கோட்டையை ஆள்வோர் மட்டுமே-இக்
கொடுமையை நீக்க இயலாதே!
எண்ணிப் பாரும் நல்லோரே-நல்
இதயம் படைத்த பல்லோரே
கண்ணில் படுவது வீதியிலே-எங்கும்
காகித பிளாஸ்டிக் குப்பைகளே!
விண்ணில் காற்றில் பறந்திடுமே-வந்து
விரைவாய் முகத்தில் மோதிடுமே!
திண்ணிய முடிவும் எடுப்பீரா-குப்பை
தெருவில் போடவும் தடுப்பீரா!
வீட்டை சுத்தம் ஆக்குதும்-அள்ளி
வீதியில் குப்பையைத் தேக்குவதும்!
கேட்டை நாமே தேடுவதாம்-பிறர்
கேட்பினும் , அவரைச் சாடுவதாம்!
நாட்டைக் கெடுக்கும் நோயன்றோ-தொற்று
நோய்கள் பிறக்கும் தாயன்றோ!
கோட்டையை ஆள்வோர் மட்டுமே-இக்
கொடுமையை நீக்க இயலாதே!
தொட்டி இருக்கும் ஆனாலும்-கையில்
தூக்கிக் கொண்டு போனாலும்!
எட்டி நின்றே குப்பைகளை-தூக்கி
எறிந்து விட்டுச் செல்வாரே!
தட்டிக் கேட்பின் வைவாரே-அந்த
தவறே நாளும் செய்வாரே!
கொட்டிய குப்பையோ உதறிவிட-மிக
குறையின்றி வீதியில் சிதறிவிடும்!
சொன்னால் செய்பவர் சிலபேரே-எவர்
சொல்லினும் கேளார் பலபேரே!
தன்னால் உணர்பவர் இருப்பாரே-சிலர்
தனக்கென என்றும் போவரே!
முன்னாள் அனுபவம் பலவற்றை-இங்க
முறையாய் அதிலே சிலவற்றை!
என்னால் ஏதோ முடிந்தவரை-ஐயா
எழுதினேன் தருவீர் கருத்துரையே!
புலவர் சா இராமாநுசம்
அரசாங்கமும் அனைத்து மக்களும் போற்றும் அளவில் துயருற்றோர்களை ஓடி ஓடி தேடி உயிர் காத்து, உணவு, உடை, மருத்துவம், தூய்மைபடுத்துதல், அத்தியாவசிய பொருள்கள் மற்றும் பல உதவி செய்து வரும் தமிழக முஸ்லீம்கள் இப்பொழுது கடலூரில் வெள்ளத்தால் வீடிழந்தவர்களுக்கு இலவசமாக வீடு கட்டி தருவதாக அறிவிக்கிறார்கள். எங்கள் தொப்புள்கொடி உறவுகளுக்கு சளைக்காமல் கரசேவை செய்வோம்.
ReplyDelete.
1. சொடுக்கி >>>> சென்னை வெள்ள பேரிடரில் தலைவிரித்தாடிய ஜிஹாதிகள். பகுதி 1. << < படிக்கவும்.
.
2. சொடுக்கி >>>> தமிழகத்தில் கொட்டமடிக்கும் இஸ்லாமிய தீவிரவாதிகள். பகுதி 2. <<< படிக்கவும்.
.
3. சொடுக்கி >>>> தமிழக பேரிடரில் தீவிரவாதிகளின் அநியாயங்கள். பகுதி 3. <<< படிக்கவும்
.
4. சொடுக்கி >>>> வெள்ளமே வெட்கப்பட்டிருக்கும் மனிதநேயத்தின் உச்சம் - தட்ஸ்தமிழ் THATSTAMIL. பகுதி 4. <<< படிக்கவும்.
.
5. Posted by S.Raman, Vellore .சொடுக்கி >>>> காவிகளின் கயவாளித்தனம் <<< படிக்கவும்.
.
சொடுக்கி >>>> கடலூரில் வெள்ளத்தால் வீடிழந்த அனைவருக்கும் இலவசமாக வீடு கட்டித்தருகிறோம். பகுதி 5. <<< படிக்கவும்.
.
அரசுதான் எல்லாக் கொடுமைக்கு காரணம் அய்யா... சாதரண கேரிக்கைக்காக போராடும் மக்களை ஒடுக்க ..ஒரு பட்டாளத்தையே இறக்கிவிடும் கோ்ட்டையை ஆள்வோர்களால்தான் செய்ய முடியும் அய்யா.....
ReplyDeleteநூற்றுக்கு நூறு உண்மை ஐயா! தங்களின் நலமறிந்து மகிழ்ச்சியும் ஆறுதலும் அடைகிறோம் - சேட்டைக்காரன்
ReplyDeleteஐயா! வணக்கம்! நலமா? நமது சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்துக்கொள்ள இந்த நாட்டை ஆள்வோரும் உதவட்டும். நாமும் அதற்கு கைகொடுப்போம்.
ReplyDeleteஉண்மை ஐயா. நமது சமூக கடமைகளை அழகாக சொல்லியிருக்கிறீர்கள்.
ReplyDeleteவணக்கம் புலவர் ஐயா !
ReplyDeleteநடைமுறையில் உள்ள சூழல் பிரச்சனைகளை தெளிவாகச் சொல்லிவிட்டீர்கள் ஏற்பதும் திருந்தி நடப்பதும் மக்கள் கைகளில்
மிகவும் ரசித்த கவிதை இது தொடர வாழ்த்துக்கள் ஐயா வாழ்க வளமுடன்
வணக்கம் ஐயா,
ReplyDeleteஉண்மை ஐயா, இது தான் நிதர்சனம். நாம் நம் வீட்டைச் சுத்தம் செய்கிறோமே, வெளியிலும் நாம் தானே சுத்தம் செய்யனும், தாங்கள் நலமுடன் இருப்பது மகிழ்ச்சி ஐயா,தொடருங்கள் ஐயா, நன்றி.
வணக்கம்
ReplyDeleteஐயா
உண்மையான வரிகள் வாழ்த்துக்கள். த.ம.6
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நமது சமூக கடமையை செய்யாமல் விட்டால் .இயற்கை அதை உணர்த்தி விடுகிறது !
ReplyDeleteவணக்கம் ஐயா அவசியமான நேரத்தில் அழகிய அறிவுரை அரசு மட்டுமே தீர்க்க முடியாதவைதான் நாமும் இணைய வேண்டியது அவசியம் அருமையான படைப்பு.
ReplyDeleteபிறரைக் குறைகூறிச் சுட்டும் விரலின் பின்னே மூன்று விரல்கள் நம்மையே சுட்டுவதை முதலில் அறிய வேண்டும் ஐயா
ReplyDeleteஉண்மைதான் ஐயா
ReplyDeleteதம +1
உண்மை தான் ஐயா. அனைவரும் சேர்ந்து செயல்பட வேண்டும்.
ReplyDeleteசிறந்த பாவரிகள்
ReplyDeleteசிந்திக்கவைக்கிறது
தொடருங்கள்