Thursday, December 24, 2015

முகநூல் பதிவுகள்!




கெடுதலை செய்த மழை ஓய்ந்து விட்டது! இட்ட பயிர் அழிந்து விட்டது என்றாலும் வள்ளுவன் ஒரு குறளில் சொன்ன பாதி முடிந்தது! இனி மறுபாதி நடக்க வேண்டுமல்லவா! நீர் நிலைகள் நிரம்பி வழிகிறது ! விவசாயம் செழிக்க என்ன வழி!? உழவன் பாடுபட, வேண்டிய உதவிகளை மத்திய .மாநில அரசுகள் ஆவன உடனே செய்ய வேண்டும் அப்பணி விரைந்து நடந்தால்தான் விலைவாசி விலை குறையும் மக்கள் ஒரளவாது நிம்மதி காண்பர்!

குற்றம் ஏதும் இல்லாதவனாக மக்களுக்கு நன்மை செய்து முறையாக ஆளும் அரசனை அவன் நாட்டு மக்கள் மட்டுமல்ல உலகமே சுற்றமாக எண்ணி மகிழ்ந்து பாராட்டும் என்பது வள்ளுவர் வாக்கு!

கெடுதல் வருவதில் இரண்டு வகை ! ஒன்று செய்யக் கூடாத வேலைகளை செய்வதனாலும் வரும்! அடுத்தது செய்ய வேண்டிய செயல்களை உரிய காலத்தில் செய்யாமல் விடுவதாலும் வரும் இன்று சென்னை அழிவுகுக் காரணமே இவைதான் ! ஆக்கிரம்பை தடுக்காததோடு உரிய காலத்தில் செய்ய வேண்டிய பணிகளை செய்ய தவறியது தான்

புலவர்  சா  இராமாநுசம்

10 comments:

  1. நல்ல தருணத்தில் அவசியமான கருத்து ஐயா அருமை
    தமிழ் மணம் 1

    ReplyDelete
  2. சுருக்கமாக ஆயினும்
    மிகச் சரியாக கூர்மையாக
    வாழ்த்துக்களுடன்....

    ReplyDelete
  3. இனியாவது விழித்துக் கொள்வார்களா?

    ReplyDelete
  4. வணக்கம் புலவர் ஐயா !

    சிந்திக்கத் தெரிந்த மனிதனிடத்தில் சில கேள்விகள் கேட்டாலே பதில் இல்லை இங்கே பல்லாயிரம் கேள்விகள் இருக்கின்றன பதிலுக்கு எங்கே போவார்கள்??????????

    ReplyDelete
  5. இனியாவது நல்லது நடக்கட்டும் ஐயா
    தம+1

    ReplyDelete