Friday, October 9, 2015

இடையில் இருப்பது ஒருநாளே-காண எழுமீன் ! பதிவர் திருநாளே!





இடையில்  இருப்பது  ஒருநாளே-காண
      எழுமீன்  !  பதிவர்  திருநாளே!
தடையில் சிறந்த   ஏற்பாடே –இன்னும்
       தயக்கம்  எதற்கோ  புறப்பாடே!
படையில்  சிறந்த   படையாக –புதுகை
     பதியில்   பதிவர்  நடையாக!
அடைமழை  போன்றே  வருவீராம்-உலகம்
      அறிந்திட !  வாய்ப்பு  தருவீராம்!

மேலும்  எழுதிட  வேண்டாமே –இந்த
     மேதினி  அறிந்திட  ஈண்டாமே!
நாளும்  வலைவழி  சந்தித்தோம் நாட்டின்
       நலமது  ஒன்றே  சிந்தித்தோம்!
தோளும்  தோளும் தழுவிடவே- நம்முள்
      தோழமை  உணர்வு   பெருகிடவே!
ஆளும் அரசுகள்  உணரட்டும்-பொங்கும்
      அலையென பதிவர்கள்  திரளட்டும்!

புலவர்  சா இராமாநுசம்

31 comments:

  1. அருமை ஐயா சென்று வென்று வாருங்கள் விழா சிறப்புற எமது வாழ்த்துகள் ஐயா எமது பதிவில் ஒரு கோரிக்கை வைத்துள்ளேன் கவனிக்க... நன்றி
    தமிழ் மணம் 1

    ReplyDelete
  2. கவிதை அருமை ஐயா...
    விழா சிறக்க வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. மிக மிக அருமை ஐயா!

    தோழமைகள் சிறக்கட்டும்!
    தொடரும் உறவுகள் வலுக்கட்டும்!

    விழா சிறக்க இங்கிருந்தே வாழ்த்துகிறேன்.!
    த ம 2

    ReplyDelete
  4. இதோ கிளம்பி விட்டேன் ,உங்களை சந்திக்கிறேன் அய்யா :)

    ReplyDelete
  5. நாளை மதியம் கிளம்பி மாலை வரலாம்
    என உள்ளேன்
    வாழ்த்துக்களுடன்...

    ReplyDelete
  6. அருமை! விழா சிறக்கட்டும்!

    ReplyDelete
  7. வணக்கம்
    ஐயா

    உண்மைதான் விடிந்தால் சந்திப்பு நிகழ்வு சிறப்பாக அமைய எனது வாழ்த்துக்கள். த.ம 6
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  8. அருமையான கவிதை அழைப்பு!
    த ம 7

    ReplyDelete
  9. அலையென திரள்வோம் ஐயா
    நன்றி
    தம +1

    ReplyDelete
  10. அருமை ஐயா....

    விழா சிறக்க எனது வாழ்த்துகளும்!

    ReplyDelete
  11. வலைப் பதிவர்களை வரவேற்க- இனிதே வாயிலில் நிற்கின்றோம் விழாக்குழு

    ReplyDelete
  12. புலவர் கவிதை பூங்காற்றாய்
    புதுக்கோட்டையில் ஞாயிறு வீசும்
    செந்தமிழ் தேன் காற்றாய்!
    வலைப்பதிவர் வாழ்த்து பா
    மகுடம்!
    நன்றி அய்யா!
    த ம +
    நட்புடன்,
    புதுவை வேலு

    ReplyDelete
  13. நாளை காலை எட்டு மணிக்கு கிளம்பி வருகின்றேன்.

    ReplyDelete
  14. அய்யா சில வரிகள் நம் தலைவர் உழைப்பைப் பற்றி...

    முத்துநிலவன் மற்றும் அவர் குழுவிற்கு என் அநேக நமஸ்காரங்கள்! இப் படை வெற்றி அடையாவிடின் எப்படை வெற்றி கொள்ளும். இனி, அடுத்த பதிவர் விழாவிற்கு புதுக்கோட்டை சந்திப்பை தான் எல்லோரும் உதாரணமாக கொள்வார்கள்------கொள்ளவேன்டும்!

    புதுக்கோட்டை பதிவர் சந்திப்பு ஒரு Bench Mark--என்று எடுத்துக் கொள்ளவேண்டும். இது மாதிரி இனிமேல் இப்படி ஒரு விழாவை, முத்துநிலவன் குழுக்கள், மாதிரி மற்றவர்கள் நடத்துவது கடினம் என்று சொல்வதைவிட---Impossible---என்று சொல்லலாம்.

    முத்துநிலவன் குழு உழைப்ப்பு வாழ்க!

    ReplyDelete
  15. புதுக்கோட்டையில் சந்திப்போம், சங்கமிப்போம்.

    ReplyDelete
  16. நன்றி ஐயா...

    அன்புடன் திண்டுக்கல் தனபாலன்

    ReplyDelete