ஆங்கிலப் புத்தாண்டே வருக ! –வாழும்
அனைவர்க்கும் ஆனந்தம் தருக
ஏங்கியே ஏழைகள் வாழ – குடிசை
இல்லாமல் வளமனைச் சூழ
தாங்கிட அன்னாரை நீயும் –இன்பம்
தடையின்றிப் நிலையாக பாயும்
தீங்கின்றி கழியட்டும் ஆண்டே –மக்கள்
தேவைகள் நிறைவேற ஈண்டே
இயற்கையின் சீற்றங்கள் கண்டே –எங்கள்
இதயமும் உடைந்ததிவ் வாண்டே
செயற்கையால் வந்ததே அறிவோம் – இனி
செய்வதை ஆய்ந்துமே செய்வோம்
இயற்கையின் கோபத்தை நீக்க –எம்மின்
இன்னல்கள் இல்லாது போக்க
முயற்சியும் செய்வாய ஆண்டே – மக்கள்
முன்னேற தடையின்றி ஈண்டே
உழவனும் அழுகின்றான் இங்கே – அவன்
உழைத்தாலும் பலன்போதல் எங்கே
தழைத்ததா அவன்வாழ்வு இல்லை – தினம்
தவித்தவன் பெறுவதோ தொல்லை
பிழைத்திட பருவத்தில் மாரி – நீயும்
பெய்திடச் தருவாயா வாரி
செழித்திட உலகமே ஆண்டே –உடன்
செய்திட வேண்டினோம் ஈண்டே
இல்லாமை நீங்கிட வேண்டும் – ஏழை
இல்லாத நிலையென்றும் வேண்டும்
கல்லாதார் இல்லாமை வேண்டும் – கல்வி
கற்றாரை மதித்திட வேண்டும்
கொல்லமை விரதமாய் வேண்டும் –நற்
குணங்களும் வளர்ந்திட வேண்டும்
எல்லாரும் வாழ்ந்திட ஆண்டே –நீயும்
ஏற்றது செய்வாயா ஈண்டே!
புலவர் சா இராமாநுசம்
இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள் ஐயா....
ReplyDeleteதம +1
புத்தாண்டு நல்வாழ்த்துகள் !நன்றி !
Deleteஅருமையான கவிதை ஐயா தங்களுக்கு எனது 2016 புத்தாண்டு வாழ்த்துகள் ஐயா
ReplyDeleteதமிழ் மணம் 2
புத்தாண்டு நல்வாழ்த்துகள் !நன்றி !
Deleteஅழகான அருமையான கவிதை. இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள் ஐயா!
ReplyDeleteபுத்தாண்டு நல்வாழ்த்துகள் !நன்றி !
Deleteஆங்கிலப் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள். புத்தாண்டில் நலம் பல விளையட்டும்
ReplyDeleteபுத்தாண்டு நல்வாழ்த்துகள் !நன்றி !
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteபிழைக்கு வருந்துகிறேன்! தங்களுக்கு என் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள் ஐயா!
ReplyDeleteஅருமையான கவிதை! பகிர்விற்கு நன்றி ஐயா!
ReplyDeleteபுத்தாண்டு நல்வாழ்த்துகள் !நன்றி !
Deleteவணக்கம்
ReplyDeleteஐயா
இனிய ஆங்கிலபுத்தாண்டு வாழ்த்துக்கள் கவிதை மிக அருமை ஐயா.த.ம 5
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
புத்தாண்டு நல்வாழ்த்துகள் !நன்றி !
Deleteவணக்கம் ஐயா !
ReplyDeleteஅருமையான வாழ்த்து !
வளர்பிறை வண்ணம் போலே
வாழ்மனை சிறக்க மக்கள்
இளமையின் பூரிப் பாக
எழிலுற நெஞ்சம் எல்லாம்
அளவிலாச் செல்வம் சேர்த்தும்
அறிவுடன் அன்பைச் கோர்த்தும்
வளமுடன் வாழ்க வென்று
வாஞ்சையாய் வாழ்த்து கின்றேன் !
