Friday, December 18, 2015

வெட்கப்படுவதா!? வேதனைப் படுவதா!



பதவி ஒன்றே குறிக்கோள் இன்றைய தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளுக்கு! இதில் எந்த கட்சிகளும் விதிவிலக்கல்ல! அல்லல் பட்டு ஆற்றாது இன்னும் கண்ணீர் விடும் மக்களின் கண்ணீரைத் துடைக்க அனைத்து கட்சிகளும் இணைந்து பாடுபட முயலாமல் வரும் தேர்தலில் வெற்றி பெற யாரோடு யார் சேர்வது என்ற கூட்டணி பேரம் தொடங்கி விட்டது ! இதனைக் கண்டு வெட்கப்படுவதா!? வேதனைப் படுவதா!

புலவர்  சா  இராமாநுசம்

22 comments:

  1. ஹும் இதுதானே ஐயா நடக்கின்றது. இவர்களா மக்களாகிய நம்மைக் காப்பாற்றப் போகின்றார்கள்??!! மாற்றம் நிகழ வேண்டும். மக்கள் நினைத்தால் மாற்றம் நிகழலாம்..ஐயா

    ReplyDelete
  2. சென்னை வெள்ளத்தினால் ஏற்பட்ட துன்பங்கள் இன்னமும் நீங்கியபாடு இல்லை. வளசரவாக்கம் முதல் சாலிகிராமம் வரை சாலையின் இருபுறங்களிலும் சாக்கடை நீர் தேங்கி இருக்கிறது. புழுதிப் புயலாக இருக்கிறது.
    துப்புரவு வேலைகள் துரிதமாக நடப்பதாகத் தெரியவில்லை.

    இந்த நிலையில் ஒவ்வொரு அரசியல் கட்சியும் தனி மனிதனும் சமூக அமைப்புகளும் எவ்வாறு மக்கள் துயரினைத் துடைக்க இயலும் , அதற்காக எப்படி உதவ முடியும் என்ற எண்ணங்களை நீக்கி, வரும் தேர்தல் ஒன்றே குறியாக, அதை மனதில் கொண்டே பேசி வருவது வருந்தத் தக்கது.

    இன்னும் சொல்லப்போனால், சென்னையில் ஏற்பட்ட பேரிடருக்கு சற்றும் இணைப்பிலாத விஷயங்களை முன்னிலைப் படுத்தி, மக்களின் கவனத்தையும் திசை திருப்புவது துவங்கி விட்டது. .

    சுப்பு தாத்தா.

    ReplyDelete
    Replies
    1. அய்யா,

      இரு கோடு தத்துவம்
      இதுதானே!

      மக்கள்
      ஓரளவுக்கு இல்லாவிட்டாலும்
      'பேரளவுக்காவது யோசிக்க ஆரம்பித்திருக்கிறார்கள்

      இதை
      மறக்கடிக்கவும்
      மழுங்கடிக்கவும்தான்மிகச்சிறப்பாய் திட்டமிடுதலுடன்
      காரியம் சாதிக்க ஒரு அநாகரிக மனங்கொண்ட கும்பல் பாடுபட்டுக்கொண்டிருக்கிறது..,

      Delete
    2. சுப்புத்தாத்தா எங்கள் இன்றைய இடுகை உங்கள் கருத்தைப் பற்றியதே....

      Delete
  3. வேதனை தேவையில்லை தேர்ந்தெடுத்த நாம் வெட்கப்பட வேண்டும் ஐயா
    தமிழ் மணம் 2

    ReplyDelete
  4. நாம் வெட்கப்பட்டாலும் சரி, வேதனைப்பட்டாலும் சரி, அவர்கள் கவலைப்படப்போவதில்லை.

    ReplyDelete
  5. வல்லமையாய் திறமை செய்யும் ஆட்சி இனி எப்போது வரும்?

    இன்று வெள்ளத்திலும் அரசியல் துர்நாற்றம் வீசுகிறது புலவர் அய்யா!
    த ம +
    நட்புடன்,
    புதுவை வேலு

    ReplyDelete
  6. வாக்கு அறுவடை செய்யத்தானே எல்லா கட்சிக்கும் ஆசை :)

    ReplyDelete
  7. மக்களுக்குத் தேவையானதைச் செய்யாமல் தேர்தல் வெற்றி பற்றி பேசுகிறார்கள் என்றால் எவ்வளவு ஆணவத்தை மக்கள் கொடுத்திருக்கிறோம், ஐயா..வேதனைதான்..மாற்றம் ஒன்றே தேவையானது

    ReplyDelete
  8. இதுதான் அவர்களது உண்மை முகம் ஐயா
    தவறு செய்து வருபவர்கள் நாம்தான்
    தம +1

    ReplyDelete
  9. வெட்க வேதனையோடு கோபமும்.

    ReplyDelete
  10. நாற்காலியைக் காப்பாற்றத் தலைவர்கள்
    நம்ம மக்களை காப்பாற்ற
    கடவுள் தான் வரணும்

    http://www.ypvnpubs.com/

    ReplyDelete