புலவர் குரல்
------------
மிகப் பெரிய தவற்றைச் செய்து
விட்டு , கவலைப் படாமல் ஒதுக்கி
விட்டுச் செல்லும் மனம் படைத்தவர்களே சமுதாயத்தில்
வாழவும் முன்னேறவும் முடிகிறது! அதுமட்டுமல்ல! அவர்களே வாழத் தெரிந்தவர்களாக
உலகம் சொல்கிறது ! செய்த ,சிறு தவற்றையும்
பெரிதாக்கிக் கொள்ளும் மனம் படைத்தவர்களாக இருந்தால்
இந்த காலத்தில் வாழமுடியாது
சமுதாய வாழ்க்கையில் கெட்டவர்கள் எதிலும் துணிந்து இறங்கி
விடுவார்கள்! விளைவு வெற்றியோ, தோல்வியோ
எண்ணுவதில்லை!
ஆனால், நல்லவர்கள், நல்லது செய்வதற்கும் தயங்கித் தயங்கிச் செய்யாமலே விட்டு விடுகிறார்கள்! அதனால்தான் ,சமுதாயத்தில் தீமைகள் , தழைக்க , நன்மைகள் நலிவடைகின்றன!
ஆனால், நல்லவர்கள், நல்லது செய்வதற்கும் தயங்கித் தயங்கிச் செய்யாமலே விட்டு விடுகிறார்கள்! அதனால்தான் ,சமுதாயத்தில் தீமைகள் , தழைக்க , நன்மைகள் நலிவடைகின்றன!
உண்மையான காதல் தன்னலமற்றது! மற்றவருடைய
இன்பத்தில் தான் இன்புறுவதும் துன்பங்
கண்டு தான் துன்புறுவதும் என்று
இருப்பதே காதலின் தூய்மைக்கு உரிய
அடையாளமாகும்
வாழ்க்கையில் தவறே செய்யாதவர்களைக் காண்பது
அரிது! தவறு செய்பவர்கள் அனைவரையும்
திருத்திவிட இயலாது ! திருந்தக்கூடிய குணமுடையவரை மட்டுமே திருத்த முடியும்!
கிளிக்குத் தான் பேசக் கற்றுத்
தரமுடியும் ! குருவிக்கிக் கற்றுத் தர இயலுமா?
பிறருடைய அன்பை , நாம் பெற
வேண்டுமென்றால், முதலில் நமது அன்பை
அவர்களுக்குக் கொடுக்க வேண்டும்! அதாவது
அன்பு என்பது அதையே கொடுத்து
பெற வேண்டிய ஒன்று என்பதை
அனைவரும் உணர வேண்டும்!
புலவர் சா இராமாநுசம்