ஓரளவு நலமுற்றேன் என்ற போதும்
ஓய்வெடுக்க இயலாது மனதில் மோதும்
பேரளவு இன்றெனினும் எழுது என்றே
பின்னிருந்து ஆசையது உந்த இன்றே
சீரளவு குறைந்ததொரு கவிதை தன்னை
செப்பிடவே உறவுகளே படித்து என்னை
நீரளவு இல்லாத அன்பைக் காட்ட
நித்தம்நான் முயல்வேனே பதிவை தீட்ட!
வணக்கம்!
புலவர் சா இராமாநுசம்
Welcome Ayyaa
ReplyDeleteஉடல்நலத்தில் கவனமாக இருங்கள் ஐயா. நாங்கள் காத்திருக்கிறோம்.
ReplyDeleteமிக்க நன்றி!
Deleteஉங்கள் மன உற்சாகமே, உடல் உற்சாகத்தை உண்டு பண்ணிவிடும் அய்யா!
ReplyDeleteஐயா! நலந்தானா? காத்திருக்கிறோம் தங்கள் பதிவிற்காக.
ReplyDeleteமிக்க நன்றி!
Deleteஉடல்நலத்தின் மீது கவனம் இருக்கட்டும்.இயலும்போது எழுதுங்கள்1பதிவுலகில் பலருக்கு நீங்கள் ஒரு முன்மாதிரியாக,,உந்து சக்தியாக இருக்கிறீர்கள்..வெங்கடவன் உங்களுக்கு முழு நலம் அருளட்டும்
ReplyDelete///சீரளவு குறைந்ததொரு கவிதை தன்னை
ReplyDeleteசெப்பிடவே உறவுகளே படித்து ....///
சீரளவு குறைந்தால் என்ன?
நீரளவு குறைந்தாலும்
மீன் நீந்தும் அழகு குறைந்திடுமோ ?
நீரில்லா வலை வானம்
நீரில்லா பாலை ஆகும் .
வீறு கொண்டே
எழுந்திடுவீர்.
ஏழுமலையான் துணையிருப்பான்.
சுப்பு தாத்தா
மிக்க நன்றி!
Deleteநலமே வாழ என் வேண்டுதல்.
ReplyDeleteநன்றி ஐயா.
மிக்க நன்றி!
Deleteதங்கள்
ReplyDeleteஉடல் பலமும்
மனம் புத்துணர்வும் பெற
வேண்டுகிறேன்.
தற்போது பதிவர்களுக்கு
கலங்கரை விளக்கமான
தங்களின் வழிகாட்டுதலின்படியே
நடைபெற உள்ள பதிவர் சந்திப்பும்
நிச்சயம் தாங்கள் (உத்தே)சித்தப்படியே நன்றே நடந்தே(தீ)ரும்
கவலை வேண்டாம்.
உவகை கொள்வீர்.
(ஓர் அன்பு வேண்டுதல்)
தங்களின் அன்பு மனம் ஓரளவு அறிந்ததால்...
உடல் ஒதுழைத்தால் மட்டுமே தாங்கள் பயணிக்கவும்
ஒருவேளை மறுத்தால் அவசியம் அதை கவனிக்கவும்
தாங்கள் பதிவர் சந்திப்பில் எம்முடன் கலந்தால்
மட்டற்ற மகிழ்ச்சியே.!
இன்றுள்ள நிலையில் தங்கள் உடல் சொல்வதை கேட்பதே
நன்றல்லவா...!
மிக்க நன்றி!
Deleteஉங்களின் தணியாத ஆர்வம் புரிகிறது! இருப்பினும் உடல் நலம் பேணவும் அய்யா!
ReplyDeleteமிக்க நன்றி!
Deleteஓரளவு நலம் பெற்றதே
ReplyDeleteஎங்களுக்கெல்லாம்
பெரு மகிழ்வாக இருக்கிறது ஐயா
ஓய்வெடுங்கள்
முழு நலம் பெறுங்கள்
தமம +1
மிக்க நன்றி!
Deleteரொம்ப மகிழ்ச்சி ஐயா...
ReplyDeleteஉடல் நலம் பார்த்துக் கொள்ளுங்கள்...
மிக்க நன்றி!
Deleteநன்று அய்யா..
ReplyDeleteமிக்க நன்றி!
Deleteபுத்துணர்வுடன் கவிதைகள் படைக்க உடல் நலம் துணை புரியும் அய்யா !
ReplyDeleteமிக்க நன்றி!
Deleteமிக்க மகிழ்ச்சி ஐயா ! சீக்கிரம் முழு நலனும் பெற வேண்டுகிறேன்...!
ReplyDeleteஉடல் நலத்தில் கவனம் வையுங்கள்.
ReplyDeleteமிக்க நன்றி!
Deleteஉங்கள் உடல் நலனே முக்கியம்.
ReplyDeleteமிக்க நன்றி!
Deleteஅன்புள்ள பெரும்புலவர் அய்யா,
ReplyDelete‘ஓரளவு நலமுற்றேன் என்ற போதும்
ஓய்வெடுக்க இயலாது’ எழுதுவதிலே இந்த வயதிலும் ஆர்வமுடன் இருக்கும் தங்களை என்னவென்று சொல்வது? தமிழின்பால் கொண்ட காதல்தான் என்னே...!
நன்றி.
த.ம. 14.
தீட்டும் பதிவாலே!
ReplyDeleteதிக்கெட்டும் மேலும் மேவி நிற்கும்
உம் புகழை!
தித்திக்கும் தேன் கவிதை
தேற்றி நிற்கட்டும் தேக நலனை
நலமுடனே அய்யா!
த ம +
நட்புடன்,
புதுவை வேலு
அய்யா வணக்கம். உடல்நலம் தேறிவிட்டீர்களா?
ReplyDeleteசென்னை வந்தும் தங்கள் உடல்நலமின்மை அறிந்தே தொந்தரவு செய்யாமல் திரும்பிவிட்டேன். பதிவர்விழாப் பணிகள் எல்லாம் தங்களின் வழிகாட்டுதலில் சிறப்பாக நடக்கின்றன. உடல்நலத்தைப் பார்த்துக் கொள்ளுங்கள். பதிவர் விழாவுக்கு பயணச் சீட்டுப் பதிவுசெய்துவிட்டீர்கள் தானே? நாளை காலை தங்களிடம் பேசுவேன். விழாப்பற்றிச் சில ஆலோசனைகள் தேவை.
உடல்நலம் முக்கியம் ஐயா பதிவுகள் என்றும் எழுதலாம்.
ReplyDeleteஉடல் நலம் முக்கியம் ஐயா. பதிவுலகம் காத்திருக்கும்.
ReplyDelete