வலைவழிப் பலரும் வந்தீர்கள் –என்னை
வாழ்த்தியே அன்பைத் தந்தீர்கள்
இலைநிகர் அதற்கென மகிழ்கின்றேன்-நாளும்
இருகரம் கூப்பித் தொழுகின்றேன்
அலைபடும் கடற்கரை மணலாக-எரியும்
அணல்தனை அணைக்கும் புனலாக
நிலையென உம்முடை வரவுகளே-தேயா
நிலவெனக் கண்டேன் உறவுகளே
அன்பினை அடக்கிட தாளில்லை-என்றே
ஐயன் சொன்னது தவறில்லை
என்பினை போர்த்திடும் தோலாக-உம்மோர்
இன்னுரை அனத்தும் பாலாக
என்னுயிர் வளர்த்திடும் எருவாக –நெஞ்சில்
எழுவன,கவிதைக் கருவாக
இன்பினை மேலும் தருவீரே –என்னுடை
இதயத்து நன்றி பெறுவீரே!
புலவர் சா இராமாநுசம்
நன்றியுரை நன்று ஐயா
ReplyDeleteதொலைபேசி அழைப்புக்காக காத்திருக்கின்றேன் ஐயா
தமிழ் மணம் 1
நன்றிக்கு ஒரு நன்றி!
ReplyDeleteமிக்க நன்றி!
Deleteஆகா
ReplyDeleteவாழ்த்தியமைக்கும் வாழ்த்துரை
நன்றி ஐயா
தம +1
மிக்க நன்றி!
Deleteதாமத வருகைக்கு மன்னிக்கவும் ஐயா. உங்கள் பிறந்த நாளிற்கு மகிழ்ந்து வணங்கி உங்கள் ஆசிரையும் வேண்டுகிறேன்.
ReplyDeleteநீங்கள் உடல் நலத்துடன் இன்னும் பல ஆண்டுகள் பல பல பாக்கள் தர இறைவனை வேண்டுகிறேன்.
மிக்க நன்றி!
Deleteஅது எங்கள் பாக்கியம் ஐயா
ReplyDeleteமிக்க நன்றி!
Deleteநம்பிக்கை தந்த திருவிழா
ReplyDeleteபாவலர் கருமலைத்தமிழாழன்
வலைப்பதிவால் உலகத்தை மட்டு மன்றி
வளைத்திடலாம் மனங்களையும் என்ப தற்கே
அலையலையாய்ப் புதுக்கோட்டை நகரந் தன்னில்
அணிவகுத்த தமிழறிஞர் குழுவே சாட்சி !
வலைச்சித்தர் தனபாலின் முயற்சி யாலும்
வழியமைத்த முத்துநிலவன் துணையி னாலும்
அலைகடலை வானத்தைக் கடந்தி ருந்த
அருந்தமிழர் ஒன்றாகக் கைகள் கோர்த்தார் !
கணினியெனும் தமிழ்ச்சங்கம் ; தமிழி ணையக்
கல்வியெனும் கழகமுமே ஒன்றி ணைந்து
மணியாகப் புதுமரபு கவிதை யோடு
மனம்விழிப்புக் கட்டுரைகள் போட்டி வைத்தும்
தனித்தனியாய் செயல்பட்ட பதிவர் தம்மைத்
தமக்குள்ளே அறிமுகம்தாம் செய்ய வைத்தும்
இனிதாகப் பரிசளித்தும் நூல்வெளி யிட்டும்
இயற்றமிழைக் கணினிக்குள் உயர்த்தி வைத்தார் !
தமிழ்ப்பரிதி ரவிசங்கர் சுப்பை யாவும்
தமிழ்மொழியை இணையத்துள் மேம்ப டுத்தும்
அமிழ்தான கருத்துரைத்தும் ; கல்வி யாளர்
அருள்முருகன் செயல்பாட்டை எடுத்து ரைத்தும்
நிமிர்ந்துதமிழ் நிற்பதற்கே வழிய மைத்தார்
நிறைந்தரங்கோர் கைதட்டி உறுதி யேற்றார்
தமிழோங்கும் புதுப்பொலிவில் எனும்நம் பிக்கை
தந்ததுவே புதுக்கோட்டை திருவிழாதான் !
மிக்க நன்றி!
Deleteஅருமையான கவிதை அய்யா!
ReplyDeleteத ம 7
மிக்க நன்றி!
Deleteவணக்கம்
ReplyDeleteஐயா
வாழ்த்துக்கவிதை அருமையாக உள்ளது.. வாழ்த்துக்கள் ஐயா த.ம 8
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
மிக்க நன்றி!
Deleteஅருமை.
ReplyDeleteமிக்க நன்றி!
Deleteஉங்களின் வரவால் மகிழ்ந்தது புதுகை அய்யா..
ReplyDeleteமிக்க நன்றி!
Deleteஉங்களின் ஆரோக்கியமே எங்கள் மகிழ்ச்சி அய்யா :)
ReplyDeleteமிக்க நன்றி!
Deleteவாழ்த்தியவர்களுக்கும் கவியாய் வாழ்த்துரை...
ReplyDeleteநன்றி ஐயா...
கவிதை அருமை
ReplyDeleteமிக்க நன்றி!
Deleteநன்றிக் கவிதையும் மிக அருமை ஐயா!
ReplyDeleteமிக்க நன்றி!
Deleteஉங்களை வாழ்த்துவதும், உங்களிடமிருந்து அறிவுரை பெறுவதும் எங்களுக்கு மனநிறைவைத் தருகிறது. நன்றி.
ReplyDeleteமிக்க நன்றி!
Deleteஅருமை
ReplyDeleteமிக்க நன்றி!
Deleteதமிழே பணிகின்றேன்!
ReplyDeleteநன்றி அய்யா!
த ம +
நட்புடன்,
புதுவை வேலு
மிக்க நன்றி!
Deleteமிக்க நன்றி!
ReplyDeleteமிக்க நன்றி! அய்யா..கவிதை அருமை அய்யா.......
ReplyDelete