பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய மூவரின் மரண தண்டனையை ரத்து செய்யக்கோரி கடந்த 2011ம் ஆண்டு தீக்குளித்து உயிர்நீத்த செங்காடியின் 4ம் ஆண்டு நினைவு தினம்! செங்கொடியின்
நினைவஞ்சலியாக அன்று நான் எழுதிய கவிதை
மீள்பதிவு!
பெண்ணே எரிந்து போனாயே-உயிர்
பிரிந்து எங்கே போனாயோ!
விண்ணே நீயும் சென்றாயா-ஓடி
வேலூர் சிறையில் நின்றாயா!
கண்ணீர் வற்ற அழுகின்றார்-மக்கள்
கதறி துயரில் விழுகின்றார்!
எண்ணீர் மத்தியில் ஆள்வோரே-இனியே
எத்தனை உயிர்கள் மாள்வாரே!
வஞ்சம் மட்டுமே உருவாக-மூவர்
வாழ்வைப் பறிக்கும் கருவாக!
நெஞ்சம் இரங்கா நிலைநன்றா-உயிரும்
நீங்கின் மீண்டும் வருமொன்றா!
தஞ்சம் அடைந்த பறவைக்கும்-தனது
தசையைத் தந்தவன் தமிழனடா!
பஞ்சில் நெருப்பைக் கொட்டாதீர்-தீயும்
பற்றி எரியும் திட்டாதீர்!
முடிவை ஆவர்கள் எடுக்கட்டும்-நாமே
முடங்கியா விடுவோம் ஆகட்டும்!
அடங்கி நடக்கும் தமிழனுக்கு-பிறரை
அடக்கவும் தெரியும் தமிழனுக்கு!
திடமாய் முடிவு எடுப்பாராம்-அவரே
தினமும் அறப்போர் தொடுப்பாராம்!
விடவே மாட்டோம் என்பாரா-வீணில்
விடத்தை அவரே தின்பாரா !
இனிமேல் உயிர்பலி வேணாவே-இன்று
இழந்தோம் செங்கொடி வீணாவே!
குனியோம் எவர்கும் குட்டகுட்ட-என்ன
கோழையா நாமே தரைமுட்ட!
கனிவாய்ச் சொல்லியும் பயனில்லை-உயிரைக்
காக்க தமிழரே உடன்ஒல்லை!
துணிவாய் தொடங்கும் அறப்போரே-மூவரின்
தூக்குக் கயிற்றை அறுப்பீரே!
பிரிந்து எங்கே போனாயோ!
விண்ணே நீயும் சென்றாயா-ஓடி
வேலூர் சிறையில் நின்றாயா!
கண்ணீர் வற்ற அழுகின்றார்-மக்கள்
கதறி துயரில் விழுகின்றார்!
எண்ணீர் மத்தியில் ஆள்வோரே-இனியே
எத்தனை உயிர்கள் மாள்வாரே!
வஞ்சம் மட்டுமே உருவாக-மூவர்
வாழ்வைப் பறிக்கும் கருவாக!
நெஞ்சம் இரங்கா நிலைநன்றா-உயிரும்
நீங்கின் மீண்டும் வருமொன்றா!
தஞ்சம் அடைந்த பறவைக்கும்-தனது
தசையைத் தந்தவன் தமிழனடா!
பஞ்சில் நெருப்பைக் கொட்டாதீர்-தீயும்
பற்றி எரியும் திட்டாதீர்!
முடிவை ஆவர்கள் எடுக்கட்டும்-நாமே
முடங்கியா விடுவோம் ஆகட்டும்!
அடங்கி நடக்கும் தமிழனுக்கு-பிறரை
அடக்கவும் தெரியும் தமிழனுக்கு!
திடமாய் முடிவு எடுப்பாராம்-அவரே
தினமும் அறப்போர் தொடுப்பாராம்!
விடவே மாட்டோம் என்பாரா-வீணில்
விடத்தை அவரே தின்பாரா !
இனிமேல் உயிர்பலி வேணாவே-இன்று
இழந்தோம் செங்கொடி வீணாவே!
குனியோம் எவர்கும் குட்டகுட்ட-என்ன
கோழையா நாமே தரைமுட்ட!
கனிவாய்ச் சொல்லியும் பயனில்லை-உயிரைக்
காக்க தமிழரே உடன்ஒல்லை!
துணிவாய் தொடங்கும் அறப்போரே-மூவரின்
தூக்குக் கயிற்றை அறுப்பீரே!
புலவர் சா இராமாநுசம்
அருமை ஐயா துயரத்தின் உச்சம்
ReplyDeleteதமிழ் மணம் 1
மீள் பதிவு என்றாலும் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி ஐயா...
ReplyDeleteநன்றி!
Deleteமீள் பதிவெனிலும் மனம் தொட்ட கவிதை ஐயா!
ReplyDeleteத ம. 3
நன்றி!
Deleteசெங்காடியின் 4ம் ஆண்டு நினைவு அஞ்சலி அருமை ...
ReplyDeleteசெங்கொடி என்று திருத்தம் செய்யுங்கள் அய்யா !
நன்றி!
Deleteமீள் பதிவு என்றாலும் நாங்கள் இப்போதுதான் வாசிக்கின்றோம்....மனம் தொட்ட வரிகள்!..
ReplyDeleteநன்றி!
Deleteநினைவை விட்டு அகலா துயரம். கவி வரிகளால் அணையாதொரு அஞ்சலி தீபம்.
ReplyDeleteஇனிமேல் உயிர்பலி வேணாவே-இன்று
ReplyDeleteஇழந்தோம் செங்கொடி வீணாவே!
செங்காடியின் 4ம் ஆண்டு நினைவு தினத்தை அறிய தந்ததற்கு நன்றி! அய்யா...