குடிஒழியும் நாளேதான் தாண்டவக் கோனே-உண்மை
குடியரசு நாளாகும் தாண்டவக் கோனே
வடிக்கும் ஏழைத் தாய்குலமே தாண்டவக் கோனே-கண்ணீர்
வற்றாத நதியாக தாண்டவக் கோனே
விடிவுவரும் நாளேதான் தாண்டவக் கோனே-மது
விலக்கு வேண்டுமடா தாண்டவக் கோனே
முடியரசே பாரதத்தில் தாண்டவக் கோனே-அதுவரை
முடிவெடுத்தால் உண்மைதானே! தாண்டவக் கோனே
காணுகின்ற இடமெல்லாம் தாண்டவக் கோனே-மதுக்
கடைகள்தான் காணுதடா தாண்டவக் கோனே
நாணமின்றி நங்கையரும் தாண்டவக் கோனே- குடித்தல்
நாகரீக மானதடா தாண்டவக் கோனே
கோணல்வழி போவதுவே தாண்டவக் கோனே- வாழும்
கொள்கையென ஆயிற்று தாண்டவக் கோனே
பூண வேண்டும் மக்களிதை தாண்டவக் கோனே-நாடு
பூராவும் மதுவிலக்கு தாண்டவக் கோனே
புலவர் சா இராமாநுசம்
நாடாளும் "நல்லவர்கள்"தான் தாண்டவக்கோனே.. மக்களை
ReplyDeleteநாசமாய்ப் போக வைக்கிறார்கள் தாண்டவக்கோனே!
Welcome Ayya....
ReplyDeleteSuper
T.M + 1
வணக்கம்
ReplyDeleteகவிதை அருமையாக உள்ளது வாழ்த்துக்கள் த.ம 2
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
குடியரசு தின கோரிக்கை நன்று :)
ReplyDeleteஉங்கள் பதிவினைக் கண்டு மகிழ்ச்சி. தங்களுடைய ஏக்கமே எங்களின் ஏக்கமும்.
ReplyDeleteஅருமை ஐயா...
ReplyDeleteகுடியை(மது) தடி எடுத்து அடித்து உடைத்திட வேண்டும்
ReplyDeleteதாண்டவக்கோனே!
குடியில்லா குடியரசு அமைந்திடல் நன்று,
ஆனால் நடவாத ஒன்று!
த ம 7
நட்புடன்,
புதுவை வேலு
சிறந்த பகிர்வு
ReplyDeleteஇந்தியாவின் 67வது குடியரசு நாள் வாழ்த்துகள்!
மின்நூல் வடிவமைப்பும் வெளியீடும் பற்றி அறிந்திட......
http://www.ypvnpubs.com/2016/01/blog-post_26.html
நாடாள்வோர் மாறவாய்ப்பில்லை! குடிமகன்கள் திருந்தினால் குடியும் ஒழியும்! இனிய குடியரசு தின வாழ்த்துக்கள்!
ReplyDeleteநிதிகிடைக்க மதுவினைத்தான் தாண்டவக்கோனே - அரசு
ReplyDeleteநித்தம் இங்கே விற்குதுபார் தாண்டவக்கோனே
கதிஎனவே மதுக்கடையில் தாண்டவக்கோனே- நாளைக்
கழித்திடுறார் மக்களும்தான் தாண்டவக்கோனே
மதியிருந்தும் தினசரியும் தாண்டவக்கோனே- ஆட்டு
மந்தையைப்போல் கூடுகிறார் தாண்டவக்கோனே
விதிஎனவே விட்டுவிட்டால் தாண்டவக்கோனே - நாடு
விளங்காமல் போய்விடுமே தாண்டவக்கோனே
புலவர் ஐயாவின் கவிதையை தொடர்ந்த தங்கள் கவிதையும் அருமை சேட்டைக்காரன் சார்
Deleteஅருமை ஐயா. பாடுபட்டு சேர்க்கும் பணத்தை இப்படி குடியில் அழிப்பதைக் கண்டு பார்த்துக் கொண்டிருப்பதன் வேதனை கவிதையாக மாறி உள்ளது .
ReplyDeleteஇத்தனை பணத்தினை இங்கே இழக்கும் மக்களைக் கண்டால் வேதனை மிஞ்சுகிறது.
ReplyDelete