Sunday, February 7, 2016

நான் சீனா சென்று கண்டுவந்ததைப் பற்றி எழுதிய கவிதை!




நான் சீனா சென்று கண்டுவந்ததைப் பற்றி எழுதிய கவிதை!
குப்பையிலா நகரமது சிங்கை என்றே-முன்னர்
கூறுவதைக் நாம்மவரும் கேட்டோம் நன்றே
செப்பறிய அந்நிலையே சீனா எங்கும்-நான்
சென்றபோது கண்டேனே! மகிழ்ச்சி பொங்கும்
தப்பியொரு இடத்தினிலும் குப்பை யில்லை-அவர்
தனிமனித ஒழுக்கத்தில் கண்டார் எல்லை
தொப்பையிலா மக்கள்தான் அங்கே முற்றும் -காண
தோன்றுகின்றார் !கட்டான உடலைப் பெற்றும்
விண்முட்டும் பலமாடி அடுக்கே எங்கும்-நீண்ட
வீதிகளின் இருமருங்கும் பெலிவாய் ஓங்கும்
கண்முட்ட தேடினாலும் குடிசை ஒன்றும்-அங்கே
காணவில்லை! உண்மையிது! வாழ்க!! என்றும்
பண்பட்ட அவர்வாழ்வில் பகட்டு யில்லை- ஏழை
பணகாரப் பாகுபாடு பேதம் இல்லை
வெண்பட்டு மென்மையென சாலை விரியும் –மின்
விளக்குகளோ தங்கமென ஒளியில் எரியும்
புலவர் சா இராமாநுசம்

10 comments :

  1. # ஏழை பணகாரப் பாகுபாடு பேதம் இல்லை#
    இப்போது அங்கேயும் பணக்காரர்கள் பெருகி வருவதாக தகவல்கள் வருகின்றன !

    ReplyDelete
  2. அனுபவக்கவிதையை அதிகம் ரசித்தோம். நன்றி.

    ReplyDelete
  3. நல்லவையே உங்கள் பார்வையில் படும் போலும்

    ReplyDelete
  4. அருமை புலவர் ஐயா....தங்கள் அனுபவக் கவிதை..

    ReplyDelete
  5. பொருத்தமான கவிதை அழகு ஐயா
    தமிழ் மணம் 2

    ReplyDelete
  6. அழகு. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  7. வணக்கம்
    ஐயா
    அழகிய வரிகள் இரசித்தேன்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...