Monday, August 24, 2015

நிலைத்தது அண்ணா நுலகம்-உவகை நிறைந்திட மக்கள் அகம்!



நிலைத்தது அண்ணா நுலகம்-உவகை
நிறைந்திட மக்கள் அகம்!
அளித்தது நீதி மன்றம்- மேலும்
அழியாது காக்க என்றும்!
களித்திட ஆணை தந்தார்-நாளும்
காத்திட, படிக்க வந்தார்!
ஒளிதிகழ் வசதி பலவும்-அரசு
உடனடி செய்ய என்றார்!


நீதியும் வெல்லு மென்றே-காலம்
நீண்டாலும் காட்ட நன்றே!
சேதியாம் தீர்ப்பு ஒன்றே –எடுத்து
செப்பிட நாளும் இன்றே!
ஓதினார் நீதி பதிகள்- அன்னார்
உரைதானே சட்ட விதிகள்!
மேதினி போற்றும்! வாழ்க!-
மேன்மேலும் வளமை சூழ்க!

புலவர் சா இராமாநுசம்

18 comments:

  1. //நீதியும் வெல்லு மென்றே-காலம்
    நீண்டாலும் காட்ட நன்றே!
    சேதியாம் தீர்ப்பு ஒன்றே –எடுத்து
    செப்பிட நாளும் இன்றே!//
    நான் ரசித்த வரிகள்.
    த ம 1

    ReplyDelete
  2. நல்ல வரிகள் ஐயா நலம்தானே...?
    தமிழ் மணம் 2

    ReplyDelete
  3. அண்ணா நூலகம் நிலைத்தது என அறிந்து மகிழ்ச்சியுடன் கவி பாடிய தங்களோடு நானும் எனது மகிழ்ச்சியை பகிர்ந்துகொள்கின்றேன்.

    ReplyDelete
  4. அண்ணா நுலகத்தை சிதைக்கும் கூட்டமும் ஒய்ந்தவிடவில்லையே அய்யா...

    ReplyDelete
  5. பல தீர்ப்புகள் காற்றில் விடப் படுகின்றன ,தொடர் கண்காணிப்பு தேவை !

    ReplyDelete
  6. நல்லதொரு பகிர்வுங்க ஐயா.

    ReplyDelete
  7. மகிழ்ச்சி தரும் செய்தி.

    ReplyDelete
  8. ஆணை அரங்கேறும் நாளை எதிர்பார்ப்போம். நல்லதொரு பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  9. அனைவரும் மகிழும் செய்தி,நன்று சொன்னீர்கள் நீங்கள்

    ReplyDelete
  10. உச்ச நீதிமன்றம் அப்பீல் ஏற்க முடியும். அதிக மகிழ்ச்சி வேண்டாம்.

    ReplyDelete
  11. மகிழ்ச்சி ஐயா மகிழ்ச்சி
    தம +1

    ReplyDelete
  12. அன்புள்ள அய்யா,

    உலக அதிசயமாகத் திகழும் அண்ணா நூலகம்...சிறப்புடன் திகழ நீதி வழங்கியதை தங்களின் உணர்ச்சி மிகுந்த உவகை கண்டு வியந்து மகிழ்ந்தேன்.

    நூலின் மீது... நூலகத்தின் மீது தங்களின் காதல் வெளிப்பட்டது.

    -மிக்க நன்றி.
    த.ம. 12

    ReplyDelete
  13. மனம் தொட்ட பாடல் மகிழ்வு தரும் கருத்து அருமை !
    வணங்குகின்றேன் ஐயா -

    ReplyDelete