Saturday, September 5, 2015

ஆசிரியர் தின வாழ்த்தும், வேண்டுகோளும்!


ஆசிரியர் தின வாழ்த்தும், வேண்டுகோளும்!

அன்னையொடு தந்தைக்கு அடுத்த நிலையில்- தூய
ஆசிரியர்! இருந்தார்கள்! அன்றை நிலையில்!-இன்று
என்னநிலை பள்ளியிலே எண்ணிப் பாரீர்-அந்தோ
இதயத்தில் இடிதாக்கும் துயரம் காணீர்!-மலரா
சின்ன மொட்டும் சீரழியும் அவலம்தானே-தினம்
செய்திவரல் அழியாத கொடுமை தானே!-உடன்
இன்னல்மிகு இச்செயலை நீக்க வேண்டும்-ஆசிரியர்
இறைவன்தான் எனப்போற்ற நடக்க ஈண்டும்!


குற்றத்தை நீக்குபவர் ஆசிரியர் என்றே –முன்னோர்
கூறியதை மறையாக ஏற்பீர் நன்றே!-செய்த
அற்றத்தை மறைத்தாலும் வாழ்நாள் முற்றும்- விட்டு
அகலாது நெஞ்சத்தில் தீயாய் பற்றும்!-ஏதும்
பற்றற்ற துறவியென நடந்து கொள்வீர்-நீங்கள்
பணியாற்ற பள்ளிக்கே நாளும் செல்வீர்!-மேலும்
கற்றவழி கல்விதனை கற்கச் செய்வீர்- கடமைமிக
கண்ணியம் கட்டுப்பாடு விளங்க உய்வீர்!

புலவர் சா இராமாநுசம்

32 comments:

  1. உண்மைதான். ஆசிரியர் தின நல்வாழ்த்துகள் ஐயா..

    ReplyDelete
  2. புலவர் அய்யா அவர்களுக்கு எனது உளங்கனிந்த ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. அன்புள்ள புலவர் அய்யா,

    ஆசிரியர் தினத்தில் விருப்பமுடன் விருத்தப் பாடலை இயற்றி வாழ்த்தியது கண்டு மிக்க மகிழ்ச்சி.

    நன்றி.
    த.ம.3

    ReplyDelete
  4. ஆசிரியர்தின நல் வாழ்த்துக்கள் ஐயா!

    கல்வித்துறைச் சீரழிவுகள் திருந்த வேண்டி
    அருமையான பாமாலை தந்தீர்கள்!
    விரைவில் அனைத்தும் மாறும்! மாறவேண்டும்!

    ReplyDelete
  5. அருமை ஆடிரியர் தின வாழ்த்துகள் ஐயா
    தமிழ் மணம் 5

    ReplyDelete
  6. இந்த ஆசிரியர் தினத்தில் ஏகலைவன் கட்டைவிரலை தட்சனையாக கேட்ட ஆசிரியரும், என்னை படிக்கவிடாமல் செய்த ஆசிரியரும்தான் நிணைவுக்கு வருகிறார்கள் அய்யா...

    ReplyDelete
  7. காலை முதலே இன்று
    கடுகியே காத்திருந்தேன் .
    கண்ணனின் பிறந்த நாள் இன்று
    கவிதை ஒன்று வருமென இங்கு.

    கண்ணனைக் காணோம் ஆனால்
    வின்ணவனோ வந்தேன் பார் என்றான்.
    பார் எல்லாம் போற்றும் பரமனே உன்னை
    யார் எல்லாம் போற்றுவரோ அவரெழுத்தில்
    கவிதையொன்று இல்லயே ஏன் ? என்றேன்.

    ஏன் ? ஏழ் உலகிற்குமே நான்
    ஆசான் மறந்தனையோ ?
    ஆசிரியர் புகழ் பேசும் பதிவைப் பார்.
    அறவழி நடாத்துவதே ஆசிரியர் பணி.

    அதைத்தானே நானும்
    அழுது நின்ற
    அர்ச்சுனனுக்கு எடுத்துச் சொன்னேன்
    கடமையைச் செய் என்று சொன்னேன்.
    நினைவு இல்லையா..

    இன்று அதையே தான்
    இறைந்து சொல்கிறார் புலவர்
    ஆசிரியர்களிடம்.
    நீங்கள் கடமையைச் செய்யுங்கள் என.

    அவருக்கு உன் பாராட்டைச்
    சொல் எனச் சொல்லி
    சென்று விட்டார்.

    ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.

    பணியின் இறுதி 8 ஆண்டுகள் நானும் ஆசிரியனாக இருந்தேன்.

    சுப்பு தாத்தா.

    ReplyDelete
  8. அருமை ஐயா...
    இனிய ஆசிரியர் தின, கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  9. அப்படியான ஆசிரியர்களும் இருக்கிறார்கள் என்பது வேதனை தான். சிறப்பான ஆசிரியர் தினச்செய்தி!!! நன்றி அய்யா!

    ReplyDelete
  10. எல்லா துறைகளிலும் கருப்பு ஆடுகள் இருக்கத்தான் செய்கின்றன :)

    ReplyDelete
  11. ஆசிரியர் தின நல் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  12. வணக்கம்
    ஐயா

    இனிய ஆசிரியர் தின வாழ்த்துக்கள். த.ம10

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  13. உண்மையே புலவர் ஐயா! அழகான வரிகள்! ஆசிரியர் தின வாழ்த்துகள்! ஐயா!

    ReplyDelete
  14. வணக்கம் புலவர் ஐயா !

    இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் !


    அருமைகளும் பெருமைகளும் அள்ளிச் சேர்க்கும்
    ..........ஆசிரியப் பணியதனை நானும் செய்தேன்
    பெருமையுறு மாணவர்கள் பிரியம் கொள்ளப்
    ...........பிணிதொட்டும் கடமையினை நன்றே செய்தேன்
    தருநிழலை இருள்மூடிச் சர்ப்பம் தூங்கத்
    .......... தரைவிட்டுப் பாய்கின்ற தவளை போலே
    கருவிழியை விலைபேசும் கயவன் நாட்டின்
    ...........காவலரின் வலிதொடர விட்டுப் போனேன் !

    வாழ்த்தோடு வேண்டுகோள் அருமை ஐயா வாழ்க வளமுடன்

    ...........

    ReplyDelete
  15. ஆசிரியர் தின நல் வாழ்த்துக்கள் ஐயா
    தம +1

    ReplyDelete
  16. அருமை ஐயா! பிந்திய ஆசிரியர் தின வாழ்த்துக்கள்!

    ReplyDelete