முறையல்ல முறையல்ல மத்திய அரசே-மக்கள்
முடமாகி விட்டாரே மத்திய அரசே
குறைசொல்லும் நோக்கமல்ல மத்திய அரசே-நெஞ்சக்
குமுறலாம் ஆக்கமிது மத்திய அரசே
கறையாகும் கறையாகும் மத்திய அரசே –உடன்
கண்ணீரைத் துடைப்பிரா மத்திய அரசே
நிறைவான நிதிதன்னை மத்திய அரசே-துயர்
நீங்கிட உதவுங்கள் மத்திய அரசே
காலத்தில் உதவாது மத்திய அரசே –மேலும்
காலத்தைக் கடத்தாதீர் மத்திய அரசே
ஆலத்தை உண்டார்க்கு மத்திய அரசே –தேவை
அவசர சிகிச்சைதான் மத்திய அரசே
உயிர்மட்டும் மிஞ்சிட மத்திய அரசே-மாற்று
உடைகூட இல்லாது மத்திய அரசே
வயிர்மட்டும் உணவுக்கு மத்திய அரசே-ஏனோ
வைத்தானோ இறைவன் மத்திய அரசே
புலவர் சா இராமாநுசம்
மத்திய அரசு செவி சாய்க்குமா?
ReplyDeleteஇயற்கை இடர்பாட்டை நேர்செய்யுமா?
புலவர் அய்யாவே தங்களது வேண்டுகோள் ஏற்புடையதே!
ஏற்கப் பட வேண்டும்.
த ம +
நட்புடன்,
புதுவை வேலு
நன்றி!
Deleteவேதனையை எழுத்தில் உணரமுடிகிறது.
ReplyDeleteநன்றி!
Deleteவேதனை வார்த்தைகள் ஐயா
ReplyDeleteநல்லதே நடக்கட்டும்
தம+1
நன்றி!
Deleteமத்திய அரசாவது ஏதாவது செய்யாதா என்னும் ஆதங்கம் தெரிகிறது
ReplyDeleteநன்றி!
Deleteஅருமை ஐயா
ReplyDeleteபுலவரின் குரல் கேட்டால் நலமே மக்களுக்கு....
தமிழ் மணம் 4
நன்றி!
Deleteமுறையல்ல முறையல்ல என்று எத்தனை முறை முறையிட்டாலும் செவிடர்கள் காதில் ஏறாதய்யா.......
ReplyDeleteநன்றி!
Deleteகாலத்தினாற் செய்த உதவி என்ற குறளின் வழி நடக்குமா மத்திய அரசு ?
ReplyDeleteகடந்த மூன்று தினங்களாக தங்கள் வலையில் மறுமொழியோ ஓட்டோ போட இயலவில்லை !ஏன்? கவனுக்க!
Deleteஒட்டு மொத்த தமிழர்களின்
ReplyDeleteஉணர்வாக அமைந்த கவிதை அருமை
அவர்களுக்கு கேட்குமா?
ReplyDeleteசெவிடர்கள் காதில் ஊதப்படும் சங்காகுமா?