போதுமடா சாமி –நாங்க
பொழைக்கவழி காமி
சேதமதிக மாச்சே –ஏதும்
செய்யமுடி யாபோச்சே
அளவுமிஞ்சி போனா –எதிலும்
அழிவுவரும் தானா
களவுபோன பொருளே –உடன்
காட்டுமுந்தன் அருளே
மேலும்வரு மென்றே-பயம்
மேலும்வர நன்றே
மூளுமச்சம் நெஞ்சில்-தீயை
மூட்டுவதா பஞ்சில்
கருணைகாட்டு சாமி –உடன்
காக்கவாரும் பூமி
வருணதேவன் பாரும் –எங்கள்
வாழ்கைதனை காரும்
புலவர் சா இராமாநுசம்
அருமை ஐயா...
ReplyDeleteமிக்க நன்றி
Deleteமனதில் பட்ட துயரினை வார்த்தைகளாய் வெளிப்படுத்திய கவிதை. திக்கற்றோருக்கு தெய்வமே துணை.
ReplyDeleteமிக்க நன்றி
Delete"நாங்கள்"
ReplyDeleteநிராயுதபாணியர் ஆகி விட்டோம்..
இந்த வருடம் போய்
அடுத்த வருடம் வா!
முகநூலில் மழைக்கு நான் எழுதியிருந்த "கவிதை"(!)யின் பிற்பகுதி!
தம +1
மிக்க நன்றி
Deleteவணக்கம் புலவரே !
ReplyDeleteவருணதேவனுக்கோர் பாடல் அருமை ஐயா !
காலமாற்றம் இங்கே - புதுக்
கண்டுபிடிப்பின் பங்கே !
மிக்க நன்றி
Deleteஇனியெனும் தீருமென நம்புவோம் ஐயா
ReplyDeleteதமிழ் மணம் 2
மிக்க நன்றி
Deleteவருணன் கர்ணன் அவதாரம் எடுத்து விட்டானோ?
ReplyDeleteகொட்டும் மழையை கொடையாய் கொடுக்கின்றானே?
உணர்ந்து விட்டோம் அய்யா!
"போதும் என்றே மனம்
பொன் செய்யும் மருந்து"
உணர்த்தத் தான் வந்தானோ?
இருப்பினும் நாஷ்ட ஈடு போதவில்லையே?
நன்றி அய்யா!
த ம +
நட்புடன்,
புதுவை வேலு
மிக்க நன்றி
Deleteஐயா! தங்களின் வேண்டுகோளுக்கு சக்தி உண்டு என்பதால் வருண பகவான் தனது பணியை சற்றே நிறுத்திவைப்பார் என நம்பலாம்.
ReplyDeleteமிக்க நன்றி
Deleteஅமிர்தவர்ஷிணி ராகம் பாடினால் மழை வரும் என்பார்கள் என்ன ராகம் பாடினால் மழை ஓயும். அந்த ராகத்தில் உங்கள் கவிதையைப் பாடச் சொல்ல வேண்டும் மிகவும் அவதிப்பட்டு விட்டீர்களா.?
ReplyDeleteஅமிர்த வர்ஷிணியை அபஸ்வரமாகப் பாடினால் நிற்குமோ!
Deleteமிக்க நன்றி
Deleteஅருமை ஐயா......
ReplyDeleteஇப்பொழுது பெய்த மழை இனிதில்லை என்றாலும் தங்களின் பாடல் இனிது.
ReplyDeleteதொடர்கிறேன் ஐயா.
நன்றி
மிக்க நன்றி
Deleteஇந்த வருடம் வருணதேவன் வாட்டி எடுத்து விட்டார் :)
ReplyDeleteமிக்க நன்றி
Deleteவருண பகவான் இனி காப்பார், நம்புவோம்.
ReplyDeleteமிக்க நன்றி
Deleteஅந்தக் கடவுளுக்கே..மனுசன நம்பிதான் பொழப்பு ஓடுது... இதுல அந்தக் கடவுளு மனிசன் பொழைக்க வழிகாட்டுமா... அய்யா..
ReplyDeleteமிக்க நன்றி
Deleteவணக்கம் ஐயா,
ReplyDeleteதங்கள் கவி வரிகள் இனிமை, மழைக்கும் ,
நன்றி.
மிக்க நன்றி
Deleteபெய்ய வேண்டிய காலம் போய் நிற்க வேண்டும் காலம் வந்ததே ஐயா!
ReplyDeleteமழையின் பாதிப்பால் பிறந்த கவிதை....மனதை வருத்துகின்றது அய்யா..
ReplyDelete