Tuesday, January 12, 2016

ஆறுதலை சொல்வற்கு யாரும் காணோம் அஞ்சியஞ்சி வாழ்வதற்கு நாமும் நாணோம்!



கைநிறை  காசெடுத்துப்  போனால்  கூட
 காய்கறிகள் விலையந்தோ அதிகம்  ஓட
பைநிறைய  வில்லையெனில்  வாழ்தல் எங்கே
பல்பொருளும் இவ்வாறே  நாளும்  இங்கே

மத்தியிலே  ஆள்வோர்க்கு  கவலை  இல்லை
மாநிலத்தை  ஆள்வோர்க்கு  கவலை  இல்லை
புத்தியிலே  நமக்குத்தான்  என்றே  நொந்தே
புலம்புவதா மக்கள்தான்  உள்ளம்  வெந்தே

ஏறுமுகம் எப்பொருளும் நஞ்சைப் போன்றே
இனியென்றும் மாறாது  என்றே   தோன்ற
ஆறுதலை  சொல்வற்கு  யாரும் காணோம்
அஞ்சியஞ்சி  வாழ்வதற்கு  நாமும்  நாணோம்

புலவர்  சா  இராமாநுசம்


31 comments :

  1. இன்றைய சமூகம் இப்படித்தானே ஐயா இருக்கிறது
    தமிழ் மணம் 1

    ReplyDelete
  2. இப்போதெல்லாம் கதாநாயகிகளை விடவும் காய்கறிகள்தான் அதிகம் கனவில் வருகிறது. :-)

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!

      Delete
    2. சேட்டைக்காரன் ஜி ,இதுக்கு காரணம்.. பணம் இல்லை ,உங்கள் மனம் மற்றும் வயது :)

      Delete
  3. Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!

      Delete
  4. அவலம்தான்.
    சமூக அவலங்களைச் சாடும் உயிர்த்துடிப்புள்ள மரபின் வரிகளை ரசித்தேன் ஐயா.

    தொடர்கிறேன்.
    நன்றி.

    ReplyDelete
  5. மொட்டை மாடி அளவு காய்கறி விலை உயர்ந்து விட்டது. எனவே நாம் நம் மொட்டை மாடிகளில் அவசியக் காய்களையாவது பயிரிடுவோமாக!

    :))

    ReplyDelete
    Replies
    1. அதுதான் தீர்வு ஸ்ரீராம்! என்ன விலை என்றாலும் வாங்குவது அவர்களுக்குத் தான் ஆதாயம்!

      Delete
    2. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!

      Delete
    3. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!

      Delete
  6. விலைவாசி எகிறும் அவலம் சொல்லும் கவிதை அருமை ஐயா
    த.ம.6

    ReplyDelete
  7. கவிதை வடிவில் நிகழ்கால வாழ்க்கை அருமை.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!

      Delete
  8. சிறப்பான கவிதை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!

      Delete
  9. வணக்கம்
    ஐயா
    சிறப்பான கவிதை படித்து மகிழ்ந்தேன்.

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!

      Delete
  10. சிறப்பு அருமை அசத்தல்

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!

      Delete
  11. வேதனையான உண்மை தான் ஐயா...

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!

      Delete
  12. \\அஞ்சியஞ்சி வாழ்வதற்கு நாமும் நாணோம்\\

    நாணப்படும் நாளில்தான் நமக்கிங்கே நல்வாழ்க்கை அமையும் என்று சொல்லாமல் சொல்லும் வரிகள். அருமை ஐயா.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!

      Delete
  13. அன்புள்ள பெரும்புலவர் அய்யா,


    அஞ்சுதலைக் கொடுக்கும் அரசுதான் இங்கே

    ஆறுதலைக் கொடுக்கும் அரசுதான் எங்கே?

    தேர்தலைப் பார்க்கத் தேடிடும் மக்கள்

    தேறுதலை அடையத் தேர்ந்தே தெளியும்!

    நன்றி.
    த.ம.9

    ReplyDelete
  14. இன்றைய உண்மைகளை உரைத்த அருமையான கவிதை.

    ReplyDelete
  15. Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!

      Delete
  16. சேட்டைகாரன் கம்மெண்ட் அசத்தல் ☺

    பொருட்கள்விலை ஏறேறுசங்கிலிதான்.....

    ReplyDelete
  17. சேட்டைகாரன் கம்மெண்ட் அசத்தல் ☺

    பொருட்கள்விலை ஏறேறுசங்கிலிதான்.....

    ReplyDelete
  18. வலைப்பூஎன்று ஒன்று இருக்கிறதே ஆதங்கங்களைக் கொட்டித் தீர்க்க

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...