கோட்டையிலே பதிவர்களின் ஆட்சி பாரீர் –புதுகை
கோட்டையிலே கூடுகின்றார் காண வாரீர்
ஏட்டில் வாராச் செய்திகளும் முந்தித் தருவார்–அன்னார்
இணையத்தில் நாள்தோறும் பதிவில் வருவார்!
நாட்டை நாளும் நல்வழியில் நடத்திச் செல்லவே- உரிய
நற்கருத்தை அழுத்தமாக நெஞ்சில் கொள்ளவே
ஊட்டமான சத்துணவாம் பதிவர் ஆகுமே –என்றே
உணர்ந்தாலே போதுமுடன் தீமை போகுமே!
கைமாறு கருதாமல் தெண்டு செய்யவே–நேரம்
கருதால் கடமையென உலகம் உய்யவே
பெய்மாரி போன்றுமவர் பணியே ஆற்றுவார்-தம்மை
போற்றினாலும் தூற்றினாலும் கருத்தை சாற்றுவார்
பைமாரி ஊடகங்கள் கொடுக்கும் செய்தியே –கண்டு
பரிதாபம் மக்களவர் குழப்பம் எய்தவே
உய்மாறு உண்மைகள் உரைக்கும் இவரே –ஐயா
உலகத்தில் சொல்லுங்கள் உண்டா? எவரே!
கூடுங்கள் ! பதிவர்களே அனைவருமே ஒன்றாய் –நம்மில்
குறையிருப்பின் ஆய்ந்ததனை நீக்கிடவே நன்றாய்
தேடுங்கள் பதிவருக்கோர் பாது காப்பே –உடன்
தேவையது சங்கத்தின் பதிவுதான்! இப்போ
நாடுங்கள் ஏற்றவழி தன்னை நன்றே-கால்கோள்
நடக்கட்டும்! அமையட்டும் திருநாளாம் அன்றே
போடுங்கள் உண்மைகளை உலகறிய என்றும் –நன்கு
புடமிட்ட பென்னெனவே வாழ்த்தட்டும் நன்றும்!
தங்கமது செய்யாத நன்மைகளைக் கூட –ஏதும்
தடையின்றி தேடிவந்து நம்மிடமே நாட
சங்கமென ஒன்றிருந்தால் ஆகும் என்றே-முன்னே
சான்றோர்கள் சாற்றியதை அறிவோம் நன்றே
பொங்கிவரும் அலைபோல புதுக்கோட்டை வந்தே –முதிய
புலவனிவன் வேண்டுகோளை நிறைவேற்றி தந்தே
எங்குமுள நம்தமிழர் வாழ்த்தவழி காண்போம் –வலிமை
ஏற்றமுற சங்கமென உறுதிமொழிப் பூண்போம்
புலவர் சா இராமாநுசம்
புதுக்கோட்டை பதிவர்கள் விழா சந்திப்பு அழைப்பு கவிதை அருமை . பதிவர் திருவிழா ஒவ்வோராண்டும் சிறப்பாக நடைபெறுவதற்கு அடிகோலியவர் தாங்கள்தான் ஐயா.
ReplyDeleteநன்றி!
Deleteபதிவர் சந்திப்பிற்கான கவிதை அருமை ஐயா!
ReplyDeleteநன்றி!
Deleteபதிவர் விழா அழைப்பிதழ் கவிதை அருமை ஐயா ! விழா சிறக்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள் .
ReplyDeleteநன்றி!
Deleteபதிவர் விழா கவிதை அருமை ஐயா
ReplyDeleteபதிவர் விழாவிற்கு வித்திட்டவரே தாங்கள்தான் அல்லவா
நன்றி ஐயா
நன்றி!
Deleteநன்றி!
ReplyDeleteஅருமை ஐயா வாழ்த்துக்கவி
ReplyDeleteதமிழ் மணம் 6
நன்றி!
Deleteபுதுக்கோட்டையிலே வலைப் பதிவர் ஒற்றுமை ஓங்க வழி வகுக்கும் வாழ்த்துக் கவிதை அருமை அய்யா!
ReplyDeleteத ம 7
நட்புடன்,
புதுவை வேலு
நன்றி!
Deleteபதிவர் சந்திப்பு விலாப் பற்றி அழகான கவிதை.
ReplyDeleteஅருமை அய்யா!
த ம 8
நீங்கள் போட்ட பிள்ளையார் சுழி!
ReplyDeleteசென்று வாருங்கள் ஐயா
நன்றி!
Deleteஏற்றமுற சங்கமென உறுதிமொழிப் பூண்போம்
ReplyDeleteதங்களை மீண்டும் சந்திக்க ஆவலாய் உள்ளேன் அய்யா :)
ReplyDeleteவிழா சிறக்க எனது வாழ்த்துகளும் ஐயா.
ReplyDelete