திக்கெட்டும்
தெரிந்தவரே திண்டுக்கல் தனபாலன்-என்றும்
தித்திக்க பழகுமவர் தேனிமை குணபாலன்!
இக்கட்டும்
வலைதன்னில் வந்ததெனில் எவரும் -தேடி
இவரிடமே வருவாராம்! சரிசெய்வார் இவரும்
வலைச்சித்தர்
இவரென்றே வலையுலகம் போற்றும்-தக்க
வல்லமையே மிக்கவராய் என்றென்றும் ஆற்றும்!
நிலைச்சித்தர்
ஆவாராம் நிகரில்லா பணிகள் –இன்றும்
நித்தமவர் செய்வதுவும் முத்துநிகர் அணிகள்!
இரவுபகல் பாராது
பதிவர்களைத் தொகுத்தும்-அதனை
இணையவழி
முறையாக நாள்தோறும் பகுத்தும்!
வரவுகளை
தவறராமல்
வரிசைபடி வைத்தும் –புதுகை
வலைப்பதிவர் சந்திப்பு
வெற்றிபெற உழைத்தும்!
அப்பப்பா! இவர்தொண்டே ஒப்பில்லா ஒன்றே-இதனை
அனைவருமே
அறிவார்கள்! செப்பப்பா நன்றே
தப்பப்பா!
பாராட்டத் தவறுவது என்றே – நானும்
தந்துவிட்டேன் இக்கவிதை !ஏற்பீரே! இன்றே!
புலவர் சா இராமாநுசம்
உங்களுடன் அவர் ' தொண்டை '(தன்னலம் கருதா சேவையை )நானும் பாராட்டுகிறேன் :)
ReplyDeleteமிக்க நன்றி!
Deleteஇனிமையானவரை பற்றி இனிமையான கவிதை.
ReplyDeleteஅழகு அய்யா!
மிக்க நன்றி!
Deleteகாட்சிக்கு எளியர்; கடுஞ்சொல் இல்லாதவர்; பழகுதற்கு இனிமையான, சகோதரர் வலைச்சித்தர் திண்டுக்கல் தனபாலன் அவர்கள் தமிழ் வலையுலகிற்கும், வலைப்பதிவர்களுக்கும் செய்துவரும் சேவை மகத்தானது. மதுரை வலைப்பதிவர் (2014) சந்திப்பின்போது இவர் ஆற்றிய பணிகள் மறக்க முடியாதது.
ReplyDeleteதனது பல்வேறு பணிகளுக்கு இடையிலும் புதுக்கோட்டை வலைப்பதிவர் சந்திப்பிற்கு (2015) தொழில்நுட்ப ஒருங்கிணைப்பு பணிகளை இவர் செய்துவரும் இந்தநேரத்தில், அவரைப் பாராட்டி கவிதை ஒன்றைத் தந்த புலவர் அய்யாவுக்கு நன்றி. சகோதரர் திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
மிக்க நன்றி!
Deleteஇனிய நண்பர். இத்தனை பாராட்டுதல்களுக்கும் முழுதும் தகுதியானவர்தான் DD. அருமை.
ReplyDeleteமிக்க நன்றி!
Deleteவலைச்சித்தர் திண்டுக்கல்லாருக்கு தாங்கள் சூட்டிய பா மாலை அருமை. இது அவருக்கு கிடைத்திருக்கிற அங்கீகாரம். நன்றி ஐயா!
ReplyDeleteமிக்க நன்றி!
Deleteவணங்குகிறேன் ஐயா...
ReplyDeleteநன்றி... மிக்க நன்றி...
உள்ளத்தில் உள்ளதை உள்ளபடி எழுதினேன்
Deleteமிக்க நன்றி!
ஐயா அற்புதமான கவிமாலை!
ReplyDeleteஅன்புச் சகோதரர் அருங்குணங்களை மிகச் சிறப்பாக
தொடுத்துக் கூறினீர்கள்!
போற்றவேண்டிய அன்பு நெஞ்சன் அவர்!
அவருக்கு என் வாழ்த்துக்கள் என்றென்றைக்கும் உண்டு!
வாழ்த்துக்கள் ஐயா!
வலைச் சித்தரை எவ்வளவு பாராட்டினாலும் போதாது
ReplyDeleteஅருமை ஐயா
மிக்க நன்றி!
Deleteவசிஸ்டர் வாயால் பிரம்ம ரிஷி
ReplyDeleteபட்டம் என்பதற்கு இதுவே சரியான
உதாரணம்
வாழ்த்துக்கள் தனபாலன்
நண்பர் தனபாலனை அருமையாக பாராட்டியுள்ளீர்கள்! அத்தனைக்கும் பொருத்தமானவர்! வாழ்த்துக்கள்!
ReplyDeleteமிக்க நன்றி!
Deleteவணக்கம் புலவர் ஐயா !
ReplyDeleteஅப்பப்பா! இவர்தொண்டே ஒப்பில்லா ஒன்றே-இதனை
அனைவருமே அறிவார்கள்! செப்பப்பா நன்றே
தப்பப்பா! பாராட்டத் தவறுவது என்றே – நானும்
தந்துவிட்டேன் இக்கவிதை !ஏற்பீரே! இன்றே!
ஆஹா அசத்திட்டீங்க இதுக்கு நான் எப்படிக் கவிதையைக் கருத்தில் போட முடியும் .......? தொடர வாழ்த்துக்கள் ஐயா வாழ்க வளமுடன்
வணக்கம் ஐயா திண்டுக்கலாருக்கு நல்லதொரு மாலை அருமை
ReplyDeleteதமிழ் மணம் மூன்றாவது.
மிக்க நன்றி!
Delete//தப்பப்பா! பாராட்டத் தவறுவது என்றே// ஆமாம் ஐயா. நானும் டிடி அண்ணாவின் பணியைப் பற்றி யோசித்தேன்..எப்படி இவ்வளவு தூரம் உழைக்கிறார்கள் என்று! உங்கள் புகழ்மாலை அருமை ஐயா..டிடி அண்ணாவிற்கு வாழ்த்துகள்
ReplyDeleteமிக்க நன்றி!
Deleteபொருத்தமான பாராட்டல்.டிடி ஒரு தன்னலம் இல்லாத ஒருவர்.
ReplyDeleteமிக்க நன்றி!
Deleteவணக்கம்
ReplyDeleteஐயா
தனபாலன் அண்ணாவை பற்றி சொல்லிய வரிகள் நன்று வாழ்த்துக்கள் ஐயா த.ம 12
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
மிக்க நன்றி!
Deleteவலைச் சித்தரைப் போற்றும்
ReplyDeleteகவி
அருமை ஐயா
முழுவதும் தகுதியானவர்
வாழ்த்துவோம்
மிக்க நன்றி!
Deleteஉண்மைதான் அய்யா...திக்கெட்டும் தெரிந்தவர்தான் திரு. திண்டுக்கல் தனபாலன் அவர்கள்...
ReplyDeleteமிக்க நன்றி!
Deleteஉரிய நேரத்தில் முறையாகப் பாராட்டி திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்குப் பெருமை சேர்த்துவிட்டீர்கள். அவருடைய உழைப்பிற்கு ஈடுஇணையேது? உங்களுடன் சேர்ந்து நாங்களும் அவரை வாழ்த்துகிறோம்.
ReplyDeleteவலைச்சித்தருக்கு உங்கள் பாமாலை.. மிக நன்று.
ReplyDeleteநண்பருக்கு எனது பாராட்டுகளும் வாழ்த்துகளும்....