மாண்புமிகு முதல்வர்க்கோர் வேண்டு கோளே
மதுவிலக்கு வெற்றிக்கோர் தூண்டு கோலே
வீணலவே! விளம்புவது உண்மை ஒன்றே
விளக்கமுற வருங்காலம் காட்டும் நன்றே
காணவென காட்சிபல காண்பீர்! இங்கே
கட்சிகளும் அறப்போரில் ஏற்றார் பங்கே!
பேணலரும் செயலெனும் உம்மால் முடியும்
பெருமைவர வாழ்த்திடுவர்! துயரம் விடியும்!
ஏதுமினி இலவசத்தால் பயனே இல்லை
எண்ணிடுவீர்! அதனாலே வந்தத் தொல்லை
போதுமினி மக்களவர் உழைத்து வாழ
பூரணமாய் மதுவிலக்கு நாட்டில் சூழ!
தீதுமினி நடவாது செய்வீர் ஈண்டும்
தெய்வமெனத் தாய்க்குலமே போற்ற யாண்டும்!
யாதுமினி செய்வதற்கு தருணம் இதுவே
யாவருக்கும் தெரியுமிது ஒழிய மதுவே!
புலவர் சா இராமாநுசம்
நல்ல அறிவுரை. ஆனால் அறப்போர் என்பதுதான்.....! ஏதோ ஆகஸ்ட் 15 ஐ ஒட்டி நல்ல அறிவிப்பு வெளியாகும் என்கிறார்களே...... பார்ப்போம்!
ReplyDeleteமிக்க நன்றி!
Deleteபுத்தி மழுங்கடிக்கும் மது நஞ்சை
ReplyDeleteபூந் தமிழகம் சட்டம் செய்து...
பூவுலகை விட்டே விரட்டட்டும்
புதிய தமிழகம் புதுவையிலும் மலரட்டும்!
நல்லதொரு வேண்டுகோள்
நலம் பெற .....
நிறைவேறும் நாள் வெகு தொலைவில் இல்லை
என்றே! தோன்றுகிறது புலவர் அய்யா!
நன்றி!
த ம 1
நட்புடன்,
புதுவை வேலு
மிக்க நன்றி!
Deleteவணக்கம்
ReplyDeleteஐயா
நல்ல காலம் பிறக்கும் விரைவில் காத்திருப்போம் த.ம 3
வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள் த.ம 9
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
மிக்க நன்றி!
Deleteஐயா! அருமையான வேண்டுகோள்தான்! நல்ல காலம் பிறக்கட்டும்! நமது குரல்கள் எல்லாம் எட்டியிருக்கும் தானே!..
ReplyDeleteமிக்க நன்றி!
Deleteநல்லது நடக்குமென நம்புவோம் ஐயா
ReplyDeleteதமிழ் மணம் 4
மிக்க நன்றி
Deleteவிரைவில் நல்லது நடக்கும் என்றே நம்புவோம்!
ReplyDeleteமிக்க நன்றி
Deleteதேர்தல் நெருங்குவதால் நல்லது நடக்கும் :)
ReplyDeleteமிக்க நன்றி
Deleteவிரைவில் நல்லது நடக்கட்டும்....
ReplyDeleteமிக்க நன்றி
Deleteஅன்புள்ள அய்யா,
ReplyDeleteநல்ல வேண்டுகோள் செவிமடுக்கப்பட வேண்டும்...!
நடக்குமா நாட்டில்... பார்ப்போம்...!
த.ம. 10
நல்லது நடக்கட்டும் ஐயா...
ReplyDeleteநல்ல, பயனுள்ள வேண்டுகோள். இவ்வேண்டுகோள் நல்ல பலனைத் தரும் என்று ந்ம்புவோம்.
ReplyDeleteஅருமையான வேண்டுகோள்கள்... நல்ல பலன் கிடைக்குமென நம்புவோம்...
ReplyDeleteமது விலக்கு வரும்;தங்கள் வேண்டுகோள் நிறைவேறும்
ReplyDelete