Tuesday, December 22, 2015

முறையல்ல முறையல்ல மத்திய அரசே-மக்கள் முடமாகி விட்டாரே மத்திய அரசே!



முறையல்ல முறையல்ல மத்திய அரசே-மக்கள்
முடமாகி விட்டாரே மத்திய அரசே
குறைசொல்லும் நோக்கமல்ல மத்திய அரசே-நெஞ்சக்
குமுறலாம் ஆக்கமிது மத்திய அரசே
கறையாகும் கறையாகும் மத்திய அரசே –உடன்
கண்ணீரைத் துடைப்பிரா மத்திய அரசே
நிறைவான நிதிதன்னை மத்திய அரசே-துயர்
நீங்கிட உதவுங்கள் மத்திய அரசே


காலத்தில் உதவாது மத்திய அரசே –மேலும்
காலத்தைக் கடத்தாதீர் மத்திய அரசே
ஆலத்தை உண்டார்க்கு மத்திய அரசே –தேவை
அவசர சிகிச்சைதான் மத்திய அரசே
உயிர்மட்டும் மிஞ்சிட மத்திய அரசே-மாற்று
உடைகூட இல்லாது மத்திய அரசே
வயிர்மட்டும் உணவுக்கு மத்திய அரசே-ஏனோ
வைத்தானோ இறைவன் மத்திய அரசே

புலவர் சா இராமாநுசம்

16 comments:

  1. மத்திய அரசு செவி சாய்க்குமா?
    இயற்கை இடர்பாட்டை நேர்செய்யுமா?
    புலவர் அய்யாவே தங்களது வேண்டுகோள் ஏற்புடையதே!
    ஏற்கப் பட வேண்டும்.
    த ம +
    நட்புடன்,
    புதுவை வேலு

    ReplyDelete
  2. வேதனையை எழுத்தில் உணரமுடிகிறது.

    ReplyDelete
  3. வேதனை வார்த்தைகள் ஐயா
    நல்லதே நடக்கட்டும்
    தம+1

    ReplyDelete
  4. மத்திய அரசாவது ஏதாவது செய்யாதா என்னும் ஆதங்கம் தெரிகிறது

    ReplyDelete
  5. அருமை ஐயா
    புலவரின் குரல் கேட்டால் நலமே மக்களுக்கு....
    தமிழ் மணம் 4

    ReplyDelete
  6. முறையல்ல முறையல்ல என்று எத்தனை முறை முறையிட்டாலும் செவிடர்கள் காதில் ஏறாதய்யா.......

    ReplyDelete
  7. காலத்தினாற் செய்த உதவி என்ற குறளின் வழி நடக்குமா மத்திய அரசு ?

    ReplyDelete
    Replies
    1. கடந்த மூன்று தினங்களாக தங்கள் வலையில் மறுமொழியோ ஓட்டோ போட இயலவில்லை !ஏன்? கவனுக்க!

      Delete
  8. ஒட்டு மொத்த தமிழர்களின்
    உணர்வாக அமைந்த கவிதை அருமை

    ReplyDelete
  9. அவர்களுக்கு கேட்குமா?
    செவிடர்கள் காதில் ஊதப்படும் சங்காகுமா?

    ReplyDelete