காதலிக்கும்
இருவரும் தொடக்கத்துலேயே எதையும் ஆய்வு செய்ய
வேண்டும்! மணம் முடித்த பிறகு
அவர்கள் வாழும்வரை ஆய்வு செய்வது அறவே
கூடாது! அறிவுக்கும் அதிக வாய்ப்பு,வழங்கல்
ஆகாது! ஒரு கண்மூடித் தனமான
வாழ்க்கையே அவர்கள் மேற் கொள்ள
வேண்டும்! இன்றேல் இல்லறம் நல்லறமாக
அமையாது!
மனிதர்களில்
இரண்டு வகையினர் உண்டு! ஒருவகையினர் இரத்தம்
போன்ற, சித்தம் படைத்தவர்கள்! அவர்கள்,
அடி பட்ட இடத்திலிருந்து வரும்
இரத்தம் போல தமக்கு வரும்
துன்பத்திற்கு மட்டுமே வருந்துவார்கள்! இன்னொரு
வகையினர், உடலில் எங்கு அடி
பட்டாலும் வரும் கண்ணீர் போன்றவர்கள்
இவர்கள் பிறருக்கு வரும் துன்பத்தைக் கண்டும்
வருந்துவார்கள்!
கண்ணை
மூடிக்கொண்டு நட என்றால் முயன்றுப்
பார்க்கலாம்! அதோடு காலையும் கட்டி
விட்டு ஓடு என்று சொன்னால்,அதற்கும்
கட்டுப்பட முடியுமா !?அப்படித்தான்,நாம் , நம் வாழ்க்கையில் சந்திக்கும் சில மனிதர்களும், சில நிகழ்ச்சிகளும் நம்மை சங்கடத்தில் ஆழ்த்தும்! அதுபோது நாம்தான் சிந்தித்துச் செயல் பட வேண்டும்
கட்டுப்பட முடியுமா !?அப்படித்தான்,நாம் , நம் வாழ்க்கையில் சந்திக்கும் சில மனிதர்களும், சில நிகழ்ச்சிகளும் நம்மை சங்கடத்தில் ஆழ்த்தும்! அதுபோது நாம்தான் சிந்தித்துச் செயல் பட வேண்டும்
புலவர் சா
இராமாநுசம்