எங்கு காணிலும் குப்பையடா-நம்
எழில்மிகு சென்னை காட்சியடா
பொங்கி வழியும் தொட்டியெலாம்-அதில்
போடுவார் மேலும் எட்டியடா
தங்கும் மழையின் தண்ணீரும்-செல்ல
தடைபட அந்தோ! மிகநாறும்
இங்கே எடுக்க ஆளில்லை-அதை
எடுத்துச் சொல்லியும் பலனில்லை
பாதையில் நடக்கவே வழியில்லை-குப்பை
பரவிக் கிடப்பது பெருந்தொல்லை
வேதனை தீரும் வழிகாண்பீர்-எனில்
வீணே நீரும் பழிபூண்பிர்
சோதனை போல கொசுக்கடியே-எடுத்து
சொல்ல இயலா நெருக்கடியே
நாதம் இசைத்தே படைபோல-எமை
நாடி வருமோர் தினம்போல
தொற்று நோயும் வருமுன்னே-எண்ணித்
தொடங்குவீர் தூய்மைப் பணிதன்னை
மற்றது பின்னர் ஆகட்டும்-குப்பை
மலையென கிடப்பது போகட்டும்
குற்றம் சொல்வது நோக்கமல-இது
குத்தும் கவிதை ஆக்கமல
வெற்றுச் சொல்லும் இதுவல்ல-பட்ட
வேதனை விளைவாம் இதுசொல்ல
அண்மை காலமாய் இவ்வாறே-ஏனோ
அடிக்கடி நடப்பது எவ்வாறே
உண்மை எதுவோ வேண்டாமே-உரியோர்
உணர்ந்தால் போதும் ஈண்டாமே
நன்மை ஒன்றே உடன்தேவை-மா
நகர ஆட்சிக்கு இப்பாவை
சொன்னேன் ஐயா! தவறில்லை-ஆவன
செய்வீர் வேறு வழியில்லை!
புலவர் சா இராமாநுசம்
அருமை ஐயா நல்லதொரு விண்ணப்பமே
ReplyDeleteகருத்துடன் பொதிந்த பாமாலை நன்று
நலம் வாழ்க..
உண்மை
ReplyDeleteஇந்த சமயத்திற்கு தேவையான நல்ல அறிவுரை கவிதை வடிவில், நன்றி ஐயா.
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteஐயா
சொல்லிய விதம் சிறப்பு ஐயா த.ம 3
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
விரைவில் செய்ய வேண்டும் ஐயா...
ReplyDeleteவருமுன்னர் காவாதான் வாழ்க்கை, எரிமுன்னர்
ReplyDeleteவைத்தூறு போலக் கெடும் என்பதை உணர்ந்தால் சரி :)
அருமையான கவிதை யா ஆவன செய்யட்டும் அதிகாரிகள்
ReplyDeleteவாழ்க வளமுடன்
உடனே செய்யவேண்டியது...
ReplyDeleteஅருமையான பா ஐயா.
உடன் ஆற்றிட வேண்டிய பணியினை
ReplyDeleteஅருமையாய் உரைத்தீர் ஐயா
நன்றி
தம +1
இப்போதைக்கு உடனடியாக ஆற்றிட வேண்டிய பணியே இது தான். நோய் எதிர்ப்புக்கு உடனே செய்ய வேண்டிய பணியும்......
ReplyDeleteஇப்போதைய உடனடித் தேவையைத் தாங்கள் உணர்த்திய விதம் அருமை.
ReplyDeleteஉண்மை எதுவோ வேண்டாமே-உரியோர்
ReplyDeleteஉணர்ந்தால் போதும் ஈண்டாமே
சிறந்த பாவரிகள்
சிந்திக்கவைக்கிறது
தொடருங்கள்