நடவாது முடங்கிட நாடாளும் மன்றம்- இப்படி,
நடந்திட வழிகாட்டி ! பா .ஜ .கா அன்றும்!
கோடான கோடிபணம் வீண்செலவு ஆக –அந்த
கொடுமையே இன்றிங்கே தொடராகிப் போக!
ஓடாகி ஏழைகளே தருகின்ற வரியும்- நாளும்
உதவாது பாழானால் வயிறன்றோ எரியும்!
வாடாது வசதியாய் வாழ்கின்ற இவர்கள்—மக்கள்
வாழ்வோடு விளையாடும் குட்டிச் சுவர்கள் !
கூடியே கலைதற்கா கொடுத்தாராம் ஓட்டே –உள்ளம்
குமுறித்தான் அழுகின்றார் மக்களும் கேட்டே!
தேடியே வந்தீர்கள் தெருவெங்கும் அன்றே –ஏனோ
தினந்தோறும் அவைதன்னில் சண்டையா நன்றே!
நாடியே நல்லதைச் செய்திட வேண்டும் –மேலும்
நாடளும் மன்றத்தை நடத்திட ஈண்டும்!
( மாண்பு மிகு பிரதமர்)
மோடியே முன்னின்று முயன்றிடல் நன்றாம் –நாடு
முன்னேற செய்வதில் முக்கிய ஒன்றாம்!
நடக்குமா???
புலவர் சா இராமாநுசம்
அரசியல்வாதிகள் அல்ல இவர்கள்! அராஜகவாதிகள்.
ReplyDeleteநன்றி!
DeleteTalai''vhidhi.
ReplyDeleteநன்றி!
Deleteமுன்னேற முக்கியத்தேவை இதுவே, இப்பொழுதே.
ReplyDeleteமுன்னேற்றம் நடந்தால் நன்மையே... நடக்க வேண்டும்...
ReplyDeleteநன்றி!
Deleteஇது போன்றவர்களை நாடாளுமன்றம் அனுப்பி வைத்தது நம் தவறு! இனி மாற்றி யோசிப்போம்!
ReplyDeleteநன்றி!
Deleteஎவர் வந்தாலும் இப்படி சண்டை போடுவது தவிர வேறொன்றும் செய்வதில்லை.... :(
ReplyDeleteநன்றி!
Deleteயாருக்குத்தான் அக்கறை இருக்கு ,இரண்டு கட்சியும் ஒண்ணுதான் !
ReplyDeleteநன்றி!
Deleteவணக்கம்
ReplyDeleteஐயா
இரமன் ஆண்டளும் இரவணன் ஆண்டளும் ஆட்சியில் நல்லது நடந்தால் சரி ஐயா.த.ம 5
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்
நன்றி!
Deleteயார் ஆண்டாலும் நமக்கு நன்மை கிடைக்கும் என்பது குதிரைக் கொம்புதான்... அருமையான கவிதை ஐயா..
ReplyDeleteநன்றி!
Deleteஆதங்கம் புரிகிறது என்ன செய்யமுடியும் ஐயா !அருமையான கவிதை !
ReplyDeleteநன்றி!
Delete"மோடியே முன்னின்று முயன்றிடல் நன்றாம் –நாடு
ReplyDeleteமுன்னேற செய்வதில் முக்கிய ஒன்றாம்!
நடக்குமா???" என்ற கேள்விக்கு
மோடி ஐயா பதில் தரவேண்டும்!
‘ஊற்று’ இற்கு உச்சரிப்பு ‘OOTRU’ சரியா?
கீழ்வரும் இணைப்பைச் சொடுக்கிப் பதிலளிக்கலாம்.
https://ial2.wordpress.com/2015/07/25/70/
நன்றி!
Delete