உறவுகளே வணக்கம்!
இடைவிடாது பெய்த கனமழையால் தமிழகத்தில் பல ஏரிகள் நிரம்பியும் வழிவதோடு உடைந்தும் போவதாகச். செய்திகள் வரும் நிலையில் சென்னக்குக் குடிநீர் வழங்கும் ஏரிகள்( புழல்.பூண்டி.சோழவரம் செம்பரம்பாக்கம) மட்டும் நிரம்பாததோடு நான்கில் ஒருபங்கு அதாவது மாநகரின் மூன்றுமாத தேவைக்கு உரிய நீர்தான் மொத்தமாக வந்துள்ளதாகக்
குடிநீர் வாரியம் அறிவித்துள்ள செய்தி மிகவும் வேதனையானது! நீர்பிடிப்பு பகுதிகளில் நல்ல மழை பெய்தும் ஏரிகள் நிரம்பா நிலைக்கு . யார்,என்ன காரணம் நீர் வரும் வழிகள் அனைத்தும் ஆக்கிரமப்பு செய்யப்பட்டுள்ளனவா!!!? அவ்வாறு இருந்தால் உடன் அவற்றை அகற்ற அதிகரிகளும் அரசும் செயல்பட வேண்டும்
மாண்புமிகு முதல்வர் அவர்கள் உடன் தலையிட்டு ஆய்வு செய்ய ஆணையிட வேண்டுகிறோம்!

உறவுகளே!இன்று பெய்யும் கடுமையான மழையினால் நாம் பெற்றுவரும் சேதங்கள்
அனைத்தையும் பார்க்கும் போது வள்ளுவன் கூறிய
குறள் தான் நினைவிற்கு வருகிறது!
குற்றமோ, தவறோ, துன்பமோ எதுவானாலும் அது வருவதற்கு முன்
பாதுகாப்பினை
தேடிக்கொள்ள வேண்டும் இலையென்றால்
எரியும் தீயின் முன்னால் வைக்கப் பட்ட வைக்கோல் போல எரிந்து விடும்
இதுபோலத்தான் இன்று தமிழக அரசு செய்து வரும் வெள்ள நிவாரண பணிகளின் நிலையும் உள்ளன!
வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை யெரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும்- குறள்

புலவர் சா இராமாநுசம்
ஆட்சிகள் மாறுகிறதே ஒழிய உருப்படியான ஆணைகள், வேலைகள் இது விஷயத்தில் எந்த அரசும் எடுப்பதில்லை என்பது வேதனையான விஷயம். ஆந்திராவும், கர்நாடகாவும் தங்கள் ஆற்றுப் படுகைகளில் இயந்திரம் கொண்டு மணல் அள்ளுவதைத் தடை செய்திருக்க, நம்மூரிலோ அரசாங்கமே மணல் அள்ளுகிறது. தவிர கொள்ளையரும்.
ReplyDeleteஏரிகளில் ஆக்கிரமிப்பாளர்கள். வாய்க்காலின் மீது சாலை ஆக்கிரமிப்பு..தயக்கமின்றி குப்பை போட்டு நகரையும் ஏரிகளையும் நாசமாக்கும் பொதுமக்கள்.. யாரைச் சொல்லி என்ன பயன்!
நல்ல விடயத்தை குறளுடன்.... குரல் கொடுத்த விதம் நன்று ஐயா
ReplyDeleteதமிழ் மணம் 2
வாழ்வில் பக்குவம் பெற தாங்கள் கூறிய ஒப்புமை, கவிதை வடிவில், அருமை.
ReplyDeleteவணக்கம் புலவர் ஐயா !
ReplyDeleteமிக நல்ல தத்துவத்தினைக் குறள் மூலம் சொல்லி இருக்கீங்க
ஐந்தாண்டுக்கு ஒருமுறைதான் அரசியல் வாதிகளுக்கு விழிப்பு வரும்
அதற்கிடையில் உலகே அழிந்தாலும் ஒன்றுமே காணார் !
நன்றி வாழ்த்துக்கள்
தமிழ்மணம் +1
உரைநடையில் ஒலிக்கும் தங்களின் குரலை இன்றே கேட்கிறேன்.
ReplyDeleteஉழுகின்ற நேரத்தில் ஊருக்குப் போய்விட்டு அறுக்கிற நேரத்தில் அரிவாளுடன் வருகின்றது அரசு...........ஒவ்வொருமுறையும்.
மிகப் பொருத்தமான குறள்.
தொடர்கிறேன் ஐயா.
நன்றி
தங்களது வேண்டுகோள் ‘செவிடன் காதில் ஊதிய சங்கு’ போல் ஆகாமல் இருந்தால் சரி.
ReplyDeleteநல் மாண்புடையோர் கேட்க வேண்டுமே
ReplyDeleteநன்றி அய்யா
நாட்டுநடப்பை, குறிப்பாக நீர்நிலைகள் மீதுள்ள ஆக்கிரமிப்பு பற்றிய உங்களது ஆதங்கக் கட்டுரையைப் படித்தவுடன், நடவடிக்கை எடுக்க வேண்டிய அதிகாரிகள் என்ன செய்து கொண்டு இருக்கிறார்கள் என்ற எண்ணமே மேலிட்டது.
ReplyDeleteநான் சிறுவனாக இருந்தபோது, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆற்றின் கரைகளில் அடிக்கடி ரோந்து வருவதையும், ஆக்கிரமிப்பு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுத்ததையும் பார்த்து இருக்கிறேன். காவிரி ஆற்றின் இருகரைகளிலும் வண்டிப்பாதைகள் இருந்தன. இப்போது கரைகள் மீது இருக்கும் ஆக்கிரமிப்பை யாரும் கண்டு கொள்வதே கிடையாது. பாசன காலத்தில் தண்ணீர் வரவும் வழியில்லை; வெள்ளக் காலத்தில் வெளியேறவும் வழியில்லை. வாய்க்கால், ஆறு, குளம், ஏரி பாசன வழிகள் யாவும் அடைபட்டுக் கிடக்கின்றன.
உண்மைதான் அய்யா...இங்கும் இதே நிலை தான்..குளங்கள் நிறைந்த புதுகையில் குளங்களுக்கு நீர்வரும் வழி அடைத்து விட்டனர்...சில குளங்களையே அழித்து விட்டனர்..
ReplyDeleteதங்களின் பதிவு வாழ்க்கையின் பக்குவத்தை அருமையாக உணர்த்துகிறது
ReplyDeleteசார்.
அருமை ஐயா...
ReplyDeleteஉண்மை உரக்க சொல்கிறது ஐயா...
வணக்கம்
ReplyDeleteசிறப்பான விளக்கம்... ஐயா த.ம11
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வேதனையான விசயம் ஐயா..மழை இல்லை, மழை என்று வருந்தி, இப்பொழுது வந்த மழையைப் பயன்படுத்தத் தெரிய(முடிய)வில்லை
ReplyDeleteசிறந்த பகிர்வு
ReplyDeleteதங்களின் கருத்து போய் சேர வேண்டியவர்களுக்கு சேர்ந்தால் மிகவும் நல்லது !
ReplyDeleteஏரி குளங்களை எல்லாம் தூர்த்துக் கட்டிடங்களாக்கிவிட்டு
ReplyDeleteபேய் மழை என்கிறோம்
நன்றி ஐயா
தம +1
காலம் ஒருநாள் மாறும்,நம் கவலைகள் யாவும் தீரும்! நம்பிக்கைதான்!
ReplyDeleteஇங்கேயும் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி புலவர் ஐயா.
ReplyDelete