தீண்டாமை இழிசொல்லாம்! இன்னும் நாட்டில்-எரியும்
தீயாக இருப்பதனை கண்டோம் ஏட்டில்
வேண்டாமைஅதுவென்றே காந்தி, பெரியார்-மிக
வீறுகொண்டு எதிர்த்திட்ட பெருமைக் குரியார்
பூண்டோடு ஒழிந்ததெனப் பெருமைப் பட்டோம்-அது
போகவில்லை!அறிந்தோமே! சிறுமைப் பட்டோம்
மாண்டானே,கோகில்ராஜ் ! சாதி! வெறியில்-அந்தோ
மாறாதா!? இந்நிலையே! நீதி! நெறியில்!
ஆதிக்க மனப்பான்மை ஒழிய வில்லை-நாட்டில்
ஆங்காங்கே தோன்றினால் வருமே தொல்லை
நீதிக்கே புறம்பாக நடத்தல் நன்றா-பேதம்
நீக்குவோம் ஒற்றுமை காணும் ஒன்றாய்
சாதிக்கு இனியிங்கே இடமே இல்லை-நம்முள்
சமத்துவம் மலர்ந்திட வேண்டும் ஒல்லை
போதிக்க இனியாரும் தோன்ற மாட்டார்-சாதிப்
போராட்டம் வளர்க்கவும் ஆர்வம் காட்டார்
ஒன்றேதான் குலமென்றார் தேவன் என்றார்-என்றே
உரைத்திட்ட அறிஞரும் விண்ணே சென்றார்
நன்றேதான் அதுவென்றே ஏற்றுக் கொண்டோம்-நமே
நாடெங்கும் கொள்கையாய் பரப்பி விண்டோம்
இன்றேதான் தெரிகிறது தொற்று நோயே-சாதி
இழிவின்னும் அழியாத நச்சுப் பேயே
என்றேதான் ஒழியுமோ? இந்தக் கொடுமை!-நெஞ்சம்
ஏங்கிட நீங்குமா சாதி மடமை!
புலவர் சா இராமாநுசம்
வேதனையான நிகழ்வு.
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!
Deleteசாதி அரசியல் நடக்கும் வரை சாதி எங்ஙனம் ஒழியும்?
ReplyDeleteT.M 3
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
Deleteவணக்கம்
ReplyDeleteஐயா
இப்படியான நச்சு வேர்களை வளர விடமால் பிடிங்கி எறிவது நல்லது.. அருமையாக சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்.த.ம4
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
Deleteநம்ம ஊர்ல அரசியலே சாதி சார்ந்ததாக இருக்கும் போது சாதி எப்படி ஒழியும்? அருமையான வரிகள்!
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
Deleteசாதி தீராத நோய்...
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
Deleteஜாதிவெறியைப் பற்றி நன்றாகவே சொன்னீர்கள். மானிடவியல் ஆய்வுப்படி எல்லோரும் ஒரு ஆப்பிரிக்கத் தாயின் ’ஜீன்’ (GENE – மரபணு ) வழி வந்தவர்களே. இதனை அறியாமல் ஒரு ஜாதி என்று சொல்லிக் கொண்டு, இன்னொரு ஜாதியினரை இழிவு படுத்துவது, கொலை செய்வது என்பது காட்டுமிராண்டித்தனம் ஆகும். இதனால் அந்த கொலைகாரர்களுக்கு என்ன லாபம் கிடைக்கப் போகிறது?
ReplyDeleteத.ம.6
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
Delete"ஆதிக்க மனப்பான்மை ஒழிய வில்லை-நாட்டில்
ReplyDeleteஆங்காங்கே தோன்றினால் வருமே தொல்லை" என்கிறீர்
ஆமாங்க,,, ஆட்சிகள் மாறினாலும்
தொல்லைகள் நீங்க வில்லையே!
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
Deleteபோலியோ நோய் அறவே ஒழிக்கப் பட்டது போல் இந்த ஜாதி நோயையும் தீவிரம் காட்டி ஒழிக்க வேண்டும் !
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
Deleteசற்றுச் சிரமம்தான். இருந்தாலும் தொடர் முயற்சி வெற்றி தர வாய்ப்புண்டு.
ReplyDeleteஎன்றேதான் ஒழியுமோ? இந்தக் கொடுமை!-நெஞ்சம்
ReplyDeleteஏங்கிட நீங்குமா சாதி மடமை! த.ம10
என்று தணியும் இந்த சாபம்?
ReplyDeleteநன்றி ஐயா.
சாதி அரசியல் இருக்கும் வரை சாதியும் இருக்கும்....
ReplyDeleteஎன்று முடியும் இந்த அவலம்.