Wednesday, August 26, 2015

பாழாக இயற்கைதனைச் செய்தோம் வீணே-அதனால் பருவநிலை மாறியது நம்மால் தானே!


பாழாக இயற்கைதனைச் செய்தோம் வீணே-அதனால்
பருவநிலை மாறியது நம்மால் தானே!
வாழாது இவ்வுலகம் இப்படிப் போனால் –நமது
வருங்கா சந்ததிகள் நாசம் ஆனால்!
சூழாதோ பெரும்பழியும் நம்மை வந்தே-தீரா
சோதனைகள் பலவாறு துன்பம் தந்தே!
வீழாது காத்திட முயல வேண்டும்-இதுவே
வேள்வியென செய்வோமே நாளும் ஈண்டும்!


அன்னையவள் இயற்கைதனை வாழ வைப்போம்-மேலும்
அழிக்காமல் வளர்வதற்கு வழிகள் காண்போம்!
இன்னலெதும் இல்லாது இயற்கை யோடும்-என்றும்
இணைந்தேநாம் வாழ்ந்தாலே வாராக் கேடும்!
கன்னலென இனித்திடுமே மனித வாழ்வே-இதனைக்
கருதாமல் நடந்தாலே வருதல் வீழ்வே!
பொன்னதனைக் காப்பதுபோல் காக்க வேண்டும்-எழில்
பூத்திடவே காடுகளை ஆக்க மீண்டும்!

புலவர் சா இராமாநுசம்

24 comments:

  1. சிறப்பான கவிதை ஐயா! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  2. உறுதியாகக் கடைப்பிடிக்க வேண்டிய உறுதிமொழி.

    ReplyDelete
  3. இயற்கையை வாழவைக்காவிட்டால் நாம் வாழ்வைத் தொலைத்தவர்கள் ஆகிவிடுவோம். நல்ல கவிதை.

    ReplyDelete

  4. சிறந்த பகிர்வு

    புதிய வலைப்பூவில் இணைய வாருங்கள்
    இவ்வலைப்பூவில் நான் இதுவரை பேணிவந்த ஆறு வலைப்பூக்களை ஒன்றாக்கிப் பேணுகின்றேன்.
    http://www.ypvnpubs.com/

    ReplyDelete
  5. இனியெனும் இயற்கையோடு இணைந்து வாழ்வோம்
    தமிழ் மணம் 2

    ReplyDelete
  6. இயற்கையோடு ஒன்றி வாழ்ந்தால் நமக்கு நன்மையே....ஆனால் மனிதன் சுயநலத்தினால் செய்யும் பாழ் இயற்கைக்கு...சொல்ல மாளாது...உறுதியாக இருக்க வேண்டும் பேணுவதில்....

    ReplyDelete
  7. நல்லதொரு கருத்தை சொல்லிச்சென்ற விதம் சிறப்புங்க ஐயா.

    ReplyDelete
  8. நல்ல கருத்து!அருமை ஐயா

    ReplyDelete
  9. வணக்கம்
    ஐயா
    சொல்லிய கருத்து உண்மைதான் தான் ஐயா பகிர்வுக்கு வாழ்த்துக்கள்.
    த.ம 6
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  10. இன்று நாம் இயற்கையை வஞ்சித்தால் நாளை இயற்கை நம்மை வஞ்சிக்கும் !

    ReplyDelete
  11. ஒவ்வொருவரும் மனதில் ஆழப்பதிந்து கொள்ள வேண்டிய
    அருமையான கருத்தினைக் கவியாகத்தந்தீர்கள்.
    அருமை! வாழ்த்துக்கள் ஐயா!

    த ம+1

    ReplyDelete
  12. பொன்னதனைக் காப்பதுபோல் காக்க வேண்டும்-எழில்
    பூத்திடவே காடுகளை ஆக்க மீண்டும்!
    உண்மை ஐயா உண்மை
    நன்றி
    தம +1

    ReplyDelete
  13. அன்புள்ள அய்யா,

    இயற்கை யோடும்-என்றும்
    இணைந்தேநாம் வாழ்ந்தாலே வாராக் கேடும்!


    கேடுகள் நம்மைத் தீண்டாதிருக்க நல்ல பாட்டு வரிகள் யாத்துத் தந்தீர்!

    நன்றி.

    த.ம.11

    ReplyDelete
  14. அருமையாக சொன்னீர்கள் இந்த சமூகம் இதனை ஏற்றுக் கொள்ள வேண்டும் ஐயா !

    ReplyDelete