Sunday, January 10, 2016

முகநூல் பதிவுகள்!





பாரதிதாசன் நடந்து போகும் வழியில் ஒரு குளம் தாமரைப் படர்ந்த , நீர் நிறைந்து காணப்பட்டது அது கண்ணைக் கவரவே அருகே சென்று கரையில்
நின்று , சலனமற்று தெளிந்த நீரை கவிஞர் எட்டிப் பார்தார் அவர் முகம் நீரில் தெரிந்தது! ஆகா கண்ணாடித் தரை என்றார்! உற்றுப் பார்த்தார் எங்கும் தாமரை இலைகள்! கண்கவர் பச்சை தட்டுகள்! என்றார் !மேலும் உற்றுப் பார்க்க , தாமரை இலைமீது முத்துப் போல் நீர் துளிகள் !எண்ணாத ஒளி முத்துகள் இறைத்தது போல என்றார்! கவிதை பிறந்தது!
கண்ணாடித் தரையின்மீது கண்கவர் பச்சைத் தட்டு! எண்ணாத ஒளி முத்துக்கள் இறைத்தது போல் குளத்தில்!

யாதும் ஊரே யாவரும் கேளீர்! என்ற வாக்கியம் அனைவரும் அறிந்த ஒன்றே! இதில் கேளீர்என்ற சொல்லுக்கு இரண்டு பொருள் சொல்கிறார்கள்
ஒன்று கேளீர் என்பது உறவினர் என்றும் மற்றொன்று கேளீர் என்பது சொல்வதைக் கேட்பீர்களாக என்றும் பொருள் கொள்ளலாம் என்கிறார்கள்
நீங்கள் எது சரி என நினைக்கிறீர்கள்!!?

எந்தக் குடியாக இருந்தாலும் யாராக இருந்தாலும் அக் குடியில் பிறந்த மூத்தாவனாக இருந்தாலும் வயதில் இளையவனாக,இருந்து படித்து அறிவுள்ள ஒருவனையே ஊரும் மதிக்கும் , வரவேற்கும், போற்றும் என்பதுதான் உண்மை!

பையன் நல்லாப் படிக்கிறான் என்றால் பெற்றவர்கள் மகிழ்வார்கள் !பையன் நன்றாக. குடிக்கிறான் என்றால்!! மகிழவா செய்வார்கள்?

புலவர்  சா  இராமாநுசம்

18 comments:

  1. ஐயா வணக்கம்.

    “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்பதன்றோ சரி?

    கேளிர் என்பதற்கு உறவினர் என்ற ஒற்றைப் பொருள்தானே?

    கேளிரைக் கேளுங்கள் எனப் பொருள்படும் கேளீர் என்று நீட்டல் விகாரமாக்கிப் பொருளுரைப்பது பிழையல்லவா?

    தெளிவு வேண்டுகிறேன்.

    நன்றி.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் கூற்று சரியே

      Delete
  2. வணக்கம்.

    உலகலாவிய பொதுமை காண விழைந்த இதுபோலும் சங்கப்பாடல்கள் என்றும் வேண்டப்பெறுபவை.

    நீங்கள் இரண்டாவது காட்டிய,

    பாட்டு,

    “ஒரு குடிப் பிறந்த பல்லோருள்ளும்,
    'மூத்தோன் வருக' என்னாது, அவருள்
    அறிவுடையோன் ஆறு அரசும் செல்லும்;
    வேற்றுமை தெரிந்த நாற்பாலுள்ளும்,
    கீழ்ப்பால் ஒருவன் கற்பின்,
    மேற்பால் ஒருவனும் அவன்கட் படுமே”

    என்னும் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் பாட்டு.

    பாரதிதாசன் பாடலுடன் சேரக் கதம்பக் கவிப்பொருட்டொகுதி ஐயா.

    தொடர்கிறேன்.

    ReplyDelete
  3. யாதும் ஊரே யாவரும் கேளிர் என்றே படித்த நினைவு. கவிகனுக்கு மூட் வந்து விட்டல் கற்பனையும் கூடவரும் பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  4. கவிஞனுக்கு என்றிருந்திருக்க வேண்டும் மேலே

    ReplyDelete
  5. புரட்சிக் கவிஞரை நாடு போற்றும் இலக்கிய ரசனை மிகுந்த கவிஞராக கண்முன் கொண்டு வந்த கவிதையை சொல்லிய விதமும்,
    கண்ணாடித் தரையின்மீது
    கண்கவர் பச்சைத் தட்டு!
    எண்ணாத ஒளி முத்துக்கள்
    இறைத்தது போல் குளத்தில்!
    உலகம் போற்றும் செயலை பாராட்டும் பாங்கை "யாதும் ஊரே யாவரும் கேளீர்!" பதிவாய் பங்கீட்டு தந்தமைக்கும்
    நன்றி என்னும் தாம்பூலம்!
    த ம +
    நட்புடன்,
    புதுவை வேலு

    ReplyDelete
  6. இங்கும் நான் உறவுக்குத்தான் கை கொடுக்கிறேன்! தமிழ்மண வாக்கிட்டு விட்டேன்!!

    ReplyDelete
  7. அருமையான விளக்கம் ஐயா மிகவும் நன்று
    தமிழ் மணம் முதலாவது.

    ReplyDelete
  8. அருமையான விளக்கம் ஐயா
    நன்றி
    தம +1

    ReplyDelete
  9. #பையன் நல்லாப் படிக்கிறான் என்றால் பெற்றவர்கள் மகிழ்வார்கள் !பையன் நன்றாக. குடிக்கிறான் என்றால்!! மகிழவா செய்வார்கள்?#
    குடிகார அப்பன் கூட மகிழமாட்டான் :)

    ReplyDelete
  10. பையன் நல்லா குடிக்கிறான் என்றால் ஆளுவந்த அரசாங்கம் ரெம்ப மகிழ்ச்சி கொள்கிறது அய்யா......

    ReplyDelete
  11. தெளிவான விளக்கத்திற்கு நன்றி.

    ReplyDelete