Monday, February 15, 2016

வறுமையெனும் பேயொன்று இல்லம் தன்னில்- குடியே வந்துவிட்டால் நடப்பதென்ன அந்தோ எண்ணில்

வறுமையெனும் பேயொன்று இல்லம் தன்னில்- குடியே
வந்துவிட்டால் நடப்பதென்ன அந்தோ எண்ணில்
பொறுமையெனும் குணமுற்றும் போகும் அறவே- நாளும்
போடுவது சண்டையென ஆகும் ! உறவே,
வெறுமையென வாழ்வேதான் இன்பம் காணா-தீரா
வேதனைதான் குடும்பமென அமைதி பூணா
( ஆனால்)
திறமைமிகு கணவனொடு மனைவி கலந்து –நல்ல
திட்டமிடின் போகுமே வறுமை குலைந்து

புலவர் சா இராமாநுசம்

7 comments :

  1. கணவன் மனைவி கலந்து பேசினால்தான் விடிவு பிறக்கும் ,அரசியல்வாதிகளை ,அரசை நம்பமுடியாது .வெளியேறு என்றால் எருமையை வெளியேறாது ,வறுமையா வெளியேறும் ?இது கவிக்கோவின் அருமை வரி :)

    ReplyDelete
  2. அருமை ஐயா..கணவன் மனைவி கலந்துபேசி வாழ்ந்திடின் வறுமை ஏது!

    ReplyDelete
  3. அனுபவ வரிகள் போல் தெரிகிறது வாழ்த்துக்கள் என் வலைப்பக்கம் வர வேண்டுகிறேன்

    ReplyDelete
  4. தம்பதிகளுக்கு ஏற்ற நல்லொரு அறிவுரை ஐயா
    தமிழ் மணம் 2

    ReplyDelete
  5. வறுமையை எதிர்கொள்ள அருமையான வழி. நன்றி ஐயா.

    ReplyDelete
  6. தம்பதியினர் அனைவரும் அறிந்து பின்பற்றிட வேண்டிய
    வழி ஐயா
    நன்றி
    தம+1

    ReplyDelete
  7. இன்றைக்கு தேவையான கவிதை!
    த ம 4

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...