Monday, February 29, 2016

முகநூல் பதிவுகள்!



முப்பால் என்று அழைக்கப்படும் , திருக்குறளில் காமத்துப்பால் பற்றி சில கருத்து வேறுபாடுகள் ,அதாவது காமம் என்றாலே அது ஒரு வெறுக்கத் தக்க சொல் என்பது போல பேசுவதுண்டு! ஆனால் வள்ளுவர் காதலைத்தான் காமம் என்று குறிப்பிடுகிறார் அவர் வாழ்ந்த காலத்தில் அதுதான் வழக் காறாக இருந்தன! அவர் காதலைப்பற்றி, அதன் உணர்வுகளை , எவ்வளவு நுட்பமாக நாகரிகமாக நயம்பட எழுதியுள்ளதை படிப் பவர் பாராட்டாமல் இருக்க இயலாது . நாளை முதல் அவை பற்றி ஆய்வோம்!

உறவுகளே!
வணக்கம்! நேற்று, நான் வள்ளுவரின் காமத்துப்பால் பற்றி எழுதியிருந்தேன்!அதனை மு.வ போன்ற அறிஞர்கள் இன்பத்துப்பால் என்று குறிப்பிடுகின்றார்களே ,என உறவுகள் சிலர் கூறியுள்ளனர் ! எப்படி அழைத்தாலும் பொருள் ஒன்றுதானே! சொல்வதின் நோக்கம் காதலைத்தானே! அதாவது, போத்திக் கொண்டு படுத்தாலும், படுத்துக் கொண்டு போத்தினாலும் நோக்கம் போத்திக் கொள்ள வேண்டும் என்பதுதானே! 

   புலவர்  சா  இராமாநுசம்

10 comments :

  1. அழகாகச் சொல்லியுள்ளீர்கள். திருக்குறளின் ஒரு அங்கமான காமத்துப்பாலை மட்டும் நாம் விலக்கிவைத்து அதன் அருமை அறியாமல் இருக்கிறோமே என்ற ஆதங்கம் எனக்கும் உண்டு. தங்களுடைய அற்புதமான விளக்கத்தை அறிய ஆவலுடன் காத்திருக்கிறேன் ஐயா.

    ReplyDelete
  2. அருமையான விளக்கம் ஐயா!

    ReplyDelete
  3. விளக்கவுரை நன்று ஐயா
    தமிழ் மணம் முதலாவது.

    ReplyDelete
  4. பார்த்தீர்களா ,காமத்துப் பால் என்றவுடன் பழமொழி கூட போர்த்திக் கொண்டு படுப்பது என்றே பொருத்தமா வருதே :)

    ReplyDelete
  5. தகவலுக்கு நன்றி! அய்யா....

    ReplyDelete
  6. சிறப்பான விளக்கம். தொடர்ந்து இங்கேயும் பதிவிடுங்கள் புலவர் ஐயா.

    ReplyDelete
  7. சிறப்பான விளக்கவுரை அன்பரே...

    ReplyDelete
  8. நல்லதொரு விளக்கம்.

    ReplyDelete
  9. எப்படிக்கூறினாலும் ஒன்றுதான் என்ற தங்களின் விளக்கம் பொருத்தமானதே. நன்றி.

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...