Sunday, September 6, 2015

மாண்புமிகு பாரதப் பிரதமருக்கு ஒரு வேண்டுகோள் !

மாண்புமிகு பாரதப் பிரதமருக்கு ஒரு வேண்டுகோள்

கீழ் வரும் செய்தி உண்மையானால் அது ,என் போன்ற(வயது83)
மூத்த குடிமக்களுக்கு சலுகையா தண்டணையா இது ,முறையா? நியாமா!
என் போன்றோர் குடும்பத்தோடு (ஒரேயிடத்தில்) செல்வதுதானே பாதுகாப்பாகும்! இதுவரை நடைமுறையில் இருந்த இதனை மாற்ற முற்படுவதால் என்ன பயன்! இருந்த சலுகையைப் பறிப்பதா முன்னேற்றம்
அது மட்டுமல்ல, படுக்கை வசதிகூட மூத்த குடி மக்களுக்கு முன்னுரிமையாக
கீழ் படுக்கை களை ஒதுக்கும் பழைய நடைமுறை வசதியும் சத்தமின்றி நீக்கப்
பட்டுள்ளது
எனவே , காரணமின்றி காரியமாற்றும் நீதியற்ற இம் முறைகளை
தடுத்து ஆவனசெய்ய வேண்டுகிறேன்
பாதிக்கப்படும் மூத்த குடிமக்கள் சார்பாக வேண்டும்
புலவர் சா இராமாநுசம்

 
                        நாளேடு  தந்த  செய்தி
டெல்லி : ரயிலில் பயணம் செய்யும் மூத்த குடிமக்கள், முழு கட்டணம் செலுத்த வேண்டும் என்ற திட்டத்தை, அடுத்த ஆண்டு முதல் அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. மூத்த குடிமக்களுக்கு, ரயில்களில் தற்போது சலுகை கட்டணத்தில் டிக்கெட் வழங்கப்படுகிறது. குடும்பத்தினருடன் செல்லும்போதும், இந்த சலுகை, அவர்களுக்கு கிடைக்கிறது. அடுத்தாண்டு முதல், இந்த திட்டத்தில் மாற்றம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. railway ticket counter இதன்படி, மூத்த குடிமக்கள், தங்கள் குடும்பத்தினருடன் ரயிலில் பயணம் செய்ய நேரிட்டால், தங்களுக்கான டிக்கெட்டை மட்டும் தனியாக எடுக்க வேண்டும். இப்படி எடுத்தால், சலுகை கட்டண வசதி கிடைக்கும். குடும்பத்தினருடன், தங்கள் பெயரையும் சேர்த்து, டிக்கெட் எடுத்தால், இந்த கட்டண சலுகையை பெற முடியாது. இதுகுறித்து, அனைத்து ரயில்வே மண்டலங்களின் தலைமை வர்த்தக மேலாளர்களுக்கு, கடந்த மாதம், 31 ஆம் தேதி, ரயில்வே வாரியம் ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது

27 comments:

  1. நியாயமான கோரிக்கையை வைத்துள்ளீர்கள் அய்யா.

    ReplyDelete
  2. அடப் பாவிங்களா! இது என்ன அநியாயம்! மிக மிக நியானமான கோரிக்கையை மு வைத்துள்ளீர்கள் ஐயா!

    ReplyDelete
  3. இது உண்மையானால் , மறு பரீசீலனை செய்ய வேண்டும்.

    ReplyDelete
  4. ஏதாவது ஒன்று கிடக்க ஒன்று செய்து கொண்டே இருப்பார்கள் போல..

    ReplyDelete
  5. வணக்கம் புலவர் ஐயா !

    நிறைவின்றித் தாழ்வோரின் நாட்டில்
    நித்தமொரு சட்டங்கள் தருவார் - தனம்
    குறைவின்றி வாழ்வோரின் வீட்டில்
    குதூகலித்துக் கொண்டாட வருவார் !

    சட்டம் எல்லோருக்கும் பொதுவாய் இருப்பினும் சங்கடங்கள் பாமரமக்களுக்கே சொந்தம் ....எல்லாம் அவன் செயல்

    ReplyDelete
  6. நல்லது செய்வார்கள் என நினைத்து வாக்களித்த மக்களுக்கு இவர்கள் செய்யும் கைம்மாறு இது தான் போலும். தங்களது கோரிக்கைக்கு செவி சாய்ப்பார்களா என்பது தெரியவில்லை. காலம் ஒரு நாள் மாறும் என்று காத்திருக்கவேண்டியதுதான்.

    ReplyDelete
  7. நியாயமானதே... ஐயா செவி கொடுத்தால் நலம்.
    தமிழ் மணம் இரண்டாவது.

    ReplyDelete
  8. அடக்கொடுமையே!
    உங்கள் நியாயமான கோரிக்கையை அரசு ஏற்க வேண்டும் ஐயா

    ReplyDelete
  9. தனியார் மயத்தை நடைமுறைப் படுத்துவதற்கு ஆரம்ப கட்ட நடவடிக்கையாக தெரிகிறது...கடந்த முறை பயணம் செய்யும் போது மூத்த குடிமகன் என்று சீட்டு பதிவு செய்த போதும், எனது பெரியம்மாவுக்கு நடுவேயுள்ள படுக்கையை கொடுத்தார்கள்.. இன்னும் என்னென்ன விளைவுகள் காத்திருக்கிறதோ..

    ReplyDelete
  10. இப்படி ஒரு திட்டம் இருக்கிறதா என்று தெரியவில்லை. இருந்தால் அது மோசமான, நியாயமில்லாத திட்டம் தான்.....

    ReplyDelete
  11. உங்கள் கோரிக்கை நியாயமானது. ஆனால் அரசு செவிசாய்க்குமா?

    ReplyDelete
  12. தங்கள் கோரிக்கை நியாயமானது ஐயா... அரசு இதை செயல்படுத்தாது என்று நம்புவோம்...

    ReplyDelete
  13. உங்கள் கோரிக்கை அவர்கள் செவிகளுக்கு கேட்க ஆண்டவனை பிரார்த்திக்கிறேன் ஐயா!

    ReplyDelete
  14. நியாயமான கோரிக்கை. உரியவர்களுக்கு சென்று சேரட்டும். நல்ல முடிவு கிடைப்போம் என எதிர்பார்ப்போம்.

    ReplyDelete
  15. இது நடக்கது என நம்புவோம்

    ReplyDelete