Tuesday, November 10, 2015

மாண்புமிகு பிரதமருக்கு எதிரி யாக-இங்கே மற்றவர்கள் யாருமில்லை உதிரி யாக!


பீகாரில் பா.ஜ. கா தோல்வி! காரணம் பற்றி ஆய்வு!பத்திரிக்கை  செய்தி!
கடந்த மார்சு மாதமே நான் எழுதிய கவிதை இது பிரதமர் உரிய நடவடிக்கை எடுத்திருந்தால் ......!
மீள்பதிவுதான்! படித்துப் பாருங்கள்!

மாண்புமிகு பிரதமருக்கு எதிரி யாக-இங்கே
மற்றவர்கள் யாருமில்லை உதிரி யாக
தாண்டவமே ஆடுவது அவரின் கட்சி- நாளும்
தவறாகப் பேசுவதே அதற்கே சாட்சி!


முன்னுக்குப் பின்முரணாகக் காரண மின்றி –பலரும்
முறையற்றுப் பேசுவதும் சாரமே யின்றி!
என்னவெனக் கேட்கின்றார் நல்லோர் தாமே-பிரதமர்
ஏற்றாரா? அவரமைதி ! சம்மத மாமே!

கட்சியிலே கட்டுப்பாடு அணுவு மில்லை –யார்
காரணமோ? ஆய்வதிலே பயனு மில்லை!
ஆட்சியிலே அமைச்சருள்ளும் இணைப்பே யில்லை –பிரத
அமைச்சருக்கு இதனால் ஆமே தொல்லை!

அடக்குவதே நன்றாகும் பிரதமர் உடனே-நன்கு
ஆள்வதற்குச் செய்வதவர் உரிய கடனே!
நடப்பதிலே எதுவுமே தெளிவு, காணோம் – மக்கள்
நம்பிக்கைக் குறைகிறது தீர்வு வேணும்!

புலவர் சா இராமாநுசம்

15 comments :

  1. இன்று நடந்து விட்டது ஐயா.
    தமிழ் மணம் 1

    ReplyDelete
  2. அடக்குவதா ,அவரே அடங்கி நடக்கிறாரே :)

    ReplyDelete
  3. உண்மைதான் அய்யா நீங்கள் கூறியது...

    ReplyDelete
  4. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினற்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள் ஐயா!

    ReplyDelete
  5. தோல்விக்கு தோரணம் கட்டினாரே!
    தோள்கொடுக்காத கட்சிகளை மிரட்டினாரே!
    நாள்தோறும் நற்சிந்தை பெறுவாராயின்,
    நல்லாட்சி நடுவில் என்றும் நிலைக்கும்.

    உள்ளதை புலவர் அய்யா உள்ளத்தால் உணர்ந்து
    தந்த கவிதை வெகு சிறப்பு!
    நன்றி!
    த ம +
    நட்புடன்,
    புதுவை வேலு

    ReplyDelete
  6. அருமை
    உண்மை
    நன்றி ஐயா
    தம+1

    ReplyDelete
  7. நாட்டுநடப்பை அப்படியே கவிதையில் காணச்செய்துவிட்டீர் ஐயா..

    ReplyDelete
  8. இப்போது நடந்துவிட்டது மட்டுமல்ல. இனியும் தொடரும். நன்றி.

    ReplyDelete
  9. பின் வருவதை முன் கூட்டியே சொல்லிய கவிதை அருமை அய்யா!
    த ம 8

    ReplyDelete
  10. நுணலும் தன் வாயால் கெடும்...

    சரியாகச் சொல்லி இருக்கீங்க புலவர் ஐயா.

    தங்களுக்கும் தங்களது குடும்பத்தினருக்கும் இனிய தீப ஒளி திருநாள் நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  11. உங்கள் அனுபவம் பேசியிருக்கிறது ஐயா

    ReplyDelete
  12. வணக்கம்
    ஐயா

    அற்புதமாக உள்ளது வாழ்த்துக்கள் த.ம11
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  13. வணக்கம் புலவர் ஐயா !

    வரப்போவதை முன்கூட்டியே சொல்லி இருக்கின்றீர்கள் தங்கள் அனுபவம் அறிவுக்கு முன்னால் இப்போதைய அரசியலாளர்கள்
    இன்னும் மழலைதான் ஐயா !

    கவிதை அழகு அருமை தொடர வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

    ReplyDelete
  14. நுணலும் தன்வாயால் கெடும் என்பதை எவ்வளவு சரியாகச் சொல்லியிருக்கின்றீர்கள் ஐயா!
    அருமை! நடந்தே விட்டதே!
    தாமத வருகைக்கு மன்னிக்கவும் ஐயா...

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...