பொதுவாக திருக்குறளை உலகப் பொதுமறை என்கிறோம்! காரணம் அது எல்லாநாட்டுகும் எல்லா மதங்கள், சமயங்களுக்கும் எக்காலத்திற்கும் பொருந்தக்கூடிய கருத்துக்களை கொண்டிருப்பதே ஆகும் என்பர் !ஆனால் அதில் சொல்லப்பட்டுள்ள சில குறள்களின் கருத்துகள் சில இக்காலத்திற்கும் சில நாடுகளுக்கும் பொருந்தாது எனவும் ஒரு சிலர் சொல்கிறார்களே! உங்கள் கருத்தென்ன!!!?
சாதரணமாய் மனித மனம் நடந்த பிழையை தான் ஏற்றுக் கொள்ளாமல் பிறர்மேல் சாற்றுவது நடை முறையாக உள்ளது! உதாரணமாக , ஒருவன் படி இடித்தது வலிக்கிறது என்கிறான்! ஆனால் ,உண்மையில் படிவந்தா இவனை இடித்தது! இல்லையே! இவனே , கவனிக்காமல் படியில் இடத்துக் கொண்டு, படி இடித்தது என்கிறான்! இதுபோலத்தான் வாழ்வில், சில நிகழ்வுகள்! நடக்கின்றன! ஆனால் யாரும் எண்ணிப் பார்பதில்லை!
காலமாற்றத்தால் கருத்துகளும் பழக்க வழக்களும் மாறத்தான் செய்யும் என்பது உண்மைதான்! அவை ,முதலில் கசந்தாலும் படிப்படியா நடைமுறையாக பழகித்தான் போகின்றன! முன்பெல்லாம் கணவன் பெயரைச்
சொல்லவே மனைவிமார் விரும்ப மாட்டார்கள்! ஆனால்!? இன்று! அப்படியா! தன் கணவன் பெயரைச் சொல்லி அழைப்பதையும் தாண்டி , வாடா, போடா ,என பேசிக் கொள்வதை பல குடும்பங்களில் பார்கிறோம்! அதுமட்டுமா இந்நிலை சினிமாவிலும் சீரியலிலும் சர்வ சாதரணமாகிட்டது ! வயதான என்னைப் போன்றவர் வருந்தினாலும் பயன் இல்லையே!
புலவர் சா இராமாநுசம்
இதில் என்ன இருக்கிறது என்றுதான் எனக்கு(ம்) தோன்றுகிறது! பரஸ்பர புரிதல் இருந்தால் இதெல்லாம் ஒன்றும் பிரச்சனையாகாது. அந்தக் காலத்தில் கூட அரசிகள் தங்கள் கணவனான அரசரின் பெயரைச் சொல்லி அழைத்ததாகப் படித்திருக்கிறோமே..
ReplyDelete:))
நன்றி!
Deleteபகிர்வினுக்கு நன்றி அய்யா.
ReplyDeleteடேக் இட் ஈஸி பாலிசியா எடுத்துக்குங்க அய்யா :)
ReplyDeleteநியாயமான ஆதங்கம்தான் ஐயா எல்லாம் காலமாற்றம் அன்று ஒரு பெண் தாலியை கழட்டி விட்டால் கணவன் இறந்ததாகத்தான் அர்த்தம் இன்று அப்படியில்லையே... நினைத்த நேரத்தில் கழட்டி மாட்டிக்கொள்ளும் ஆபரணம் போலாகி விட்டது
ReplyDeleteதமிழ் மணம் 4
நன்றி!
Deleteஉண்மைதான் ஐயா
ReplyDeleteதம+1
உண்மையான ஆதங்கம். சமுதாயம் பின்னோக்கிச் செல்வதை நினைக்கும்போது வேதனையாக உள்ளது.
ReplyDeleteஇங்கேயும் படிக்கத் தந்தமைக்கு நன்றி ஐயா.
ReplyDeleteநீங்கள் ஆதங்கப்படுவது இக்கால இளைஞர்களுக்கு சாதாரணமாகத் தோன்றலாம். என்ன செய்ய! காலம் செய்யும் கோலம்!
ReplyDeleteவணக்கம், தங்களுடைய உடல் நலமா ஐயா. தங்களுடைய பாரம்பரியம் சார்ந்த கருத்துக்கள் எப்போதுமே சிறப்பு ஐய்யா.
ReplyDelete