Friday, November 6, 2015

வள்ளுவரும் வகுத்தநெறி வழியில் சென்றே-முயன்று வாழ்வார்க்கு வாராதாம் தீமை ஒன்றே!



வள்ளுவரும் வகுத்தநெறி வழியில் சென்றே-முயன்று
வாழ்வார்க்கு வாராதாம் தீமை ஒன்றே
உள்ளுவரேல் உண்மைகளை ஓர்ந்தும் நன்றே-என்றும்
உணர்ந்தாலே போதுமென வாழ்வீர் இன்றே
தெள்ளுதமிழ் மொழிதனிலே தீட்டி'நல்  மறையே-உயர்
திருக்குறளே துணையென்றால் வாழ்வில்வரா குறையே
தள்ளுவனத் தள்ளி கொள்ளுவனக் கொள்வீர்-இதுவே
கொள்கையெனச் சொல்வீர் குறையின்றி வெல்வீர்!


புலவர் சா இராமாநுசம்

15 comments:

  1. "திருக்குறளே துணையென்றால்
    வாழ்வில் வரா குறையே"
    குறளை போன்றே புலவர் அய்யாவின் கவிதையும் சிறப்பு!
    நன்றி அய்யா!
    த ம +
    நட்புடன்,
    புதுவை வேலு

    ReplyDelete
  2. முதலில் போட்ட பின்னூட்டத்தில் ஒரு எழுத்துப்பிழை வந்து விட்டது. அதனால் அதை நீக்கினேன். உங்கள் வீட்டு முகவரி சொல்ல முடியுமா?

    drpkandaswamy1935@gmail.com

    ReplyDelete
  3. வணக்கம்
    ஐயா
    அற்புதமான விளக்கம் கண்டு மகிழ்ந்தேன் த.ம3
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  4. நல்லதோர் கவிதை. குறள் வழி நடப்போம்......

    ReplyDelete
  5. வள்ளுவர் காட்டிய வழி வாழ்க்கை வாழ்ந்தால்
    தள்ளியே போய்விடும் துன்பமே... உண்மைதான் ஐயா!
    மிக அருமை!

    ReplyDelete
  6. #"திருக்குறளே துணையென்றால்
    வாழ்வில் வரா குறையே"#
    அப்ப நானு ?எனக் கேட்கிறாள் என் திருமதி :)

    ReplyDelete
  7. வள்ளுவர் வகுத்த நெறி வாழ்வோம்
    நன்றி ஐயா
    தம +1

    ReplyDelete
  8. அருமை ஐயா! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  9. தீபாவளி வாழ்த்துக்கள்.

    subbu thatha
    www.vazhvuneri.blogspot.com

    ReplyDelete

  10. இனிய தீப திருநாள் வாழ்த்துகள்
    நட்புடன்,
    புதுவை வேலு

    ReplyDelete
  11. நன்றி! தங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும் எனது உளங்கனிந்த தீபாவளி நல் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  12. ஐய்யனின் வழி நெறி அல்லவா! அதன் வழி நடப்போம் . சிறப்பான வரிகள் ஐயா.

    ReplyDelete