Thursday, July 30, 2015

உலகம் போற்றும் மாமேதை –இன்றவர் உடலை அடக்கம் செய்கின்றார்!


உலகம் போற்றும் மாமேதை –இன்றவர்
உடலை அடக்கம் செய்கின்றார்!
திலகம் இந்திய நாட்டுக்கவர் –மக்கள்
தேம்பியே கண்ணீர் பெய்கின்றர்!
கலமாம் அப்துல் பெயரென்றும்-காலக்
கல்லில் பொறித்த நிலைநின்றும்!
வலமாய் வருவார் உலகெங்கும்-அவரால்
வளர்ந்த அறிவியல் வளம்பொங்கும்!


தோல்விக்குத் தோல்வி தந்துடுவீர்-எந்த
துறையிலும் வென்றே வந்திடுவீர்!
பால்நிற மனமே கொண்டவராம் –காலாம்
பாரத இரத்தினா விண்டவராம்!
ஆலெனப் விரிந்திட அறிவியலை-நாட்டில்
அணுவினை ஆய்ந்து பொறியியலை!
நூல்பல கற்றே உரைத்தாரே-மதிமிகு
நுட்பத்தில் அக்கினி படைத்தாரே!

மாணவ ரோடு மாணவராய்—நாளும்
மகிழ்வாய் கலந்து தானவராய்!
காணவே வாழ்ந்தார் இறுதிவரை-பாவி
காலனால் முடிந்தது! இறுதியுரை!
பதவிக்கிப் பெருமை இவராலே—மனிதப்
பண்புக்கு பெருமை இவராலே!
உதவிக்கு அழைத்ததோ விண்ணுலகே-வாழும்
உத்தம மறவா மண்ணுலகே!

புலவர் சா இராமாநுசம்

18 comments:

  1. அவரை இதுவரை சந்தித்திராத மாணவ மணிகள் கூட கண்ணீரை அடக்க முடியாமல் மெழுகுவர்த்தியுடன் அஞ்சலி செய்வதைப் பார்க்கும்போது கண்கள் கலங்குகின்றன. காலத்தை வென்று விட்டார் கலாம்.

    ReplyDelete
  2. // தோல்விக்குத் தோல்வி தந்துடுவீர் // அவருக்கு மிகவும் பிடித்த குறளும் (623) இது தான் ஐயா...

    ReplyDelete
  3. இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்.
    இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும் என்ற வரிகளுக்கு தன் உயிர் தந்து உயிர் தந்தவர்.

    ReplyDelete
  4. டாக்டர் அப்துல் கலாம் அவர்களின் கனவினை மெய்ப்பட செய்வோம்.
    நன்றி புலவர் அய்யா!
    த ம 3
    நட்புடன்,
    புதுவை வேலு

    ReplyDelete
  5. அவருக்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலி அவர் கூறியனவற்றை கடைபிடிக்க முயற்சிக்கவேண்டும் என்பதே. ஒரு முன்னுதாரண மனிதர் இன்று நம்மிடையே இல்லை.

    ReplyDelete
  6. காலத்தை வென்று நிற்கும் அவர் பெயர்.....

    த.ம. 6

    ReplyDelete
  7. கலாம் அவர்களின் நற்பண்புகளை சுட்டி,
    கவிதையில் நல் அஞ்சலி செய்தீர்கள் அவருக்கு!
    மிக நன்று!

    ReplyDelete
  8. அன்புள்ள அய்யா,

    கலாமுக்கு கண்ணீர் கவிதாஞ்சலி...!
    சலாம்...!- என்றும்
    உலா வரும் உன் உழைப்பும்... கனவும்...
    நனவாகும் நாள் வரும் விரைவில்
    இந்திய இளைஞர்களால்...!

    நன்றி
    த.ம.8.

    ReplyDelete
  9. மனம் ஒப்பி கடைகள் யாவும் அடைத்தார்கள் என்றால் இவருக்காக மட்டுமே ,மக்கள் மனதில் நிறைந்து விட்டார் மாமேதை !

    ReplyDelete