல!
தோழி ஏதும் கூறாமல் தனக்குள் சிரித்துக் கொள்கிறாள்! தலைவன் வருகிறான் தேர்வரும் சத்தம் தெருவில் கேட்கிறது! தலைவியிடம் பரபரப்பு! வாசலுக்கு ஓடி வருகிறாள்!தலைவன் இறங்குகிறான் கருத்து சற்று உடல் மெலிந்து காணப்பட்ட அவனைக் கண்டு தலைவி உருகி உருகி ஓடி ஓடி உபசரிக்கிறாள்! தலைவன் ஓய்வெடுக்க , அனைத்தையும் கண்டு கொண்டிருந்த தோழி தலைவியைப் பார்த்து ஏளனமாக சிரிக்க வெக்கப் பட்ட தலைவி சொன்ன பதில்!! வள்ளுவர் குறளில் ----!
தொடக்கத்தில் நான் குறிப்பிட்ட மை பற்றிய செய்திக்கு வருவோம்
குச்சியில் மையைக் குழைத் கண்ணுக்கு அருகில் கொண்டு வரும் வரை தெரியும் குச்சி ,கண்ணை மூடி மையைத் தீட்டும் போது தெரிவதில்லை!
அதுபோல , தலைவன் பிரிந்த ஏற்பட்ட வருத்தம் கோபம் எல்லாம் அவனை நேரில் கண்டதும் மறைந்து விட்டதே என்பதாம்
எழுதுங்கால் கோல்காணாக் கண்ணேபோல் கொண்கண்
பழிகாணேன் கண்ட விடத்து- குறள்
பல பெண்களே அறியாத , நினைக்காத நுட்பத்தை வளுவப் பெருந்தகை , எடுத்து கையாண்டுள்ள சிறப்பு வியக்கத் தக்கதல்லவா! மேலும்...
உறவுகளே!
நான் எழுதிய கருத்தை உள்ளடக்கிய குறள்! இதோ, மற்றொன்று!
தோழி, கேட்பாயாக !தலைவனைக் நேரில் காணும் போது, அவர் செய்த தவறுகள் எதுவுமே தெரிவதில்லை! காணாத போது தவறுகளத்தவிர பிற தெரிவதில்லையே! என் செய்வேன் என்று புலம்புகிறாள்!
காணுங்கால் காணேன் தவறாய காணாக்கால்
காணேன் தவறல் லவை,- குறள்
புலவர் சா இராமாநுசம்

விளக்கம் அருமை ஐயா
ReplyDeleteநிழலின் அருமை வெயிலில் தெரியும் என்பது போல...
தமிழ் மணம் 1
அப்பவே வள்ளுவர் இப்படி எல்லாம் யோசித்து இருக்காரே ,சபாஷ் :)
ReplyDeleteஅருமை. ரசித்தேன்.
ReplyDeleteஅருமையான பதிவு ஐயா
ReplyDeleteவரிகள் விளக்கம் அருமையோ அருமை
அருமையான விளக்கம் ஐயா. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.
ReplyDeleteஅற்புதமான எளிமையான விளக்கம்
ReplyDeleteதொடர்ந்து எழுத வேண்டுகிறோம்
வாழ்த்துக்களுடன்
தங்களின் ரசனையும் விளக்கமும் அருமை ஐயா. நன்றி.
ReplyDeleteரசித்தேன் ஐயா...
ReplyDelete