Thursday, August 6, 2015

மாண்புமிகு முதல்வர்க்கோர் வேண்டு கோளே மதுவிலக்கு வெற்றிக்கோர் தூண்டு கோலே!


மாண்புமிகு முதல்வர்க்கோர் வேண்டு கோளே
மதுவிலக்கு வெற்றிக்கோர் தூண்டு கோலே
வீணலவே! விளம்புவது உண்மை ஒன்றே
விளக்கமுற வருங்காலம் காட்டும் நன்றே
காணவென காட்சிபல காண்பீர்! இங்கே
கட்சிகளும் அறப்போரில் ஏற்றார் பங்கே!
பேணலரும் செயலெனும் உம்மால் முடியும்
பெருமைவர வாழ்த்திடுவர்! துயரம் விடியும்!


ஏதுமினி இலவசத்தால் பயனே இல்லை
எண்ணிடுவீர்! அதனாலே வந்தத் தொல்லை
போதுமினி மக்களவர் உழைத்து வாழ
பூரணமாய் மதுவிலக்கு நாட்டில் சூழ!
தீதுமினி நடவாது செய்வீர் ஈண்டும்
தெய்வமெனத் தாய்க்குலமே போற்ற யாண்டும்!
யாதுமினி செய்வதற்கு தருணம் இதுவே
யாவருக்கும் தெரியுமிது ஒழிய மதுவே!

புலவர் சா இராமாநுசம்

21 comments:

  1. நல்ல அறிவுரை. ஆனால் அறப்போர் என்பதுதான்.....! ஏதோ ஆகஸ்ட் 15 ஐ ஒட்டி நல்ல அறிவிப்பு வெளியாகும் என்கிறார்களே...... பார்ப்போம்!

    ReplyDelete
  2. புத்தி மழுங்கடிக்கும் மது நஞ்சை
    பூந் தமிழகம் சட்டம் செய்து...
    பூவுலகை விட்டே விரட்டட்டும்
    புதிய தமிழகம் புதுவையிலும் மலரட்டும்!
    நல்லதொரு வேண்டுகோள்
    நலம் பெற .....
    நிறைவேறும் நாள் வெகு தொலைவில் இல்லை
    என்றே! தோன்றுகிறது புலவர் அய்யா!
    நன்றி!
    த ம 1
    நட்புடன்,
    புதுவை வேலு

    ReplyDelete
  3. வணக்கம்
    ஐயா
    நல்ல காலம் பிறக்கும் விரைவில் காத்திருப்போம் த.ம 3

    வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள் த.ம 9

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  4. ஐயா! அருமையான வேண்டுகோள்தான்! நல்ல காலம் பிறக்கட்டும்! நமது குரல்கள் எல்லாம் எட்டியிருக்கும் தானே!..

    ReplyDelete
  5. நல்லது நடக்குமென நம்புவோம் ஐயா
    தமிழ் மணம் 4

    ReplyDelete
  6. விரைவில் நல்லது நடக்கும் என்றே நம்புவோம்!

    ReplyDelete
  7. தேர்தல் நெருங்குவதால் நல்லது நடக்கும் :)

    ReplyDelete
  8. விரைவில் நல்லது நடக்கட்டும்....

    ReplyDelete
  9. அன்புள்ள அய்யா,

    நல்ல வேண்டுகோள் செவிமடுக்கப்பட வேண்டும்...!
    நடக்குமா நாட்டில்... பார்ப்போம்...!

    த.ம. 10

    ReplyDelete
  10. நல்லது நடக்கட்டும் ஐயா...

    ReplyDelete
  11. நல்ல, பயனுள்ள வேண்டுகோள். இவ்வேண்டுகோள் நல்ல பலனைத் தரும் என்று ந்ம்புவோம்.

    ReplyDelete
  12. அருமையான வேண்டுகோள்கள்... நல்ல பலன் கிடைக்குமென நம்புவோம்...

    ReplyDelete
  13. மது விலக்கு வரும்;தங்கள் வேண்டுகோள் நிறைவேறும்

    ReplyDelete