திருப்பதிக்கு போனநான் நாராயணா –வணங்கி
திரும்பி வந்தேன் உடல்நொந்து நாராயணா!
நெருக்கடியில் சிக்கிவிட்டேன் நாராயணா =பெரும்
நீள்வரிசை தள்ளுமுள்ளு நாராயணா!
உருப்படியாய் சேதமின்றி நாராயணா-மீள
உன்னருளே காரணமாம் நாராயணா!
திருப்படிகள பலகடந்து நாராயணா-உன்னை
தேடிவந்து காண்கின்றார் நாராயணா!
பாத்தயிடம் எல்லாமே நாராயணா-கண்ணில்
பக்தர்களே தென்பட்டார் நாராயணா!
மூத்தவர்க்கு தனிவரிசை நாராயணா-ஆனால்
முறையாக நடக்கவில்லை நாராயணா!
காத்திருக்கும் மக்களவர் நாராயணா- எங்கும்
கணக்கிடவே இயலாது நாராயணா!
நாத்தழும்பு ஏறிவிட நாராயணா-உந்தன்
நாமந்தான் ஒலிக்கிறது நாராயணா!
புலவர் சா இராமாநுசம்
இதற்கு அஞ்சியே நான் திருப்பதி செல்வதில்லை! 2002 இல் சென்றது. ஆனால் அதிகாலைச் சேவைக்கு ஆன்லைனில் பதிவு செய்து, சரியான நேரத்துக்குச் சென்றால் தாமதமின்றிப் பார்க்கலாம் என்றார்களே...
ReplyDeleteநன்றி!
Deleteத ம இன்னும் சப்மிட் செய்யவில்லையா?
ReplyDeletevoted! +1
ReplyDeleteநன்றி!
Deleteகாசு உள்ளவரிடமே நாராயணா ..நீ குளோசப்பில் காட்சி தருகிறாய் நாராயணா ,என்ன கொடுமை இது நாராயணா :)
ReplyDeleteகூட்ட நெரிசலில் தங்களைப்போன்றவர்கள் சிக்குவது நினைக்கவே அச்சமாகத்தான் இருந்தது. கவனமாக இருங்கள் ஐயா.
ReplyDeleteகூட்ட நெரிசலில் தங்களைப்போன்றவர்கள் சிக்குவது நினைக்கவே அச்சமாகத்தான் இருந்தது. கவனமாக இருங்கள் ஐயா.
ReplyDeleteநன்றி!
Deleteநான் கூட ஆகஸ்ட் 3 ஆம் நாள் முன் பதிவு செய்து திருப்பதி சென்று வந்தேன். நல்ல வேளையாக அன்று அவ்வளவு கூட்டமில்லை. ஆனாலும் வெகு தொலைவில் இருந்தே பெருமாளை சேவிக்க முடிந்தது. அதற்குள் கழுத்தில் கையை வைத்து வெளியேற்றிவிட்டார்கள். இதைப் பார்க்கும்போது ஏன் போனோம் என்றே நினைக்கத் தோன்றுகிறது.
ReplyDeleteவணக்கம் ஐயா!
ReplyDeleteஅடடா..! திருப்பதியானத் தரிசித்து வந்தீர்களா?
தரிசனத்துடன் நெரிசனத்தால் நொந்துபோனீர்களோ?
எல்லாம் அவனே நிகழ்துகிறான்.
அருமையான பா படைத்தீர்கள் ஐயா!
வாழ்த்துக்கள்!
த ம +
நன்றி!
Deleteநாராயணனுக்கு பாமைலை அருமை ஐயா
ReplyDeleteதமிழ் மணம் 6
நன்றி!
Deleteகாசிக்குச் சென்றபோது சற்றொப்ப இதே அனுபவம் எங்களுக்கு. கூட்ட நெரிசல், போலீஸ் கெடுபிடி, குறுக்கே நுழைவோர், அதிக கட்டுப்பாடு. காசி விசுவநாதரைப் பார்த்தோமா இல்லையா என்ற குழப்பமே வந்துவிட்டது எங்களுக்கு.
ReplyDeleteஆன்மீகத் தலங்கள் எல்லாம்
ReplyDeleteவணிகத் தலங்களாக மாறிவிட்டன ஐயா
தம +1
நன்றி!
Deleteதிருப்பதியில் கூட்டம் இல்லாத நாட்கள் குறைவுதான்! இதனால்தான் நான் பதினைந்து ஆண்டுகளாக அவரை பார்க்காமல் இருக்கிறேன்!
ReplyDeleteதரிசிக்கப்போய் நெரிசலில் நொந்துபோய்விட்டீர்கள் ஐயா.
ReplyDeleteநன்றி!
Deleteஅன்புள்ள அய்யா,
ReplyDeleteஉருப்படியாய் சேதமின்றி நாராயணா-மீள
உன்னருளே காரணமாம் நாராயணா!
ஓம் நமோ நாராயணா... நல்லபடி...படிப்படியாய்... படிக்கவைத்தீர்!
நன்றி.
த.ம.11
நாராயணனுக்கு அழகிய கவிவரிகளினால் நிகழ்வுகளை சுட்டிக்காட்டிய விதம் அழகு ஐயா!
ReplyDelete