Friday, July 24, 2015

குடிநீரைத் தருகின்ற ஏரியைக் கூட-மண்ணை கொட்டியதை மேடாக்கி மனையாய்ப் போட!



குடிநீரைத் தருகின்ற ஏரியைக் கூட-மண்ணை
கொட்டியதை மேடாக்கி மனையாய்ப் போட!
இடியாக ஒருசெய்தி ஏடுகளில் வருதே-மக்கள்
இதயத்தில் தாங்காத துயரத்தைத் தருதே!
விடியாத இரவாக இச்செயலும் போமோ -அரசு
விரைவாக செயல்பட்டு தடுக்காமல் ஆமோ!
கடிவாளம் இல்லாத குதிரையென திரியும்- அடங்கா
கயவர்களை தண்டித்தால் மற்றவர்க்குப் புரியும்!


இருக்கின்ற ஏரிகளும் இவ்வாறு ஆனால்-நாளை
எதிர்காலம் என்னாகும் எண்ணாது போனால்!
வெறுக்கின்ற நிலைதானே முடிவாக ஆகும்-பெற்ற
வேதனையில் எல்லாமே தலைகீழாய்ப் போகும்!
பொறுக்கின்றார் மக்களெனல்! தவறான எண்ணம் !-பாடம்,
போதிப்பர்! ஒன்றாகி! மறவாதீர் திண்ணம்!
சறுக்காது துணிவோடு செயல்படவே வேண்டும்-நல்ல
சந்தர்பம் இதுவாகும் வந்திடவே மீண்டும்!

புலவர் சா இராமாநுசம்

23 comments:

  1. நாளைய எதிர்காலத்தை எண்ணி விரைவில் செயல்பட வேண்டும் ஐயா...

    ReplyDelete
  2. வருத்தமளிக்கும் செய்தி
    அரசின் அலட்சியம் மாறுமா ?

    ReplyDelete
  3. வருத்தமான விஷயத்தை நல்ல கவிதை ஆக்கியிருக்கிறீர்கள் ஐயா....

    ReplyDelete
  4. எதிர்காலம் மண்ணாய் போவதற்குத்தான் .. மண்ணை கொட்டுகிறார்கள் அய்யா......

    ReplyDelete
  5. ஆதங்கத்தின் வெளிப்பாடு வரிகளில் கண்டோம் ஐயா.

    ReplyDelete
  6. எதிர்காலத்தை எண்ணாது செய்தவர்கள் யோசிக்க வேண்டும்! அருமை!

    ReplyDelete
  7. ”கடல்நீரைத்தவிர வேறு நீரில்லை எனும் நிலை வரலாம்!அப்போது,கோல்ரிட்ஜ் சொன்னது போல்”தண்ணீர்,தண்ணீர்,எங்கும் தண்ணீர்;குடிப்பதற்கு ஒரு சொட்டு இல்லை” தான்!

    ReplyDelete
  8. ஏரியெல்லாம் மேடானால்
    நம் வாழ்வு மண்ணாகுமே
    தம +1

    ReplyDelete
  9. பல ஏரிகளும், குளங்களும் இவ்வாறுதான் ஆகிக்கொண்டிருக்கின்றன, அரசியல்வாதிகளாலும், சுயநலமிகளாலும். விளைவினை எவ்வாறு எதிர்கொள்ளப்போகின்றோமோ?

    ReplyDelete
  10. தண்ணீர் இருந்த இடத்தை மனையாக்கி,வீடு கட்டி குடி புகுந்தால் தண்ணீருக்கே அலையத்தான் வேண்டியிருக்கும் :)

    ReplyDelete