Wednesday, September 2, 2015

இன்றெந்தன் பேரனது பிறந்த நாளே –என்றும் இதயத்தில் இனிக்கின்ற சிறந்த நாளே!


இனிய உறவுகளே !
இன்றெந்தன் பேரனது பிறந்த நாளே –என்றும்
இதயத்தில் இனிக்கின்ற சிறந்த நாளே!
நன்றென்னை காக்கின்ற அன்புத் தாயே ! –இவன்
நான்பெற்ற இளையமகள் பெற்ற சேயே!
அன்றெந்தன், துணைவியவள் விட்டுச் சென்றாள்-பெற்ற
அன்னையென அன்புதர மகளே ! நின்றாள்
ஒன்றென்ன பெற்றமகன் வாழ்க என்றே- வலை
உறவுகளே! வாழ்த்துங்கள்! இவனை நன்றே


உலகத்தில் ,உத்தமனாய் அவன்வாழ வேண்டும்! –கண்டே,
உள்ளத்தில் உவகைமிக உருவாக யாண்டும்!
திலகமென , படிப்போடு , பண்பாடும் கற்றே-பலரும்
தெரிவிக்கும் பாராட்டே, பட்டமென பெற்றே,
அன்புமிக அடக்கமொடு வளர்ந்திடவே, வாழ்த்தி!-வலை
அன்பர்களே! கரம்கூப்பி சிரம்தன்னைத் தாழ்த்தி
இன்புமிக உறவுகளே! நான்வேண்டு கின்றேன்!-என்றும்
இதயத்தில் வாழ்வோரே உமைத்தூண்டு கின்றேன்!

நன்றி! வணக்கம்!
புலவர் சா இராமாநுசம்

29 comments :

  1. நூறாண்டு காலம் வாழ்க, நோய் நொடி இல்லாமல் வளர்க, ஊராண்ட மன்னர் புகழ் போலே, உலகாண்ட புலவர் தமிழ் போலே, நூறாண்டு காலம் வாழ்க ... http://youtu.be/ZqtdSAA-5Es

    ReplyDelete
  2. தங்கள் அன்புப் பேரனுக்கு எனது உளங்கனிந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. பல்லாண்டு எல்லா வளமும் பெற்று வாழ வாழ்த்துகிறோம் ஐயா.

    ReplyDelete
  4. உலகின் அத்தனை நல்லவையும் பெற்று நோய் நொடியின்றி பல்லாண்டுகள் ஆனந்தத்துடன் வாழ மனமார்ந்த வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  5. உங்கள் பேரனுக்கு இதயம் கனிந்த வாழ்த்துக்கள் அய்யா!!

    ReplyDelete
  6. உங்கள் பேரனுக்கு என் அன்பு ஆசிகள்!

    ReplyDelete
  7. தங்களது பேரன் பல நலனும் பெற்று வளமுடன் வாழ எமது இதயப்பூர்வமான வாழ்த்துகள் ஐயா.
    தமிழ் மணம் 3

    ReplyDelete
  8. அன்பு பேரனின் படத்தை தளத்தில் இதற்கு முன் போட்டுள்ளீர்கள் என நினைக்கிறேன் ,வளமுடன் வாழ வாழ்த்துக்கள் !

    ReplyDelete
  9. தங்களது அன்பு பேரனுக்கு எல்லா நலனும் பெற்று பல்லாண்டு வாழ்ந்திட எங்கள் மனார்ந்த வாழ்த்துகள்!

    ReplyDelete
  10. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
    த ம 9

    ReplyDelete
  11. தங்களின் அன்புப் பெயரனுக்கு
    இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்
    தம +1

    ReplyDelete
  12. இறைவன் திருவருள் எப்போதும் துணை நிற்க எல்லா நலமும் வளமும் பெற்று நீடூழி வாழ வாழ்த்துகின்றேன் ஐயா தங்களின் செல்லப் பேரனை ! இன்று தங்களின்
    மகளையும் வாழ்த்த வாருங்கள் ஐயா காத்திருக்கின்றேன் ,

    ReplyDelete
  13. தங்களுடைய வாழ்த்துக்களுடனும் எங்களுடைய வாழ்த்துக்களுடனும் தங்கள் பேரன் எல்லா நலனும் பெற்று நலமுடன் வாழ்க.

    ReplyDelete
  14. வணக்கம் புலவர் ஐயா !

    செல்லப் பேரன் நல்வாழ்வும்
    ...........சிறந்து விளங்க எப்போதும்
    கல்வி செல்வம் கருணையுள்ளம்
    ..........காக்கும் கடவுள் தந்திடணும்
    செல்லும் இடங்கள் சிறந்திடணும்
    ..........செய்யும் தொழில்கள் நிறைந்திடனும்
    வல்ல கடவுள் அடிதொட்டு
    ..........வணங்கி நின்றேன் உனக்காக !

    வாழ்த்துக்கள் தம்பி வாழ்க நூறாண்டு

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...