Saturday, October 31, 2015

நினைவும் கனவும்!


நினைவு!

கரைதாண்டி வாராத அலைபோல நினைவே-நெஞ்சக்
கண்மூட முயன்றாலும் கலையாத கனவே
தரைபட்ட மீனாக துடித்திடுவாய் ஏனோ-உரிய
தடமாறி தடுமாறி தவித்திடுவாய் தானோ
சிறைபட்ட பறவையென சிலநேரம் கிடப்பாய்-உயர்
சிந்தனையின் வயப்பட்டே கவிதைகளைப் படைப்பாய்
குறைபட்டும், குறைசொல்லும், குறையெதற்காம்! தேவை-நற்
குணங்காணும் வழிச்சென்று செய்திடுவாய் சேவை


புலவர் சா இராமாநுசம்

17 comments:

  1. சிறந்த வழியை சிறப்பாக சொல்லி விட்டீர்கள் ஐயா...

    ReplyDelete
  2. அழகான வரிகள் ஐயா! உண்மைதானே அந்த இரு இறுதி வரிகளும்...

    ReplyDelete
  3. சிறக்கும் வழியைச் சிறப்பாகச் சொன்னீர்கள் ஐயா.

    ReplyDelete
  4. ஒன்றுமே செய்ய இயலாது தளர்ந்து போன உடலிலே
    சோராமல் இருப்பது மனம் ஒன்று தானே.
    அந்த நினைவுகளும் ஓடாதாயின்
    இந்த யாக்கை இருந்தென்ன இல்லாது போயென்ன ?


    அதே சிந்தனையில் நீங்கள் பாட்டு எழுத,
    அதே சிந்தனையில் அதை நான் பாட,
    வேறு எதுவுமே இல்லை.

    சுப்பு தாத்தா.

    ReplyDelete
  5. சிறப்பான கவிதை! வாழ்த்துக்கள் ஐயா!

    ReplyDelete
  6. மனதின் வெளிப்பாட்டுக்கவிதை நன்று ஐயா
    தமிழ் மணம் ஓட்டுப்பெட்டி எங்கே ?

    ReplyDelete
  7. நன்றி அய்யா...
    தமிழை வைத்து பிழைப்போரும்
    பின் நின்று வைது பிழைப்போரும்
    (இருவருமே ஒருவர்தான்) சிந்திக்க வேண்டும்.

    ReplyDelete
  8. சிறப்பான கவிதை!
    த ம 1

    ReplyDelete
  9. அழகான வழி, அருமையான கவிதையாக.

    ReplyDelete
  10. சீரிய முறையில்
    சிறந்த வழியைக் காட்டியுள்ளீர்கள் ஐயா
    நன்றி
    தம +1

    ReplyDelete
  11. வணக்கம்
    ஐயா

    இரசனை மிக்க வரிகள் ஐயா. வாழ்த்துக்கள் த.ம 4
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  12. சேவையே!
    தமிழ்ச் சேவையே-உம்மை
    சேவிக்கின்றோம் அய்யா!
    நன்றி
    த ம +
    நட்புடன்,
    புதுவை வேலு

    ReplyDelete
  13. ஐயா. உங்களின் கவிப்புலமையே புலமை.. வியக்கிறேன்..உங்களை வணங்குகின்றோம். நன்றி ஐயா..

    ReplyDelete