உறவுகளே! வணக்கம்!
இன்று, எனை தவிக்க விட்டு, மறைந்த துணைவி , (மருத்துவர் , பிரமீளா
எம்.பி.பி, எஸ், டி.ஜி.ஓ )அவர்களின் பிறந்தநாள் ,ஆகும் அவர் நினைவாக நான் முன்னர் எழுதிய கவிதை------
தன்னலம் காணா தகவுடையாள்-எதிலும்
தனக்கென நற்குணம் மிகவுடையாள்
இன்னவர் இனியவர் பாராமல்-உதவ
எவருக்கும் மறுப்பு கூறாமல்
என்னவள் இவளே செய்திடுவாள்-வரும்
ஏழைக்கே மருந்து தந்திடுவாள்
அன்னவள் மருத்துவ மாமணியே-புகழ்
அறிந்திட இயாலாப் பாவழியே!
புலவர் சா. இராமாநுசம்
காலம் உங்கள் தவிப்பைத் தணிக்கட்டும். உங்கள் துணைவியார் ஆன்மா சாந்தியடையட்டும்.
ReplyDeleteதங்களது துணைவியாரின் ஆன்மா சாந்தியடைய எமது பிரார்த்தனைகள் ஐயா
ReplyDeleteதமிழ் மணம் 1
அன்னையின் ஆன்மா சாந்தியடையட்டும்.
ReplyDeleteத ம 2
மறையாத நினைவுகள்.
ReplyDeleteஆறுதல் கொள்ளுங்கள் ஐயா...
ReplyDeleteஅன்னை இன்றும் இருந்திருந்தால் ,உங்களைப் போன்றே நானும் உளமகிழ்ந்து இருப்பேன் அய்யா !
ReplyDeleteதங்களுக்கு ஆறுதல் கூற வார்த்தைகள்இல்லை ஐயா
ReplyDeleteஉலகம் உணர்ந்தவர் தாங்கள்
ஆறுதல் சொல்லும் அளவு நான் வளரவில்லை ஐயா....
ReplyDeleteஉங்கள் துணைவியார் ஆன்மா சாந்தியடைய
இறவனை பிரார்த்திக்கிறேன் ஐயா....
அவர்கள் நினவே உங்களுக்கு துணை ஐயா...
வணங்குகிறேன் ஐயா!
ReplyDelete