Friday, January 15, 2016

தைமாத முதல்நாளே புத்தாண் டாகும்-உண்மை! தமிழருக்கு அணுவேணும் ஐயம் வேண்டாம்!


தைமாத முதல்நாளே புத்தாண் டாகும்-உண்மை!
தமிழருக்கு அணுவேணும் ஐயம் வேண்டாம்
பொய்யாக இதுவரை எண்ணி வந்தோம்-மேலும்
புரியாமல் வாழ்த்தினைச் சொல்லித் தந்தோம்
ஐயாவே அம்மாவே மாற்றிக் கொள்ளோம்-இனி
அனைவர்க்கும் இதையேதான் எடுத்துச் சொல்வோம்
மெய்யாக எதுவென்றே உணர்ந்துக் கொண்டோம்-இம்
மேதினி உணர்ந்திட இங்கே விண்டோம்


காட்டைத் திருத்தியே பயிரு மிட்டான்-நெல்
கதிர்கண்டு நம்முடை உயிரை மீட்டான்
வீட்டை மகிழ்ச்சியில் ஆழ்தி விட்டான்-பயிர்
விளைந்திட அறுவடைப் பொங்க லிட்டான்
மாட்டுக்கும் பொங்கலே வைத்தி டுவான்-நல்
மனித நேயத்துக்கே வித்தி டுவான்
பாட்டுக்கே அன்னவன் உரிய வனாம்-தமிழ்ப்
பண்பாட்டின் சின்னாய் திகழ்ப வனாம்!

உதிக்கின்ற கதிரவன் இறைவன் என்றே-அவன்
உணர்ந்தவன் அதனாலே பொங்க லன்றே
துதிக்கின்றான் வாசலில் பொங்கல் இட்டே-இது
தொடர்கதை அல்லவா அன்று தொட்டே
கதிகெட்டு போவோமே உழவன் இன்றேல்-அவன்
கைகள் முடங்கிடின் எதுவு மின்றே
மதிகெட்டு இனிமேலும் உழவன் தன்னை-அரசு
மதிக்காமல் மிதித்தாலே நிலமை என்னை?

புயலாக மழையாக இயற்கை சீற்றம்-வந்துப்
போவதால் அன்னவன் வாழ்வில் ஏற்றம்
இயலாது! இயலாது !கண்டோ மன்றே-அந்த
ஏழையும் உயர்வதும் உண்டோ? நன்றோ?
முயலாது பதவியின் சுகமே காண்பார்-உழவன்
முன்னேற உறுதியா நெஞ்சில் பூண்பார்
பயிலாதப் பெரும்பான்மை மக்க ளய்யா-உடன்
பரிவோடு ஏதேனும் செய்யு மய்யா!

புலவர் சா இராமாநுசம்

 வணக்கம் ! அனைவருக்கும்  இனிய  பொங்கல் வாழ்துகள்!

13 comments :

  1. வாழ்த்துகளுக்கு நன்றி.

    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.

    தம +1

    ReplyDelete
  2. தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. தமிழர் திருநாள் தெளிவாக்கியமைக்கு நன்றி.

    ReplyDelete
  4. #பயிலாதப் பெரும்பான்மை மக்க ளய்யா-உடன்
    பரிவோடு ஏதேனும் செய்யு மய்யா!#
    உங்கள் கோரிக்கையின் நியாயத்தை உணருமா அரசுகள் :)

    ReplyDelete
  5. விளக்கங்கள் அருமை ஐயா
    தங்களுக்கும், குடும்பத்தினருக்கும் பொங்கல் நல்வாழ்த்துகள்
    தமிழ் மணம் 3

    ReplyDelete
  6. அனைவருக்கும் தமிழ்ப் புத்தாண்டுடன் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்!

    M.Syed
    Dubai

    ReplyDelete
  7. தைமாத முதல்நாளே புத்தாண் டாகும்-உண்மை!
    தமிழருக்கு அணுவேணும் ஐயம் இல்லை அய்யா.... தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் மற்றும் தங்கள் அன்பு நண்பர்களுக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்!!! அய்யா த.ம4

    ReplyDelete
  8. எங்கள் உளங்கனிந்த பொங்கல் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  9. அன்பினும் இனிய நண்பரே
    தங்களுக்கும், தங்களது குடும்பத்தினர் அனைவருக்கும்
    இணையில்லாத இன்பத் திருநாளாம்
    "தைப் பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்
    நட்புடன்,
    புதுவை வேலு

    ReplyDelete
  10. வணக்கம்
    ஐயா
    கவிதை சிறப்பு
    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  11. இனிய தமிழர் தின நல்வாழ்த்துகள்...

    ReplyDelete
  12. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் தமிழர் திருநாளாம் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  13. பலர் பார்பன மோகத்தால் தமிழ் புத்தாண்டு என்பதை சொல்லவும் நினைக்கவும் உணர்வற்று இருக்கையில் உரக்க சொல்லிய உங்களுக்கு நன்றி. தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்.

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...