Monday, January 4, 2016

முகநூல் பதிவுகள்





பெண்களுக்கென்று தனியாக மதுக்கடை திறக்கப் பட்டது இந்தியத் தலைநகர் டெல்லில்- செய்தி
காந்தியார் கண்டகனவு, சுதந்திரம் , பெண்ணுரிமை ஆகா!! மலர்ந்தது ! வாழ்க அகண்ட பாரதம்! பாரத மாதாவுக்கு ஜே ! பெண்ணடிமை ஒழிந்தது!

பொதுவாக சக்கரை என்பது இனிக்கும் என்றாலும் கூட அதிலேயும் வேறுபாடு உண்டு சில இனிப்பு குறைந்தும் சில இனிப்பக் கூடியும் இருக்குமல்லவா அதுபோல, வாழ்வில் நல்ல மனிதர்கள் என்று கருதப்படும் சிலரின் செயல் பாடுகளிலும் அவ்வப்போது சிறு சிறு வேறுபாடுகள் காணத்தான் செய்யும் அதையெல்லாம் பொருட் படுத்தக் கூடாது!

தனுஷ் பட கட்டவுட்டுக்கி 100 லிட்டர் பால் அபிஷேகம் -செய்தி! வெள்ளம் வந்த போது பாலுக்கு மக்கள் பட்ட அவதி!!!!!
கடவுளே! சினிமா மோகமும், மதுக்கடைகளும் உள்ளவரை இந்த நாடு உருப்படாது! அதில் துளியும் ஐயமில்லை!

பொதுவாக அனைவரும் பணத்தை சேமிக்க ஆசை படுவது இயல்பே! அப்படி சேர்த்த பணத்தை பாது காக்க , எந்த வங்கியில் போடலாம் ,அவ் வங்கி பாதுகாப்பானதா என்றும் யோசிப்பதும் இயல்பே! ஆனால் வள்ளுவன் சொல்லும் வங்கி எது வென்றால், பொருள் அற்றவனாக, தன்னை
அழிக்கின்ற கொடிய பசி நோயால் வாடுகின்றவன் வயிறே ,ஒருவன் பெற்ற பணத்தை வைக்கும் வங்கி என்பதாம் அதாவது ஏழையின் பசியைப் போக்குவதே
அற்றா ரழிபசி தீர்த லஃதெருவன்
பெற்றான் பொருள்வைப் புழி- குறள்

புலவர்  சா  இராமாநுசம்

15 comments:

  1. எல்லாம் லாபம் பார்க்கும் வியாபாரமாகிப் போனது! போதைக்கு ஆணென்ன,பெண்ணென்ன!

    போதும் என்று சொல்லத் தெரிந்தவனும், நாளைக்கென்று சேர்த்து வைத்துக் கொள்ளாதவனும்தான் பெரிய பணக்காரன் என்று யாரோ (அன்னை தெரெசா?) சொல்லியிருக்கிறார்கள்.

    ReplyDelete
  2. அரிய கருத்துக்கள்

    ReplyDelete
  3. வேதனையான விடயம் ஐயா இந்த நாடு முன்னேறுவதற்கான அறிகுறிகள் தென்படவே இல்லை பொருத்தமான நல்லதொரு குறள் ஐயா
    தமிழ் மணம் 1

    ReplyDelete
  4. //காந்தியார் கண்டகனவு, சுதந்திரம் , பெண்ணுரிமை ஆகா!! மலர்ந்தது ! வாழ்க அகண்ட பாரதம்! பாரத மாதாவுக்கு ஜே ! பெண்ணடிமை ஒழிந்தது!//

    என்ன சுதந்திரம் கிட்டியும் என்ன பயன் ஐயா? பாரதத் திருநாட்டில் எமது பெண்கள் ஜீன்ஸும் லெக்கிங்ஸும் அணிந்து ஆலயத்துக்குள் செல்ல இயலாத கொடுமை நிகழ்ந்துவிட்டதே! ஐயகோ! நெஞ்சு பொறுக்குதில்லையே! என் செய்வேன் என் தாய்த்திருநாடே! உய்வதற்கோர் வழியுண்டோ உரைப்பீர்!

    ReplyDelete
  5. பால் கொடுத்த அன்னைக்கு பாலாபிஷேகம் செய்தால் நியாயம் ,கட் அவுட்டுக்கு செய்தால் ...? இப்படி முட்டாள்களைக் கொண்ட நாடு , எந்த காலத்திலும் வல்லரசு ஆகாது !

    கண்டுபிடித்து விட்டேன் அய்யா ,உங்களுக்கு இரண்டு முறை த ம வாக்களித்தால் விரைவில் ஒரு வாக்கு விழுகிறது :)

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி! உங்கள் பதிவு வருகிறது தினமும் படிக்கிறேன் ஆனால் மறுமொழியோ மதிப்பெண்ணோ போட இயலவில்லையே
      நானும் ஒவ்வொருருக்கும் இரண்டு மூன்று முறை முயன்றால் மதிப்பெண் போட முடிகிறது

      Delete
  6. சீரழிவுக்கு சிம்மாசனத்தை சீராகதரும் சிங்கார தேசம்
    சீர்கெட்டு சிதைமூட்டி சிரிப்பதுதான் மோசம்
    வள்ளுவன் சொன்ன வங்கி ஒன்றே வாய்மையானது புலவர் அய்யா!
    சொல்லின் கோபம் எள்ளாக வெடிக்கிறது.
    த ம +
    நட்புடன்,
    புதுவை வேலு

    ReplyDelete
  7. சிந்திக்கத் தெரியாதவர்களாக ரசிகர்களும் தொண்டர்களும் இருக்கும் வரை அவர்களுக்கு கொண்டாட்டம்தான்

    ReplyDelete
  8. பாலபிஷேகம், மகளிருக்கு தனி மதுக்கடை - வேதனை.....

    ReplyDelete
  9. ஆணும் பெண்ணும் சமம் என்பதற்கு நற்சான்று இந்த மதுக்கடை...

    ReplyDelete