இறப்பும் பிறப்பும் இயற்கையின் நியதி-என்றே
எண்ணிடில் வாரா மரணமாம் பீதி!
உறங்கலும் விழித்தலும் போன்றதே என்றே –எடுத்தே
உரைத்தவர் வள்ளுவப் பெருந்தகை அன்றே!
சிறப்பினைக் கொண்டது மானிடப் பிறப்பே- எதையும்
சிந்தித்து செயல்படின் தேவையில் துறப்பே!
அறப்பணி ஆற்றுவீர் அன்பினைப் போற்றுவீர்-மக்கள்
அறிந்திட மனித நேயத்தைச் சாற்றுவீர்!
வாழ்வும் வீழ்வும் வருவதே நம்மால் –வாழ்வில்
வாரா அணுவும் மாற்றார் தம்மால்!
ஊழ்வினை எனினும் முயன்றால் போமென-எடுத்தே
உரைத்தவர் வள்ளுவப் பெருந்தகை ஆமென!
சூழ்வினை சூழ்ந்து சொல்வதை ஆய்ந்தே-எதையும்
சொல்வதும் செய்வதும் ஒன்றென வாழ்ந்தே!
தாழ்விலா இன்பம் தளிர்திடச் செய்வோம்-இந்த
தரணியில் மனித நேயத்தால் உய்வோம்!
புலவர் சா இராமாநுசம்
அருமை ஐயா அருமை
ReplyDeleteமனித நேயம் போற்றுவோம்
தம 1
மிக்க நன்றி!
Deleteமனிதம் போற்றுவோம்....அருமை ஐயா வரிகள்!
ReplyDeleteமிக்க நன்றி!
Deleteஅறப்பணி ஆற்றுவீர் அன்பினைப் போற்றுவீர்-மக்கள்
ReplyDeleteஅறிந்திட மனித நேயத்தைச் சாற்றுவீர்!
மிகச்சரியாக சொன்னீர்கள் ஐயா.
மிக்க நன்றி!
Delete"தாழ்விலா இன்பம் தளிர்திடச் செய்வோம்-இந்த
ReplyDeleteதரணியில் மனித நேயத்தால் உய்வோம்!" என்பதே
சிறந்த வழிகாட்டல்
http://www.ypvnpubs.com/
மிக்க நன்றி!
Deleteநிலையில்லா உலகில் நிரந்தரமாய் வாழ நல்ல வழிகாட்டி :)
ReplyDeleteமிக்க நன்றி!
Delete//மனித நேயத்தால் உய்வோம்//
ReplyDeleteஆம் ஐயா
மிக்க நன்றி!
Deleteமனிதம் வளர்ப்போம் அருமை ஐயா
ReplyDeleteதமிழ் மணம் 3
மிக்க நன்றி!
Deleteஅருமையான முத்தாய்ப்பு! வாழ்த்துக்கள்!
ReplyDeleteமிக்க நன்றி!
Deleteமனித நேயம் போற்றும் கவிதை சிறப்பு
ReplyDelete