Tuesday, February 23, 2016

மாற்றுத் திறனாளிகளுக்காக மனம் வருந்தி எழுதிய கவிதை!




மாற்றுத் திறனாளிகளுக்காக, மனம் வருந்தி எழுதிய கவிதை!

கண்ணில்லார் வாழ்வதே மிகவும் அரிது –கற்ற
கல்வியிலே பட்டமவர் பெற்றல் பெரிது!
எண்ணிலார் அவ்வகையர் வேலைக் கேட்டும்-இன்று
வீதிக்கு வந்தபின்பும் அந்தோ வாட்டும்!
பண்பில்லா அரசாக இருக்க லாமா-என்ன
பாவமவர் செய்தார்கள்! துயரம் போமா!
கண்ணில்லார் அவரா ! நாமே ஆகும் –கேட்கும்
காதில்லார் அரசென்றால் ? துயரா? போகும்!


புலவர் சா இராமாநுசம்

23 comments:

  1. வரிகளில் வேதனை ஊற்று ஐயா
    தமிழ் மணம் 1

    ReplyDelete
  2. வேதனை தீரும் நாள் வெகு விரைவில் வரட்டும் ஐயா...

    தம +1

    ReplyDelete
  3. பார்வை இழந்தோர் என்றும் பாராமல் போலீஸ் அடித்து விரட்டியது கண்ணிலேயே நிற்கிறது :)

    ReplyDelete
    Replies
    1. நன்றி!நண்பரே தங்கள் தளம் மீண்டும் மதிப்பெண் போடவோ மறுமொழி எழுதவோ இயல வில்லை! கவனிக்க!

      Delete
  4. ஒரு பார்வையற்றவனாய் இந்தக் கவிதையை பாராட்டுவதோடு மட்டுமின்றி, எங்களுக்காக பறிந்து பேசிய உங்கள் பதிவிற்கு நன்றி தெரிவிக்கவும் கடமை பட்டிருக்கிறோம். ம்இக்க நன்றி ஐயா. அருமையானப் பதிவு!!

    ReplyDelete
  5. வணக்கம்
    ஐயா
    வேதனை தரும் வரிகள்பகிர்வுக்கு நன்றி

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  6. கலங்க வைக்கும் வரிகள் ஐயா...

    ReplyDelete
  7. அவர்களின் வேதனை தீரட்டும்.
    த ம 6

    ReplyDelete
  8. ஒளியில்லா கண்களுக்கு பிழைக்க நாதியில்லையோ...

    ReplyDelete
  9. ஒளியில்லா கண்களுக்கு பிழைக்க நாதியில்லையோ...

    ReplyDelete
  10. ஒளியில்லா கண்களுக்கு பிழைக்க நாதியில்லையோ...

    ReplyDelete
  11. மனதை கனக்கவைத்த வரிகள்..

    மாற்றுத்திறனாளி
    மதியிருந்துகெட்டழியும்
    மனிதர்களுக்கு மத்தியில்
    மகா திறமைசாலி...

    ReplyDelete
  12. வேதனை புரிகிறது அய்யா...!

    ReplyDelete
  13. நீங்கள் மதித்துக் கவிதை எழுதுகிறீர்கள், ஆனால் ஆட்சியில் இருப்பவர்களோ காவலில் வைத்து மிதித்துக்கொண்டே சலுகைப் பொறிகளைத் தூவுகிறார்களே அய்யா? த.ம.7

    ReplyDelete
  14. அழியவேண்டிய அவலங்கள்..

    ReplyDelete