Thursday, July 9, 2015

எங்கள் வீட்டின் முன்னாலே –பிறர் எறியும் குப்பைத் தன்னாலே


எங்கள் வீட்டின் முன்னாலே –பிறர்
எறியும் குப்பைத் தன்னாலே
அங்குமிங்கும் சிதறி விடும்- மேலும்
அதனால் தெருவே மாசுபடும்
தங்கும் குப்பையோ மலையாகும்- நாளும்
தவறாது எடுப்பதோ இலையாகும்
பொங்கும் நாற்றம் மேயரய்யா – உடன்
போக்குவீர் குறையை வணக்கமய்யா


புலவர் சா இராமாநுசம்

16 comments:

  1. மேயரய்யா
    தூங்கும் வரை இதே கதி தான்
    நம்ம
    யாழ்ப்பாணத்திலும் இதே நிலை தான்

    ReplyDelete
  2. தொட்டி இருந்தாலும் பலர் அதில் போடுவதும் இல்லை ஐயா ...

    ReplyDelete
  3. துப்புரவு சீராக சீர்மிகு கவி!
    ஒப்புறவுத் தேனாக நற் புவி!
    நலமாக நவின்றீர் புலவரய்யா!
    (ஆரோக்கியமே அருமருந்து)
    த ம 3
    நட்புடன்,
    புதுவை வேலு

    ReplyDelete
  4. வீட்டின் முன் குப்பை தொட்டியென்றால் அது தீராத தொல்லைதான். என்னதான் சுத்தம் செய்தாலும் நாற்றம் இருந்து கொண்டே இருக்கும். எங்கள் அலுவலகம் போகும் வழியில் இருக்கும் குப்பை தொட்டிகளை கடக்க பிரணயாமம் தெரிந்திருக்க வேண்டும்.
    த ம 4

    ReplyDelete
  5. "பா"வில், வேண்டுகோளும் விழிப்புணர்வும் ஏற்படுத்தும் வரிகள்..

    ReplyDelete
  6. இதே கதைதான் எங்கள் வீட்டு எதிரிலும் தினம் தினம் நடக்கிறது ஐயா

    ReplyDelete
  7. எல்லா ஊரிலும் இந்த நிலைதான் ஐயா... மேயரெல்லாம் தேர்தலின் போது மட்டும்தான் வருவார்கள்.

    ReplyDelete
  8. எங்கும் இருக்கும் நிலை இதுவே...

    ReplyDelete
  9. குப்பைகளை தொட்டியில் போடுவதில்லை பலரும்! வருத்தமான விஷயம்! குறை நீங்கட்டும் விரைவில்!

    ReplyDelete