Tuesday, December 15, 2015

திருவினை இழந்தோர் போற்ற –வழிகள் தேடியே புண்ணை ஆற்றும்!



நடந்தது நடந்தது போக- இனியே
நடப்பது நலமாய் ஆக
திடமொடு முடிவு எடுப்பீர் –மக்கள்
தேவையை அறிந்து நடப்பீர்
கடமையாய் எண்ணிச் செயல்பட – சகல
கட்சிகள் இணைந்து புறப்பட
உடமைகள் இழந்த மக்கள் –துயர
உள்ளத்தின் புண்ணை ஆற்றும்


ஒருவரை ஒருவர் சாடி –மேலும்
உரைப்பதால் தீமைக் கோடி
வருவதால் உண்டா பலனே –அதனால்
வாராது மக்கள் நலனே
பெறுவது ஏதும் இல்லை-நாளும்
பெற்றது தீராத் தொல்லை
திருவினை இழந்தோர் போற்ற –வழிகள்
தேடியே புண்ணை ஆற்றும்

புலவர் சா இராமாநுசம்

24 comments :

  1. மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு ,அரசியல்வாதிகள் இதை உணரும் நாள் வெகுதொலைவில் இல்லை :)

    ReplyDelete
  2. சரியாகச் சொன்னீர்கள்.

    தூங்குக தூங்கிற்ச்செயற்பால - தூங்கற்க
    தூங்காது செய்யும் வினை.

    என்று வள்ளுவன் சொன்னது நினைவில் எப்பொழுதும் இருக்கவேண்டும். அதுவும் மக்களை நேரடியாக பாதிக்கும் எந்த ஒரு செயலிலும் மெத்தனமோ அல்லது என்ன ஆகிவிடப்போகிறது என்ற நிலைப்பாடோ இருக்கக் கூடாது.
    subbu thatha

    ReplyDelete
  3. நியாயமான வார்த்தைகள் ஐயா நன்று
    தமிழ் மணம் 2

    ReplyDelete
  4. மக்களுடைய நலனில் அக்கறை கொண்டவர்களாய் அரசியல்வாதிகள் இருப்பார்களேயானால் அந்நாட்டு மக்களுக்கு என்னதான் குறை வந்துவிடும், பேரிடரே நேர்ந்தாலும் கூட?

    ReplyDelete
  5. குறை சொல்லி எந்தப்பலனும் இல்லைதான் அய்யா..

    ReplyDelete
  6. கீதா மதிவாணன் கருத்தோடு நானும் ஒத்துப்போகிறேன்.
    த ம 4

    ReplyDelete
  7. சரியான வரிகள் ஐயா...

    ReplyDelete
  8. சிறப்பான சிந்தனை. நன்றி ஐயா.

    ReplyDelete
  9. திடமோடு முடிவு எடுப்போம்.....அய்யா.......

    ReplyDelete
  10. மிகவும் அருமை ஐயா தொடர வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன்

    ReplyDelete
  11. அன்புள்ள பெரும்புலவர் அய்யா,

    இழந்தது அனைத்தும் மீண்டும் கிடைக்க வேண்டும். இன்றுள்ள கூவம் போல என்றும் வாழ்க சென்னை!

    இயற்கையிடமிருந்து பாடம் கற்றுக் கொள்வோம்...
    இயற்கையை அழிக்காமல் காப்போம்...!

    அருமை!

    த.ம.8

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...