தங்களுக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
வாழ்க வளமுடன் !
புத்தாண்டு நல்வாழ்த்துகள் !நன்றி !
Deleteஅன்புள்ள அய்யா
ReplyDeleteவணக்கம்.
"இனிய ஆங்கில புத்தாண்டு - 2016"
நல்வாழ்த்துகள்
TM +
நட்புடன்,
புதுவை வேலு
www.kuzhalinnisai.blogspot.com
புத்தாண்டு நல்வாழ்த்துகள் !நன்றி !
Deleteபுத்தாண்டு வாழ்த்துக்கள். வளம் பெருகட்டும் அய்யா.
ReplyDeleteபுத்தாண்டு நல்வாழ்த்துகள் !நன்றி !
Deleteஇனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
ReplyDeletesubbu thatha
புத்தாண்டு நல்வாழ்த்துகள் !நன்றி !
Deleteபுத்தாண்டு செய்யும். நம்புவோம். மகாமகம் காணும் 2016இல் ஐந்தாமாண்டு நிறைவு பெறும் எனது முதல் வலைப்பூவைக் காண அழைக்கிறேன். http://ponnibuddha.blogspot.com/2016/01/blog-post.html
ReplyDeleteபுத்தாண்டு நல்வாழ்த்துகள் !நன்றி !
Deleteபுலவர் அய்யாவுக்கு நன்றி ! எனது உளங்கனிந்த புத்தாண்டு – 2016 நல் வாழ்த்துக்கள்!
ReplyDeleteபுத்தாண்டு நல்வாழ்த்துகள் !நன்றி !
Deleteஅன்புள்ள பெரும்புலவர் அய்யா,
ReplyDeleteஇன்னல் போக்கி இனிய புத்தாண்டை வரவேற்கும் அருமையான கவிதை.
புத்தாண்டு வாழ்த்துகள்!
த.ம.8
புத்தாண்டு நல்வாழ்த்துகள் !நன்றி !
Deleteஇனிய புத்தாண்டு வாழ்த்துகள் ஐயா!
ReplyDeleteதீங்கின்றி மாரியும் பெய்ய- எங்கள்
தென்னகம் பாரினில் உய்ய
பாங்குடன் பாடல் செய்தீர்- உங்கள்
பாவினை ஆசியால் நெய்தீர்
ஓங்கிடு மரபினில் செய்யுள் -இங்கே
உம்போல் உரைப்பவர் உண்டோ?
ஆங்கிலப் புதியதோர் ஆண்டில்- இன்னும்
ஆயிரம் கவிதைகள் தாரீர்!
புத்தாண்டு நல்வாழ்த்துகள் !நன்றி !
Deleteஇனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்!
ReplyDeleteஇனிய 2016 இல் எல்லாம் சிறப்பாக அமைய எனது வாழ்த்துகள்!
புத்தாண்டு நல்வாழ்த்துகள் !நன்றி !
Deleteகவிதை அருமை ஐயா....
ReplyDeleteதங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
புத்தாண்டு நல்வாழ்த்துகள் !நன்றி !
Deleteபுத்தாண்டு வாழ்த்துக்கள் ஐயா
ReplyDeleteபுத்தாண்டு நல்வாழ்த்துகள் !நன்றி !
Deleteஇனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் அய்யா!
ReplyDeleteபுத்தாண்டு நல்வாழ்த்துகள் !நன்றி !
Deleteவணக்கம் ஐயா!
ReplyDeleteஅருமையான கவிதை!
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
பிறந்திருக்கும் புத்தாண்டிலாவது நம் மொய் கணக்கு சரியாகட்டும் ,என் தளத்தில் உங்களால் வாக்களிக்க இயலவில்லை உங்கள் தளத்தில் வாக்களித்து முடிப்பதற்குள் என் மண்டைக் காயுதே :)
ReplyDeleteஉங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் அய்யா.
ReplyDeleteஅருமையான கவிதை. அனிவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் ஐயா ...!
ReplyDelete