அந்தோ மறைந்தார் அப்துல் கலாமே
நொந்தார் அனைவரும் நோகார் இலமே!
இந்திய நாட்டின் தலைமகன் ஆனார்
சிந்தனைச் சிற்பியேன் செப்பாது போனார்!
கனவும் மெய்படக் காணாது ஏக
நினவாய் என்றும் நிலையென ஆக!
மனமெனும் திரையில் மறையா ஓவியம்
இனமது தமிழரின் இதய காவியம்!
வாழ்கநீர் கால வரலாற்றில் ஒன்றென
சூழ்கவே உம்புகழ் சுடர்தரும் கதிரென!
ஆழ்கஉம் அறிவியல் அலைமிகு கடலென
மூழ்கிடாக் கலமே அப்துல் கலாமே!
புலவர் சா இராமாநுசம்
அவர் ஆத்மா சாந்தி அடைய வேண்டுவோம்...
ReplyDeleteகுற்றால நீர்வீழ்ச்சி குமுறி அழுகிறது
ReplyDeleteவற்றாத கடலலை ஓங்கி எழுகிறது
சுற்றி வரும் விண்கலம் பற்றி எரிகிறது
தேற்றும் தேன் தமிழ் தேம்பி அழுகிறது!
டாக்டர் அப்துல் கலாம் அவர்களுக்கு தாங்கள் செலுத்திய அஞ்சலியில் நாங்களும் பங்கேற்கின்றோம்! அய்யா!*
த ம 1
நட்புடன்,
புதுவை வேலு
சிறப்பான கவிதாஞ்சலி . அருமை ஐயா
ReplyDeleteநன்றி!
Deleteஆழ்ந்த இரங்கல்கள்...
ReplyDeleteநன்றி!
Deleteகவிதாஞ்சலி மூலம் கலாம் ஐயாவுக்கு
ReplyDeleteஅஞ்சலி செலுத்தினீர்கள் ஐயா!
எனது ஆழ்ந்த இரங்கல்களும்!
அருமையான கவிதையஞ்சலி. உங்களுடன் நாங்களும் சேர்ந்து அஞ்சலி செலுத்துகின்றோம்.
ReplyDeleteகவிதாஞ்சலி அருமை ஐயா
ReplyDeleteஎங்களது அஞ்சலியினையும் இணைத்துக் கொள்ளுங்கள்
தம+1
இராமேஸ்வரத்தின் தவப் புதல்வனை 'மூழ்கிடாக் கலமே' என்றது நல்ல பொருத்தமே :(
ReplyDeleteடாக்டர் அப்துல் கலாம் அவர்களின் ஆன்மா சாந்தியடையட்டும்!
ReplyDeleteகனவும் மெய்படக் காணாது ஏக
நினவாய் என்றும் நிலையென ஆக!
அறிஞர் அப்துல்கலாமிற்கு; நாம் என்ன செய்யப் போகிறோம்?
http://eluththugal.blogspot.com/2015/07/blog-post_28.html
அருமையான கவிதை அஞ்சலி அய்யா!
ReplyDeleteத ம 9
அப்துல் கலாம் அவர்களின் ஆன்மா
ReplyDeleteசாந்தி பெற பிரார்த்திப்போம் .