Thursday, January 14, 2016

நடக்கும் என்பார் நடவாதென்பார்-என்ன நாடகம் இதுவோ தெரியவில்லை!



நடக்கும் என்பார் நடவாதென்பார்-என்ன
நாடகம் இதுவோ தெரியவில்லை
கடக்கும் நாளே இன்னும் ஒன்றாம்-பின்பே
கபடம் வெளிப்படும் நன்றாம்

தேர்தல் வந்தால் தெரியும் தானே!-எதற்கு
தேடல் விடையும் வீணே
பார்தனில் அடடா பதவிப் பெறவே-கட்சிகள்
படுவதும் சொல்வதா அறவே

புலவர் சா இராமாநுசம்

15 comments :

  1. அரசியல் விளையாட்டரங்கில்
    தேர்தல் காளையர்களின்
    ஊர்வல ஓட்டப் பந்தயம்
    பொங்கல் கரும்பாய் இனிக்கவில்லை
    கரும்பை வாங்கித் தந்து விட்டு
    பல்லை பிடுங்கிய கதைதான்
    தொடருகிறது அய்யா!
    "பாரம்பரியம் பாதுகாக்கப்படுமா? பாரத தேசத்தில்?
    த ம +
    நட்புடன்,
    புதுவை வேலு

    ReplyDelete
  2. தேர்தல் அரசியலின் முகத்திரை கிழிக்கப்பட்டது
    கவிதையால்,,,

    ReplyDelete
  3. தேர்தல் வந்தால் நல்லதொரு முடிவு (மாற்றம்) தெரியும் ஐயா...

    ReplyDelete
  4. உண்மை! தேர்தல் ஒன்றே மாற்றத்திற்கு வழி! இப்படி நம்பிக்கொண்டே இருப்பதுதான் நமக்கு சிறந்த வழி!

    ReplyDelete
  5. அருமை ஐயா ஓட்டுப் பொறுக்கிகளுக்கு பாடம் கற்பிக்கும் நாள் வருகிறது விரைவில்
    தமிழ் மணம் முதலாவது

    ReplyDelete
  6. தமிழர் திருநாள் வாழ்த்துக்களை
    மகிழ்வோடு நவில்கின்றேன்
    கனிவோடு ஏற்றருள்வீர்

    ReplyDelete
  7. வணக்கம்
    ஐயா
    காலம் உணர்ந்து கவிதை புனைந்த விதம் சிறப்பு ஐயா த.ம 4
    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் எனது இனிய பொங்கல் வாழ்த்துக்கள்-2016

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  8. வாக்குப் பொறுக்கிகளின் தலையில் உச்ச நீதி மன்றம் நறுக்கென்று வைத்து விட்டதே குட்டு :)

    ReplyDelete
  9. 2016 தைப்பொங்கல் நாளில்
    கோடி நன்மைகள் தேடி வர
    என்றும் நல்லதையே செய்யும்
    தங்களுக்கும்
    தங்கள் குடும்பத்தினருக்கும்
    உங்கள் யாழ்பாவாணனின்
    இனிய தைப்பொங்கல் வாழ்த்துகள்!

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...